Puratchi Thamizhan

2024
Lyrics
Language: English

Aayiram kaigal
Unnai maraikkum pothu
Odukkum kaigal udaiyum
Pothu varuvan puratchi thamizhane

Vettriyai naalai
Sarithram sollum
Ippadai thoorkin
Eppadai vellum

Needhikku ithu oru porattam
Ithu nitchayam ulagam paarattum
Nammai eipavar kaiyil athikaram
Irunthidum ennum kadhai maarum

Ithil naattinai keduthu
Nanamaigal azhikka
Ninaithaal evarkkum
Azhivaagum

Aayiram kaigal
Unnai maraikkum pothu
Odukkum kaigal udaiyum
Pothu varuvan puratchi thamizhane

Panchathula porantha Ssanam
Nenjukkulla aaraa ranam
Paalum thenum ketka villa
Pazhaya soorum kooda nilaikaa villa


Language: Tamil

பி. எஸ். அஸ்வின்

அலெக்ஸ் மற்றும் அனிஷ் எட்மோண்ட் பிரபு

தலை குனிஞ்சது போதும்
இது தலைநிமிரும் காலம்
வீரம் பெத்த புள்ளைய
இன துரோகம் வெட்டி சாய்க்குமா

முதுகில் குத்தும் நரிகள் கூட்டம்
காட்டில் சிரித்து ஆடும்
ஏழை ஜாதிகென்ன
கேட்டக யாரும் இல்லையா

வலிமை இழந்து மலையில் இருந்து
கீழ் விழும் நொடியிலே
வானம் வந்து றெக்கை தந்து கூட்டி போகும்
உயரமே உயரமே உயரமே

ஆயிரம் கைகள்
உன்னை மறைக்கும் போது
ஓடுக்கும் கைகள் உடையும் போது
வருவான் புரட்சி தமிழனே

திமிறி எழுவோம்
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்
அடங்க மறுப்போம்
உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம்

திமிறி எழுவோம்
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்
அடங்க மறுப்போம்
உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம்

வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்

நீதிக்கு இது ஒரு போராட்டம்
இது நிச்சயம் உலகம் பாராட்டும்
நம்மை எய்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

இதில் நாட்டினை கெடுத்து
நன்மைகள் அழிக்க
நினைத்தால் எவர்க்கும்
அழிவாகும் அழிவாகும் அழிவாகும்

ஆயிரம் கைகள்
உன்னை மறைக்கும் போது
ஓடுக்கும் கைகள் உடையும் போது
வருவான் புரட்சி தமிழனே

திமிறி எழுவோம்
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்
அடங்க மறுப்போம்
உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம்

திமிறி எழுவோம்
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்
அடங்க மறுப்போம்
உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம்

பஞ்சத்துல பொறந்த சனம்
நெஞ்சுக்குள் ஆறா ரணம்
பாலும் தேனும் கேட்க வில்ல
பழைய சோறும் கூட நிலைக்க வில்ல

ஊமையாக இருந்த சனத்த
ஓரங்கட்டி ஆண்டுபுட்டு
வறுமை என்னும் ஆயுதத்தை
எங்க மேல ஏவி விட்டா

உச்சி மீட்டு வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
உன்னை அட்சமின்றி
மிச்சமின்றி வேறருக்க
போகிறோம் போகிறோம்
போகிறோம்


Movie/Album name: Thozhar Cheguevera

Movie Summary Thozhar Cheguevera revolves around a young man who embraces revolutionary ideals to fight against caste oppression and systemic injustice in his village, drawing inspiration from Che Guevara's philosophy.

Song Credits - Song: Puratchi Thamizhan - Movie: Thozhar Cheguevera - Year: 2024

Musical Style Protest/revolutionary folk-inspired Tamil film song with rousing, anthemic tones.

Scene Context The song appears as a rallying cry during moments of uprising and resistance in the narrative.


Artists