Paar En Magale Paar Paar

1954
Lyrics
Language: English

Paar paar paar
Paar en magalae paar paar
Parandhu kidakkum annai boomi
Parindhunnai azhaikkudhu
Paar paar paar
Paar en magalae paar paar
Parandhu kidakkum annai boomi
Parindhunnai azahikkudhu
Paar paar paar

Paar en magalae paar paar

Irundha veedu iraval veedu
Irukka povadhun sondha veedu
Irundha veedu iraval veedu
Irukka povadhun sondha veedu
Varundha vendaam urulum ulagil
Irulum oliyum iyarkai
Irulum oliyum iyarkai

Paar en magalae paar paar

Bayappadaadhae paaril unpol
Palar en madiyil paar paar
Viyappadaiyaadhae virindha vaanam
Valaindhunnai kaakkudhu paar paar
Manidhanukkillaadha idhayam
Mannukkiruppadhai paar paar paar
Maadi veettu echil ilaikku
Mandai udaiyudhu paar
Mandai udaiyudhu paar

Paar en magalae paar paar
Parandhu kidakkum annai boomi
Parindhunnai azahikkudhu
Paar paar paar

Paar en magalae paar paar

Panathaal paadha poojai seiyum
Parama baktharai paar paar
Paavam aada punniyam oda
Paadhagar sirippadhai paar paar
Azhudhaal sirikkum andha ulagam
Anbu kaattum indha ulagam
Azhudhaal sirikkum andha ulagam
Anbu kaattum indha ulagam
Adhu vendumaa idhu vendumaa
Adhu vendumaa idhu vendumaa
Yedhu vendum endru nee paar
Yedhu vendum endru nee paar

Paar en magalae paar paar
Parandhu kidakkum annai boomi
Parindhunnai azahikkudhu
Paar paar paar

Paar en magalae paar paar


Language: Tamil

ராதா ஜெயலட்சுமி

பார் பார் பார்
பார் என் மகளே பார் பார்
பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது
பார் பார் பார்
பார் என் மகளே பார் பார்
பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது
பார் பார் பார்

பார் என் மகளே பார் பார்

இருந்த வீடு இரவல் வீடு
இருக்கப் போவதுன் சொந்த வீடு
இருந்த வீடு இரவல் வீடு
இருக்கப் போவதுன் சொந்த வீடு
வருந்த வேண்டாம் உருளும் உலகில்
இருளும் ஒளியும் இயற்கை
இருளும் ஒளியும் இயற்கை

பார் என் மகளே பார் பார்

பயப்படாதே பாரில் உன்போல்
பலர் என் மடியில் பார் பார்
வியப்படையாதே விரிந்த வானம்
வளைந்துனைக் காக்குது பார் பார்
மனிதனுகில்லாத இதயம்
மண்ணுக்கிருப்பதை பார் பார் பார்
மாடி வீட்டு எச்சில் இலைக்கு
மண்டை உடையுது பார்
மண்டை உடையுது பார்

பார் என் மகளே பார் பார்
பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது
பார் பார் பார்

பார் என் மகளே பார் பார்

பணத்தால் பாத பூஜை செய்யும்
பரம பக்தரைப் பார் பார்
பாவம் ஆட புண்ணியம் ஓட
பாதகர் சிரிப்பதைப் பார் பார்
அழுதால் சிரிக்கும் அந்த உலகம்
அன்பு காட்டும் இந்த உலகம்
அழுதால் சிரிக்கும் அந்த உலகம்
அன்பு காட்டும் இந்த உலகம்
அது வேண்டுமா இது வேண்டுமா
அது வேண்டுமா இது வேண்டுமா
எது வேண்டும் என்று நீ பார் பார்
எது வேண்டும் என்று நீ பார் பார்

பார் என் மகளே பார் பார்
பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது
பார் பார் பார்

பார் என் மகளே பார் பார்


Movie/Album name: Koondukkili

Movie Summary: Koondukkili is a 1954 Tamil-language drama about the struggles and bonds within a family, centering on a father's affection for his daughter and the emotional trials they face.

Song Credits: - Film: Koondukkili (1954) - Song: Paar En Magale Paar Paar - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Language: Tamil

Musical Style: Traditional Tamil film song with a melodic, emotive structure typical of 1950s Tamil cinema, blending light classical phrasing with cinematic orchestration.

Key Artists Involved: - Singer: T. M. Soundararajan (and/or P. Leela, depending on version) - Composer: K. V. Mahadevan - Lyricist: Kannadasan

Scene Context: The song is a sentimental piece picturized on a father expressing love, guidance, or concern for his daughter, reflecting the film's core emotional theme of parental affection.


Artists