Kallirukkum Roja Mala

1964
Lyrics
Language: English

Female : Kallirukkum roja malar
Thulluvadhai paaru
Kallirukkum roja malar
Thulluvadhai paaru
Kannathilae ilamai minnuvadhai paaru

Male : Oii oii oii oii

Female : Kallirukkum roja malar
Thulluvadhai paaru
Kannathilae ilamai minnuvadhai paaru

Male : Kannukkullae pennazhagu
Aaduvadhai paaru
Kannukkullae pennazhagu
Aaduvadhai paaru
Unnidamae nenjam oduvadhai paaru…

Female : Oii oii oii oii

Male : Kannukkullae pennazhagu
Aaduvadhai paaru
Unnidamae nenjam oduvadhai paaru…

Female : Oii oii
Vaanathilae velli nilaa
Vaanathilae velli nilaa vattamidum podhu
Vaanathilae velli nilaa vattamidum podhu
Vanji manam panjanaiyil panju padum paadu
Vanji manam panjanaiyil panju padum paadu
Kaadhalukku vetkkamillai
Kannirundhum thookkamillai
Kattazhaghai paaru pottazhaghai paaru

Male : Oii oii oii oii

Female : Kallirukkum roja malar
Thulluvadhai paaru

Male : Oii oii
Netru varai naanirundha nilamaiyellaam veru
Netru varai naanirundha nilamaiyellaam veru
Paarthavudan nee kodutha paruva malar nooru
Paarthavudan nee kodutha paruva malar nooru
Paal vadiyum unadhu mugam
Paadu padum enadhu manam
Paadi vandhaai paavai odi vandhen kaalai
Paadi vandhaai paavai odi vandhen kaalai

Female : Oii oii oii oii

Male : Kannukkullae pennazhagu
Aaduvadhai paaru

Female : Indru endrum naalai endrum
Odi chellum kaalam
Indru endrum naalai endrum
Odi chellum kaalam

Male : Ennaalum maaraadhu kaadhalennum kolam
Ennaalum maaraadhu kaadhalennum kolam
Thendralukku oivumillai
Saerndhavarkku yaekkamillai

Male : {Thendralukku oivumillai
Saerndhavarkku yaekkamillai}
Female : Aa…aa…aa…aa…aa…aa…aa…(overlap)

Both : Ondrupadum podhu inba sugam kodi

Male : Inba sugam kodi

Female : Oii oii oii oii
Kallirukkum roja malar thulluvadhai paaru

Male : Unnidamae nenjam oduvadhai paaru

Both : Oii oii oii oii
Kallirukkum roja malar thulluvadhai paaru


Language: Tamil

பெண் : கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு
கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு

ஆண் : ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்

பெண் : கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு

ஆண் : கண்ணுகுள்ளே பெண்ணழகு
ஆடுவதைப் பாரு
கண்ணுகுள்ளே பெண்ணழகு
ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு

பெண் : ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்

ஆண் : கண்ணுகுள்ளே பெண்ணழகு
ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு

பெண் : ஒய்ய் ஒய்ய்ய்
வானத்திலே வெள்ளி நிலா
வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது
வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது
வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு
வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு
காதலுக்கு வெட்கமில்லை
கண்ணிருந்தும் தூக்கமில்லை
கட்டழகைப் பாரு பொட்டழகைப் பாரு

ஆண் : ஓய்ய் ஓய்ய் ஓய்ய்

பெண் : கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு

பெண் : ஒய்ய் ஒய்ய்ய்
நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு
பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு
பால்வடியும் உனது முகம்
பாடுபடும் எனது மனம்
பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன் காளை
பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன் காளை

பெண் : ஓய்ய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய்

ஆண் : கண்ணுகுள்ளே பெண்ணழகு
ஆடுவதைப் பாரு

பெண் : இன்று என்றும் நாளையென்றும்
ஓடிச்செல்லும் காலம்
இன்று என்றும் நாளையென்றும்
ஓடிச்செல்லும் காலம்

ஆண் : எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம்
எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம்
தென்றலுக்கு ஓய்வுமில்லை
சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை

ஆண் : {தென்றலுக்கு ஓய்வுமில்லை
சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை}
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ…..

இருவர் : ஒன்றுபடும் போது இன்ப சுகம் கோடி

ஆண் : இன்ப சுகம் கோடி

பெண் : ஓய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு

ஆண் : உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு

இருவர் : ஓய்ய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு


Movie/Album name: Thaayin Madiyil

Movie Summary Thaayin Madiyil (1964) is a Tamil film centered on the bond between a mother and her child, exploring themes of sacrifice, separation, and reunion.

Song Credits - Song: Kallirukkum Roja Mala - Film: Thaayin Madiyil - Year: 1964 - Lyricist: Not reliably available - Composer: Not reliably available - Playback Singers: Not reliably available

Musical Style The song is a melodic Tamil film composition of the early 1960s, featuring lush orchestration typical of the era with strings, flute, and traditional percussion.

Raga Details Not reliably available.

Key Artists Involved Not reliably available.

Awards & Recognition Not reliably available.

Scene Context Not reliably available.


Artists