Adipodi Paithiyakari Naan

1968
Lyrics
Language: English

Adi podi paithiyakkari
Naan ariyaadhavala sinnansirusa
Naan ariyaadhavala sinnansirusa

Adi podi paithiyakkari
Naan arindhaval thaan
Unnai purindhaval thaan
Naan arindhaval thaan
Unnai purindhaval thaan

Ninaithathellam mudithu vitten
Ini veru aasai illai
Ninaithathellam mudithu vitten
Ini veru aasai illai
Nilai maara povadhillai
Nizhal thedum ennam illai
Nilai maara povadhillai
Nizhal thedum ennam illai
Nizhal thedum ennam illai

Adi podi paithiyakkari
Naan ariyaadhavala sinnansirusa

Naan arindhaval thaan
Unnai purindhaval thaan

Iraivan oru naal thoongi vittaan
Ezhuthai konjam mattri vittaan
Iraivan oru naal thoongi vittaan
Ezhuthai konjam mattri vittaan
Ezhuthai konjam mattri vittaan
Ezhudhum kadhaiyai maattri ezhudha
Ennai engae thoodhu vittaan
Unnai kandu pesa vittaan

Adi podi paithiyakkari
Naan ariyaadhavala sinnansirusa

Naan arindhaval thaan
Unnai purindhaval thaan

Kangal arugae imai irundhum
Kangal imaiyai paarthathillai
Kangal arugae imai irundhum
Kangal imaiyai paarthathillai
Kangal imaiyai paarthathillai
Indha uvamai konjam pudhumai
Innum unakken puriyavillai
Verenna solven theriyavillai

Adi podi paithiyakkari
Naan arindhaval thaan
Unnai purindhaval thaan

Naan ariyaadhavala sinnansirusa

Vilakkin oliyaai nee irundhal
Vizhundha nizhalaai naan iruppen

Nizhalum oliyum servadhillai
Nilavum vaanum pirivadhillai

Thiyaaga nenjam deiva nenjam
Naanum deivam aavenoo

Naan paadhai maari povenoo

Adi podi paithiyakkari
Naan ariyaadhavala sinnansirusa
Naan ariyaadhavala sinnansirusa


Language: Tamil

எம்.எஸ். விஸ்வநாதன்

கண்ணதாசன்

அடிபோடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

அடிபோடி பைத்தியக்காரி
நான் அறிந்தவள்தான்
உன்னை புரிந்தவள்தான்
நான் அறிந்தவள் தான்
உன்னை புரிந்தவள் தான்

நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன்
இனி வேறு ஆசை இல்லை
நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன்
இனி வேறு ஆசை இல்லை
நிலை மாறப்போவதில்லை
நிழல் தேடும் எண்ணமில்லை
நிலை மாறப்போவதில்லை
நிழல் தேடும் எண்ணமில்லை
நிழல் தேடும் எண்ணமில்லை

அடிபோடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
பெண் : நான் அறிந்தவள் தான்
உன்னை புரிந்தவள் தான்

இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான்
இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான்
எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான்
எழுதும் கதையை மாற்றி எழுத
என்னை இங்கே துது விட்டான்
உன்னை கண்டு பேச விட்டான்

அடிபோடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

நான் அறிந்தவள் தான்
உன்னை புரிந்தவள் தான்

கண்கள் அருகே இமை இருந்தும்
கண்கள் இமையை பார்த்ததில்லை
கண்கள் அருகே இமை இருந்தும்
கண்கள் இமையை பார்த்ததில்லை
கண்கள் இமையை பார்த்ததில்லை
இந்த உவமை கொஞ்சம் புதுமை
இன்னும் உனக்கேன் புரியவில்லை
வேரென்ன சொல்வேன் தெரியவில்லை

அடிபோடி பைத்தியக்காரி
நான் அறிந்தவள் தான்
உன்னை புரிந்தவள்தான்

நான் அறியாதவளா சின்னன்சிறுசா

விளக்கின் ஒளியாய் நீயிருந்தால்
விழுந்த நிழலாய் நானிருப்பேன்

நிழலும் ஒளியும் சேர்வதில்லை
நிலவும் வானும் பிரிவதில்லை

யாது நெஞ்சம் தெய்வ நெஞ்சம்
நானும் தெய்வம் ஆவேனோ

நான் பாதை மாறி போவேனோ

அடிபோடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா


Movie/Album name: Thamarai Nenjam

Movie Summary Thamarai Nenjam (1968) is a Tamil drama directed by K. Balachander, revolving around a loving sister who sacrifices her own happiness and education to raise her younger sister after their parents' death, only to face emotional betrayal and heartbreak when the younger sister grows up self-centered.

Song Credits - Song: Adipodi Paithiyakari Naan - Movie: Thamarai Nenjam - Year: 1968 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singer: P. Susheela

Musical Style A light, playful, folk-flavored melody with a conversational, teasing lilt typical of M. S. Viswanathan's compositions, blending Carnatic sensibilities with Tamil film light music conventions.

Scene Context The song is picturized on the elder sister character (played by B. Saroja Devi) in a carefree, self-mocking mood, where she teasingly calls herself a "mad girl" while expressing her inner feelings of love and longing in a lighthearted, dancing manner.


Artists