Azhage Amuthe

1992
Lyrics
Language: English

Male : Azhagae amudhae
Poonthendral thaalaattum poonjolaiyae
Kannaae kaniyae
Kannodu kavi paadum ponnoonjalae
Mannilae pala minmini
Pudhidhaai podum poongolamae
Vaazhthudhae varaverkkudhae
Inidhaai paadum suga raagamae

Male : Azhagae amudhae
Poonthendral thaalaattum poonjolaiyae
Kannaae kaniyae
Kannodu kavi paadum ponnoonjalae

Male : Ullaasa kuyilgal oiyaaramaaga
Ondraaga koodi pan paadum neram
Sevvana vilin vannangal jaalam
Engengum inbam koothaadum kolam
Anbendra vaarthaikku inai yedhu anbae
Illaamal ponaalae vaazhvedhu ingae
Panbendra paasa koottilae serndhu
Pan paadum vaanampaadi naamae

Male : Azhagae amudhae
Poonthendral thaalaattum poonjolaiyae
Kannaae kaniyae
Kannodu kavi paadum ponnoonjalae

Male : Nalveenai naadham meettaamal meettu
Ennodu paadu ketkattum ingae
Ellorkkum vaazhthu eppodhum kooru
Nallorin vaakku sangeetham ingae
Verindri vaaraadhu seeraana mullai
Maaraadha anbindri veraedhum illai
Panbendra paasa koottilae serndhu
Pan paadum vaanampaadi naamae

Male : Azhagae amudhae
Poonthendral thaalaattum poonjolaiyae
Kannaae kaniyae
Kannodu kavi paadum ponnoonjalae
Mannilae pala minmini
Pudhidhaai podum poongolamae
Vaazhthudhae varaverkkudhae
Inidhaai paadum suga raagamae

Male : Azhagae amudhae
Poonthendral thaalaattum poonjolaiyae
Kannaae kaniyae
Kannodu kavi paadum ponnoonjalae


Language: Tamil

ஆண் : அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே
மண்ணிலே பல மின்மினி
புதிதாய்ப்போடும் பூங்கோலமே
வாழ்த்துதே வரவேற்குதே
இனிதாய்ப் பாடும் சுகராகமே…….

ஆண் : அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே

ஆண் : உல்லாச குயில்கள் ஒய்யாரமாக
ஒன்றாக கூடி பண்பாடும் நேரம்
செவ்வான வில்லின் வண்ணங்கள் ஜாலம்
எங்கெங்கும் இன்பம் கூத்தாடும் கோலம்
அன்பென்ற வார்த்தைக்கு இணையேது அன்பே
இல்லாமல் போனாலே வாழ்வேது இங்கே
பண்பென்ற பாசக்கூட்டிலே சேர்ந்து
பண்பாடும் வானம் பாடி நாமே…..

ஆண் : அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே

ஆண் : நல் வீணை நாதம் மீட்டாமல் மீட்டு
என்னோடு பாடு கேட்கட்டும் இங்கே
எல்லோர்க்கும் வாழ்த்து எப்போதும் கூறு
நல்லோரின் வாக்கு சங்கீதம் இங்கே
வேரின்றி வாராது சீரான முல்லை
மாறாத அன்பின்றி வேறேதும் இல்லை
பண்பென்ற பாசக்கூட்டிலே சேர்ந்து
பண்பாடும் வானம் பாடி நாமே

ஆண் : அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே
மண்ணிலே பல மின்மினி
புதிதாய்ப்போடும் பூங்கோலமே
வாழ்த்துதே வரவேற்குதே
இனிதாய்ப் பாடும் சுகராகமே…….

ஆண் : அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே


Movie/Album name: Bharathan

Azhage Amuthe – Song Details

Movie Summary

Bharathan (1992) is a Tamil drama film directed by Manivannan. The movie explores themes of love, betrayal, and societal pressures, revolving around the life of the protagonist Bharathan (played by Prabhu). The film features strong performances and emotional depth, with music playing a key role in enhancing the narrative.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(No specific awards information available for this song)

Scene Context in the Movie

The song Azhage Amuthe is a romantic duet, likely picturized on the lead pair (Prabhu and the female lead). It captures the blossoming love between the characters, set in a visually pleasing backdrop, enhancing the emotional connection in the narrative.

(Note: Some details like raga and awards may not be officially confirmed and are based on musical analysis and general knowledge.)


Artists