Malai Naattu Kuravar

1961
Lyrics
Language: English

Kannai kattuna kannathil koduppom
Kaiyai neetuna kanaigalai thoduppom
Female Chorus : Kannai kattuna kannathil koduppom
Kaiyai neetuna kanaigalai thoduppom
Female : Ponnae kaattuna podariyil koduppom
Ponnae kaattuna podariyil koduppom
Female Chorus : Unmaikkagavae uyir kodukkum
Malai naattu kuravar naanga
Villai kattum kuravar naanga
Pen vettaiyaada varum kaattu poochigalai
Virattum jaadhi thaanga

Karppai kakkavae thunindha jaathinga
Kavari maan pola valarndha jaathinga
Arpamaagavae nenachudathingha
Arpamaagavae nenachudathingha
Female Chorus : Azhagai paathavudan asandhidadha
Malai naattu kuravar naanga
Villai kattum kuravar naanga
Pen vettaiyaada varum kaattu poochigalai
Virattum jaadhi thaanga

Namma vedar kulam thazhaikka venum
Namma naadu kaadugalum sezhikka venum
Hoo ooo ooo ooo
Namma vedar kulam thazhaikka venum
Namma naadu kaadugalum sezhikka venum
Female and Chorus : Engal nambhiraajan pugazh oongavae
Kurunji naadhan paadhamae nambhi vaazhum
Malai naattu kuravar naanga
Villai kattum kuravar naanga
Pen vettaiyaada varum kaattu poochigalai
Virattum jaadhi thaanga


Language: Tamil

ஜி. ராமநாதன்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

மலை நாட்டுக் குறவர் நாங்க
வில்லைக் கட்டும் குறவர் நாங்க
பெண் வேட்டையாட வரும் காட்டுப் பூச்சிகளை
விரட்டும் ஜாதி தாங்க........
மலை நாட்டுக் குறவர் நாங்க
வில்லைக் கட்டும் குறவர் நாங்க
பெண் வேட்டையாட வரும் காட்டுப் பூச்சிகளை
விரட்டும் ஜாதி தாங்க..

கண்ணைக் காட்டுனா கன்னத்தில் கொடுப்போம்
கையை நீட்டுனா கணைகளை தொடுப்போம்
பெண் குழு : கண்ணைக் காட்டுனா கன்னத்தில் கொடுப்போம்
கையை நீட்டுனா கணைகளை தொடுப்போம்
பெண் : பொன்னேக் காட்டுனா பொடறியில் கொடுப்போம்
பொன்னேக் காட்டுனா பொடறியில் கொடுப்போம்

உண்மைக்காகவே உயிர் கொடுக்கும்..
மலை நாட்டுக் குறவர் நாங்க
வில்லைக் கட்டும் குறவர் நாங்க
பெண் வேட்டையாட வரும் காட்டுப் பூச்சிகளை
விரட்டும் ஜாதி தாங்க..

கற்பைக் காக்கவே துணிந்த ஜாதிங்க
கவரி மான் போல வளர்ந்த ஜாதிங்க
அற்பமாகவே நெனச்சுடாதீங்க
அற்பமாகவே நெனச்சுடாதீங்க
பெண் குழு : அழகைப் பாத்தவுடன் அசந்திடாத...
மலை நாட்டுக் குறவர் நாங்க
வில்லைக் கட்டும் குறவர் நாங்க
பெண் வேட்டையாட வரும் காட்டுப் பூச்சிகளை
விரட்டும் ஜாதி தாங்க..

வலிய சண்டைக்கும் நெருக்கிட மாட்டோம்
வந்த சண்டைக்கும் பயந்திட மாட்டோம்
வலிய சண்டைக்கும் நெருக்கிட மாட்டோம்
வந்த சண்டைக்கும் பயந்திட மாட்டோம்
பெண் : மலையைக் கிள்ளி எலி பிடிச்சிட மாட்டோம்
மானத்தையே விட்டு கொடுத்திட மாட்டோம்
பெண் மற்றும் குழு : மலையைக் கிள்ளி எலி பிடிச்சிட மாட்டோம்
மானத்தையே விட்டு கொடுத்திட மாட்டோம்

நம்ம வேடர் குலம் தழைக்க வேணும்
நம்ம நாடு காடுகளும் செழிக்க வேணும்
ஹோ ஓ ஓ ஓ
நம்ம வேடர் குலம் தழைக்க வேணும்
நம்ம நாடு காடுகளும் செழிக்க வேணும்
பெண் மற்றும் குழு : எங்கள் நம்பிராஜன் புகழ் ஓங்கவே
குறிஞ்சி நாதன் பாதமே நம்பி வாழும்.....
மலை நாட்டுக் குறவர் நாங்க
வில்லைக் கட்டும் குறவர் நாங்க
பெண் வேட்டையாட வரும் காட்டுப் பூச்சிகளை
விரட்டும் ஜாதி தாங்க...


Movie/Album name: Srivalli

Movie Summary Srivalli (1961) is a Tamil devotional film centered on the goddess Sri Valli, focusing on her divine romance with Lord Murugan and her eventual marriage to him.

Song Credits - Song: Malai Naattu Kuravar - Film: Srivalli - Year: 1961 - Lyricist: Not reliably available - Music Director: Not reliably available - Singers: Not reliably available

Musical Style Devotional and folk-inflected Tamil film music, typical of early 1960s mythological/devotional cinema.

Raga Details Not reliably available.

Key Artists Involved Not reliably available.

Scene Context The song is set in a hilly/forest tribal milieu, sung by or about the mountain-dwelling Kuravar community, reflecting the film's portrayal of Valli's tribal upbringing before her divine union with Murugan.


Artists