Ulagame Nee Manithanai

2002
Lyrics
Language: English

………………….

Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo

Sindhum ratha kodugalae
Indha naattin varaipadamaa
Rana maagudhada manam noguthada
Idhu thaan sariya muraiyaa

Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo

Inimel dharmam nyaayam urangaadhu
Imayam bayanthu kuliril nadungathu
Thalaigal nimira thadaigal ingu yedhu
Vidiyal vedikkum vizhippu varum bothu

Edharkkum thunindha idhayam sengolaagum
Manadhil idigal muzhanga malai thoolaagum
Varum vanja vanmurai narambugalai
Aruthu odukkuvom
Inimel dharmam nyaayam urangaadhu

Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo

Kodumaigal seidhavar kodumaiyil baliyaavaar
Kadamaiyai seibavar kadavulin mozhiyaavaar
Adippavar vayittrinnil adippavan ini varuvaan
Thudippavar thuyarinai thudaithida thunintheluvaan

Mugathinilae araindhavarin
Karam pidithae muthamvei
Marubadiyum arai vizhundhaal
Adhai edhirthae yutham sei

Nee paarkkira paarvaiyilae
Varum sodhanai bayapadumae
Vellai malligaipoo sigapaagidumoo
Both : Manidham valarppom manidhaa

Sindhum ratha kodugalae
Indha naatin varaipadamoo
Ranamaagudhada manam noguthada
Idhu thaan sariya muraiya


Language: Tamil

இளையராஜா

ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்
ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்

உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ..
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ

சிந்தும் ரத்தக் கோடுகளே
இந்த நாட்டின் வரைபடமா
ரணமாகுதடா மனம் நோகுதடா
இதுதான் சரியா முறையா

உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ.....

இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது
இமயம் பயந்து குளிரில் நடுங்காது
தலைகள் நிமிர தடைகள் இங்கு ஏது
விடியல் வெடிக்கும் விழிப்பு வரும்போது

எதற்கும் துணிந்த இதயம் செங்கோலாகும்
மனதில் இடிகள் முழங்க மலை தூளாகும்
வரும் அஞ்சும் வன்முறை நரம்புகளை
அறுத்து ஒடுக்குவோம்
இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது

உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ.....

கொடுமைகள் செய்தவர் கொடுமையில் பலியாவார்
கடமையை செய்பவர் கடவுளின் மொழியாவார்
அடிப்பவர் வயிற்றினில் அடிப்பவன் இனி வருவான்
துடிப்பவர் துயரினை துடைத்திட துணிந்தெழுவான்

முகத்தினிலே அறைந்தவரின்
கரம் பிடித்தே முத்தம் வை
மறுபடியும் அறை விழுந்தால்
அதை எதிர்த்தே யுத்தம் செய்

நீ பார்க்கிற பார்வையிலே
வரும் சோதனை பயப்படுமே
வெள்ளை மல்லிகைப்பூ சிகப்பாகிடுமோ
இருவர் : மனிதம் வளர்ப்போம் மனிதா

உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ.....

சிந்தும் ரத்தக் கோடுகளே
இந்த நாட்டின் வரைபடமா
ரணமாகுதடா மனம் நோகுதடா
இதுதான் சரியா முறையா

உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ....
ம்ம்ம்ம்.....ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..(2)


Movie/Album name: Ivan

Artists