Kadhal Enbathu Kaaviyamaanaal

1975
Lyrics
Language: English

Female : Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagan vendum
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagan vendum
Andha kadhaanaayagan unnarugae
Indha kadhaanaayagi vendum
Andha kadhaanaayagan unnarugae
Indha kadhaanaayagi vendum

Female : Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagan vendum

Female : Saagundhalam endra kaaviyamo
Oru thogaiyin varalaaru
Saagundhalam endra kaaviyamo
Oru thogaiyin varalaaru
Aval naayagan indri thanithirundhaal
Andha kaaviyam kidaiyaadhu
Naan paadum ilakkiyam neeyillaiyo
Naal thorum padithadhu ninaivillaiyo

Male : Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagi vendum
Andha kadhaanaayagi unnarugae
Indha kadhaanaayagan vendum

Male : Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagi vendum

Male : Neela kadal konda nithilamae
Indha naadagam unakkaaga
Neela kadal konda nithilamae
Indha naadagam unakkaaga
Undhan neela vizhi thannil thirandhirukkum
Indha noolagam enakkaaga
Singaara kavidhaigal padithaenammaa
Unakkandha porul koora thudithaenammaa

Male : Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagi vendum

Female : Valla tharum nalla nankodai pol
Ennai vaangiya mani karamae

Male : Indha maeniyil konjam
Kodhippeduthaal
Vandhu paaindhidum mazhaicharamae

Female : Nee theendum idangalil
Kulir vandhadhu

Male : Theendaadha angangal
Kodhippaanadhu

Female : Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagan vendum
Andha kadhaanaayagan unnarugae
Indha kadhaanaayagi vendum

Male : Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagi vendum


Language: Tamil

பெண் : காதல் என்பது காவியமானால்
கதாநாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால்
கதாநாயகன் வேண்டும்
அந்தக் கதாநாயகன் உன்னருகே
இந்தக் கதாநாயகி வேண்டும்
அந்தக் கதாநாயகன் உன்னருகே
இந்தக் கதாநாயகி வேண்டும்

பெண் : காதல் என்பது காவியமானால்
கதாநாயகன் வேண்டும்

பெண் : சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

ஆண் : காதல் என்பது காவியமானால்
கதாநாயகி வேண்டும்
அந்தக் கதாநாயகி உன்னருகே
இந்தக் கதாநாயகன் வேண்டும்

ஆண் : காதல் என்பது காவியமானால்
கதாநாயகி வேண்டும்

ஆண் : நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழிதன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனக்கந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

ஆண் : காதல் என்பது காவியமானால்
கதாநாயகி வேண்டும்

பெண் : வள்ளல் தரும் நல்ல நன்கொடை போல்
என்னை வாங்கிய மணிச்சரமே

ஆண் : இந்த மேனியில் கொஞ்சம்
கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே

பெண் : நீ தீண்டும் இடங்களில்
குளிர் வந்தது

ஆண் : தீண்டாத அங்கங்கள்
கொதிப்பானது

பெண் : காதல் என்பது காவியமானால்
கதாநாயகன் வேண்டும்
அந்தக் கதாநாயகன் உன்னருகே
இந்தக் கதாநாயகி வேண்டும்

ஆண் : காதல் என்பது காவியமானால்
கதாநாயகி வேண்டும்


Movie/Album name: Naalai Namadhe

Movie Summary Naalai Namadhe (1975) is a Tamil drama starring M. G. Ramachandran, Latha, and Chandrakala. The story revolves around a kind-hearted man who faces betrayal and family separation, and how truth and justice prevail in the end.

Song Credits - Song: Kadhal Enbathu Kaaviyamaanaal - Film: Naalai Namadhe (1975) - Singer: T. M. Soundararajan - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan

Musical Style A melodious Tamil film song in a conversational, philosophical vein, built on a smooth, romantic melody with orchestral accompaniment typical of M. S. Viswanathan’s 1970s style.

Key Artists Involved - T. M. Soundararajan (playback singer) - M. S. Viswanathan (composer) - Vaali (lyricist) - M. G. Ramachandran (on-screen presence, as applicable)

Scene Context The song is picturized on M. G. Ramachandran and conveys reflective, romantic, and philosophical sentiments about love and life, fitting the film’s emotional narrative.


Artists