Naaval Pazhame Naan

1989
Lyrics
Language: English

Naaval pazhamae
Naan posum santhanamae
Poovae ponnae enna solli koopiduven
Maadi veetula maadhulam poo poothirukku
Maadi veetula maadhulam poo poothirukku
Yaeni illama yenguthadi en manasu

Naaval pazhamae
Naan posum santhanamae
Poovae ponnae enna solli koopiduvae
Maadi veetula maadhulam poo poothirunthaa
Maadi veetula maadhulam poo poothirunthaa
Yaeni naan irukka yenguvadho un manasu

Naaval pazhamae
Naan posum santhanamae
Poovae ponnae enna solli koopiduven

…………………..

Kalathu maettula sola kaatula
Valarntha nyabagam payiraachu
Female : Paruthi kaatula paruva kaathula
Paadha rendumae onnaachu

Paartha paarvai padhiyam podudhu
Female : Vertha verva nadhiya ooduthu
Male : Konji pesum vanji unna
Kodi theduthu

Naaval pazhamae
Naan posum santhanamae
Male : Poovae ponnae enna solli koopiduvaen

Karumbhu thottamae
Thirumbhi paarkumaa
Erumbhaa maari naan varalaama
Female : Adadaa akkara naanum sokkara
Alli aasaiyaa thaaraalama

Amma odambhu edhukku koosudhu
Female : Thotta yedho sugam thaan kaanudhu
Male : Indha inbam endha naalum ariyaadhadhu

Naaval pazhamae
Naan posum santhanamae
Poovae ponnae enna solli koopiduvae
Male : Maadi veetula maadhulam poo poothirukku
Maadi veetula maadhulam poo poothirukku
Female : Yaeni naan irukka yenguvadhoo en manasu

Laalallaa Female : Ahaa ahaa ahaa
Both : Lalalalalala


Language: Tamil

சந்திரபோஸ்

நாவல் பழமே நான் பூசும் சந்தனமே
பூவே பொன்னே என்ன சொல்லி கூப்பிடுவேன்
மாடி வீட்டுல மாதுளம் பூ பூத்திருக்கு
மாடி வீட்டுல மாதுளம் பூ பூத்திருக்கு
ஏணி இல்லாம ஏங்குதடி என் மனசு

நாவல் பழமே நான் பூசும் சந்தனமே
பூவே பொன்னே என்ன சொல்லி கூப்பிடுவே
மாடி வீட்டுல மாதுளம் பூ பூத்திருந்தா
மாடி வீட்டுல மாதுளம் பூ பூத்திருந்தா
ஏணி நான் இருக்க ஏங்குவதோ உன் மனசு

நாவல் பழமே நான் பூசும் சந்தனமே
பூவே பொன்னே என்ன சொல்லி கூப்பிடுவேன்..

களத்து மேட்டுல சோளக் காட்டுல
வளர்ந்த ஞாபகம் பயிராச்சு
பெண் : பருத்திக் காட்டுல பருவக் காத்துல
பாத ரெண்டுமே ஒண்ணாச்சு

பார்த்த பார்வை பதியம் போடுது
பெண் : வேர்த்த வேர்வ நதியா ஓடுது
ஆண் : கொஞ்சிப் பேசும் வஞ்சி உன்னை
கொடி தேடுது

நாவல் பழமே நான் பூசும் சந்தனமே
ஆண் : பூவே பொன்னே என்ன சொல்லி கூப்பிடுவேன்

கரும்பு தோட்டமே திரும்பி பாக்குமா
எறும்பா மாறி நான் வரலாமா
பெண் : அடடா அக்கர நாமும் சொக்கர
அள்ளி ஆசையா தரலாமா

அம்மா ஒடம்பு எதுக்கு கூசுது
பெண் : தொட்டா ஏதோ சுகம்தான் காணுது
ஆண் : இந்த இன்பம் எந்த நாளும் அறியாதது

நாவல் பழமே நான் பூசும் சந்தனமே
பூவே பொன்னே என்ன சொல்லி கூப்பிடுவே
ஆண் : மாடி வீட்டுல மாதுளம் பூ பூத்திருக்கு
மாடி வீட்டுல மாதுளம் பூ பூத்திருக்கு
பெண் : ஏணி நான் இருக்க ஏங்குவதோ உன் மனசு
ஆண் : லாலல்லா பெண் : ஆஹா ஆஹா ஆஹா
இருவர் : லாலாலாலா...


Movie/Album name: Annakili Sonna Kathai

Artists