Pennukku Sugam

1973
Lyrics
Language: English

Female : Pennukku sugamenbathum
Kannukku oli enbathum
Nenjukku ninaivenbathum
Nee vazhangiya arulallavo

Male : Mullaikku manamenbathum
Muththukku niramenbathum
Thangaththin ezhil enbathm neeyandro

Female : Kalyaana ninaivinilae ninaivinilae
Male : Ullaasa kanavinilae kanavinilae

Female : En ullam nadhiyaanathu
Male : En ullam kadalaanathu

Female : Pennukku sugamenbathum
Kannukku oli enbathum
Nenjukku ninaivenbathum
Nee vazhangiya arulallavo

Male : Mullaikku manamenbathum
Muththukku niramenbathum
Thangaththin ezhil enbathm neeyandro

Male : Kunguma poovai alliyeduththu
Kovai idhaloram
Female : Kovil maniyin osai thanthathu
Mannan kambeeram

Male : Kunguma poovai alliyeduththu
Kovai idhaloram
Female : Kovil maniyin osai thanthathu
Mannan kambeeram

Male : Kanni unakku maan pattam yaar thanthathu
Kanni unakku maan pattam yaar thanthathu
Female : Sanga tamizhil naan kanda thaai thanthathu
Male : Annam konda idaiyilae iddaiyilae
Female : Kannam thantha isaiyilae isaiyilae

Male : Ennullam kaddaiyaanthu
Female : Ennullam porulaanathu

Female : Pennukku sugamenbathum
Kannukku oli enbathum
Nenjukku ninaivenbathum
Nee vazhangiya arulallavo

Male : Mullaikku manamenbathum
Muththukku niramenbathum
Thangaththin ezhil enbathm neeyandro

Female : Mangaiyarukku sannathi enbathu
Kanavan madithaanae
Male : Maalaiyyittavan poojai seivathu
Mangai mugamthaanae

Female : Kaala devan podattum poomanjamae
Male : Kadhal devan paadattum aananthamae
Female : Kaalam konjam siriyathu siriyathu
Male : Aasai konjam periyathu periyathu

Female : Undendru mudivaanathu
Male : Endrendrum uravaanathu

Female : Pennukku sugamenbathum
Kannukku oli enbathum
Nenjukku ninaivenbathum
Nee vazhangiya arulallavo

Male : Mullaikku manamenbathum
Muththukku niramenbathum
Thangaththin ezhil enbathm neeyandro


Language: Tamil

பெண் : பெண்ணுக்கு சுகமென்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ

ஆண் : முல்லைக்கு மணமென்பதும்
முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

பெண் : கல்யாண நினைவினிலே நினைவினிலே
ஆண் : உல்லாசக் கனவினிலே கனவினிலே

பெண் : என் உள்ளம் நதியானது
ஆண் : என் உள்ளம் கடலானது

பெண் : பெண்ணுக்கு சுகமென்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ

ஆண் : முல்லைக்கு மணமென்பதும்
முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

ஆண் : குங்குமப் பூவை அள்ளியெடுத்து
கோவை இதழோரம்
பெண் : கோவில் மணியின் ஓசை தந்தது
மன்னன் கம்பீரம்

ஆண் : குங்குமப் பூவை அள்ளியெடுத்து
கோவை இதழோரம்
பெண் : கோவில் மணியின் ஓசை தந்தது
மன்னன் கம்பீரம்

ஆண் : கன்னி உனக்கு மான் பட்டம் யார் தந்தது
கன்னி உனக்கு மான் பட்டம் யார் தந்தது
பெண் : சங்கத் தமிழில் நான் கண்ட தாய் தந்தது
ஆண் : அன்னம் கொண்ட இடையிலே இடையிலே
பெண் : கன்னம் தந்த இசையிலே இசையிலே

ஆண் : என்னுள்ளம் கடையானது
பெண் : என்னுள்ளம் பொருளானது

பெண் : பெண்ணுக்கு சுகமென்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ

ஆண் : முல்லைக்கு மணமென்பதும்
முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

பெண் : மங்கையருக்கு சன்னதி என்பது
கணவன் மடிதானே
ஆண் : மாலையிட்டவன் பூஜை செய்வது
மங்கை முகம்தானே

பெண் : கால தேவன் போடட்டும் பூமஞ்சமே
ஆண் : காதல் தேவன் பாடட்டும் ஆனந்தமே
பெண் : காலம் கொஞ்சம் சிறியது சிறியது
ஆண் : ஆசை கொஞ்சம் பெரியது பெரியது

பெண் : உண்டென்று முடிவானது
ஆண் : என்றென்றும் உறவானது……

பெண் : பெண்ணுக்கு சுகமென்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ

ஆண் : முல்லைக்கு மணமென்பதும்
முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ


Movie/Album name: Veettukku Vandha Marumagal

Movie Summary A young woman navigates the challenges of married life after moving into her husband's family home, exploring themes of familial duty, love, and domestic harmony.

Song Credits - Song: Pennukku Sugam - Year: 1973 - Movie: Veettukku Vandha Marumagal - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: P. Susheela, S. P. Balasubrahmanyam

Musical Style A melodious, semi-classical film duet typical of early 1970s Tamil cinema, blending light classical elements with an easy, flowing film-music rhythm.

Key Artists Involved - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan - Playback: P. Susheela, S. P. Balasubrahmanyam

Scene Context The song picturizes the domestic life and romantic understanding between the lead pair within the family-home setting of the film.


Artists