Thaazhampoo Kaigalukku

1976
Lyrics
Language: English

Female : Thaazhampoo kaigalukku thanga valaikaappammaa
Thangavalai osaiyilae thaalaattu kelammaa
Vaazhaippoo kaigalukku vaira valaikaappammaa
Vairavalai osaiyilae vaazhththuppaa kelammaa

Female : Manjal mugaththilae kungumam pottu
Konji sirikkuthadi
Manjal mugaththilae kungumam pottu
Konji sirikkuthadi
Paththu maasam niranthathum aasthikkoru
Pillai vanthu pirakkuthadi

Female : Thanga mugathilae kungma pottu
Nenjai mayakkuthadi
Intha thaayin manam konda aasaikkoru
Ponnu vanthu pirakkumadi

Female : Thanga mugathilae kungma pottu
Nenjai mayakkuthadi
Intha thaayin manam konda aasaikkoru
Ponnu vanthu pirakkumadi

Female : Manjal mugaththilae kungumam pottu
Konji sirikkuthadi

Female : Kangal irandinil thevai edhuvena
Ketkindra kelviyenna
Ingu pennaval endrum pillaigal endrum
Paarpathil laabamenna

Female : Thondril pugazhodu thondruga enbathu
Valluvar sonnathadi
Avar solliya vannam entha kuzhanthaiyum
Vaazhvathu nallathadi

Female : Thondril pugazhodu thondruga enbathu
Valluvar sonnathadi
Avar solliya vannam entha kuzhanthaiyum
Vaazhvathu nallathadi

Female : Baharathi kanda pudhumai pengal
Vaazhnthidum kalamadi
Innum pazhaiya ninaippil vaazhvathinilae
Yaarukku labamadi

Female : Aayiram kodi aandugalaaga
Suriyan ullathadi
Antha sooriyan pazhamai enbathinaalae
Thaazhvathu illaiyadi

Female : Aayiram kodi aandugalaaga
Suriyan ullathadi
Antha sooriyan pazhamai enbathinaalae
Thaazhvathu illaiyadi

Both : Manjal mugaththilae kungumam pottu
Konji sirikkuthadi
Paththu maasam niranthathum aasthikkoru
Pillai vanthu pirakkuthadi

Both : Thanga mugathilae kungma pottu
Nenjai mayakkuthadi
Intha thaayin manam konda aasaikkoru
Ponnu vanthu pirakkumadi


Language: Tamil

பெண் : தாழம்பூ கைகளுக்கு தங்க வளைக்காப்பம்மா
தங்கவளை ஓசையிலே தாலாட்டு கேளம்மா
வாழைப்பூ கைகளுக்கு வைர வளைக்காப்பம்மா
வைரவளை ஓசையிலே வாழ்த்துப்பா கேளம்மா…..

பெண் : மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு
கொஞ்சி சிரிக்குதடி
மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு
கொஞ்சி சிரிக்குதடி
பத்து மாசம் நிறைந்ததும் ஆஸ்திக்கொரு
பிள்ளை வந்து பிறக்குதடி

பெண் : தங்க முகத்திலே குங்குமப் பொட்டு
நெஞ்சை மயக்குதடி
இந்த தாயின் மனம் கொண்ட ஆசைக்கொரு
பொண்ணு வந்து பிறக்குமடி…..

பெண் : தங்க முகத்திலே குங்குமப் பொட்டு
நெஞ்சை மயக்குதடி
இந்த தாயின் மனம் கொண்ட ஆசைக்கொரு
பொண்ணு வந்து பிறக்குமடி…..

பெண் : மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு
கொஞ்சி சிரிக்குதடி

பெண் : கண்கள் இரண்டினில் தேவை எதுவென
கேட்கின்ற கேள்வியென்ன
இங்கு பெண்ணவள் என்றும் பிள்ளைகள் என்றும்
பார்ப்பதில் லாபமென்ன

பெண் : கண்கள் இரண்டினில் தேவை எதுவென
கேட்கின்ற கேள்வியென்ன
இங்கு பெண்ணவள் என்றும் பிள்ளைகள் என்றும்
பார்ப்பதில் லாபமென்ன

பெண் : தோன்றில் புகழொடு தோன்றுக என்பது
வள்ளுவர் சொன்னதடி
அவர் சொல்லிய வண்ணம் எந்த குழந்தையும்
வாழ்வது நல்லதடி…..

பெண் : தோன்றில் புகழொடு தோன்றுக என்பது
வள்ளுவர் சொன்னதடி
அவர் சொல்லிய வண்ணம் எந்த குழந்தையும்
வாழ்வது நல்லதடி…..

பெண் : மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு
கொஞ்சி சிரிக்குதடி
பத்து மாசம் நிறைந்ததும் ஆஸ்திக்கொரு
பிள்ளை வந்து பிறக்குதடி

பெண் : பாரதி கண்ட புதுமை பெண்கள்
வாழ்ந்திடும் காலமடி
இன்னும் பழைய நினைப்பில் வாழ்வதினாலே
யாருக்கு லாபமடி

பெண் : பாரதி கண்ட புதுமை பெண்கள்
வாழ்ந்திடும் காலமடி
இன்னும் பழைய நினைப்பில் வாழ்வதினாலே
யாருக்கு லாபமடி

பெண் : ஆயிரம் கோடி ஆண்டுகளாக
சூரியன் உள்ளதடி
அந்த சூரியன் பழமை என்பதினாலே
தாழ்வது இல்லையடி…..

பெண் : ஆயிரம் கோடி ஆண்டுகளாக
சூரியன் உள்ளதடி
அந்த சூரியன் பழமை என்பதினாலே
தாழ்வது இல்லையடி…..

இருவர் : மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு
கொஞ்சி சிரிக்குதடி
பத்து மாசம் நிறைந்ததும் ஆஸ்திக்கொரு
பிள்ளை வந்து பிறக்குதடி

இருவர் : தங்க முகத்திலே குங்குமப் பொட்டு
நெஞ்சை மயக்குதடி
இந்த தாயின் மனம் கொண்ட ஆசைக்கொரு
பொண்ணு வந்து பிறக்குமடி…..


Movie/Album name: Idhaya Malar

Summary of the Movie: Idhaya Malar is a 1976 Tamil romantic drama film that explores themes of love, sacrifice, and emotional turmoil.

Song Credits:
- Music Director: M.S. Viswanathan
- Lyricist: Kannadasan

Musical Style: Melodious and emotionally rich, blending classical and light music elements.

Raga Details: Likely based on Kalyani or Shankarabharanam, given its soothing and romantic appeal.

Key Artists Involved:
- Singer: S. Janaki

Awards & Recognition: Information not available.

Scene Context: The song is a romantic duet, possibly picturized in a serene setting, expressing deep affection between the lead characters.


Artists