Maathargal Vazhkkai

1959
Lyrics
Language: English

Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Manathirkisaintha maapillai theduthal
Mangaiyar kaanum suyanalamaa
Ila mangaiyar kaanum suyanalamaa

Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa

Vaazhkkaiyum orunaal vasanthamum orunaal
Vaanavil pola vaalipam thaanae
Maraiyum munnaalae magizhvathanaalae
Maaraana seyalendru sollaalaama

Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa

Malar vandinam pola magizhvenae
Naan valarmathi pol thigazhvenae
Malai asainthaalum nilai thavaraamal
Maanam pirathaanamaai vaazhvaenae

Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa

Irumanam searnthu oru manamaanal
Thirumana melam kottanumaa
Maraimugamaaga valarnthidum kadhal
Malaraamalae mangu poe vidumaa

Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa

Yaemaattruvaarum yaamaaruvaarum
Illaamal illai naattinilae
Idhai ennaamal ulagil pennaaga piranthu
Yaengi thavippatho veettinilae…..

Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa


Language: Tamil

: கே. ஜமுனாராணி

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
மனதிற்கிசைந்த மாப்பிள்ளை தேடுதல்
மங்கையர் காணும் சுயநலமா
இள மங்கையர் காணும் சுயநலமா....

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா

வாழ்க்கையும் ஒருநாள் வசந்தமும் ஒருநாள்
வானவில் போல வாலிபம் தானே
மறையும் முன்னாலே மகிழ்வதனாலே
மாறான செயலென்று சொல்லலாமா

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா

மலர் வண்டினம் போல மகிழ்வேனே
நான் வளர்மதி போல் திகழ்வேனே
மலை அசைந்தாலும் நிலை தவறாமல்
மானம் பிரதானமாய் வாழ்வேனே

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா

இருமனம் சேர்ந்து ஒரு மனமானால்
திருமண மேளம் கொட்டணுமா
மறைமுகமாக வளர்ந்திடும் காதல்
மலராமலே மங்கிப் போய் விடுமா

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா

ஏமாற்றுவாரும் ஏமாறுவாரும்
இல்லாமல் இல்லை நாட்டினிலே
இதை எண்ணாமல் உலகில் பெண்ணாகப் பிறந்து
ஏங்கித் தவிப்பதோ வீட்டினிலே...

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா


Movie/Album name: Bhagya Devathai

Movie Summary Bhagya Devathai is a 1959 Tamil film starring Sivaji Ganesan and Padmini, revolving around themes of fate, fortune, and family.

Song Credits - Song: Maathargal Vazhkkai - Year: 1959 - Movie: Bhagya Devathai

Musical Style Tamil film song of the late 1950s, composed in a traditional melodic style typical of the era's playback music, blending classical Carnatic sensibilities with cinematic orchestration.


Artists