Pollatha Punsirippu

1967
Lyrics
Language: English

Polladha pon sirippu
Podhum podhum un sirippu
Polladha pon sirippu
Podhum podhum un sirippu
Yaar veettu thottathilae
Poothathindha rojaoo
Polladha pon sirippu
Podhum podhum un sirippu
Yaar veettu thottathilae
Poothathindha rojaoo
Polladha pun sirippu

Mangaiyarai paarthathundhu
Manadhai koduthathillai
Malargalai paarthathundu
Maalaiyaai thoduthathillai

Manakolam paarthathundu
Maapillaiyaai aanadhillai
Manakolam paarthathundu
Maapillaiyaai aanadhillai
Yaar veettu thottathilae
Poothathindha rojaoo
Polladha pun sirippu

Deivam oru saatchi endraal
Nerilae varuvadhillai
Pillai maru saatchi endraal
Pesavae theriyavilali

Yaarai solli enna payan
En vazhakku theeravillai
Yaarai solli enna payan
En vazhakku theeravillai
Yaar veettu thottathilae
Poothathindha rojaoo
Polladha pun sirippu

Un veetu thottathilae
Oru maram thani maramaam
Thani maram thavikka kandu
Thalirkodi thazhuviyadham

Ondrukondru maalaiyittu
Andru mudhal pazhagiyadhaam
Pazhagiya pazhakathilae
Poothathindha rojapoo

Polladha pon sirippu
Podhum podhum un sirippu
Yaar veettu thottathilae
Poothathindha rojaoo
Polladha pun sirippu


Language: Tamil

கே. வி. மகாதேவன்

வாலி

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ..
பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ..
பொல்லாத புன்சிரிப்பு

மங்கையரை பார்த்ததுண்டு
மனதை கொடுத்ததில்லை
மலர்களை பார்த்ததுண்டு
மாலையாய் தொடுத்ததில்லை

மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ..
பொல்லாத புன்சிரிப்பு

தெய்வம் ஒரு சாட்சி என்றால்
நேரிலே வருவதில்லை
பிள்ளை மறு சாட்சி என்றால்
பேசவே தெரியவில்லை

யாரை சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யாரை சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ..
பொல்லாத புன்சிரிப்பு....

உன் வீட்டு தோட்டத்திலே
ஒரு மரம் தனிமரமாம்
தனி மரம் தவிக்கக் கண்டு
தளிர்க்கொடி தழுவியதாம்

ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
பழகிய பழக்கத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ.....

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ..
பொல்லாத புன்சிரிப்பு.....


Movie/Album name: Penne Nee Vazhga

Artists