Naan Yaar Andru

1977
Lyrics
Language: English

Male : Idhaya thalaivaa nee sollu
Irumbu manithaa nee sollu
Kanniya neriyae nee sollu
Karma veera nee sollu

Male : Naan yaar andru naan yaar
Naan yaar andru naan yaar
Andru naattil iruntha
Naarpathu kodiyil naan yaar
Naan yaar

Male : Vaanil uyarum
Mani kodiyodu adipattavan
Uyar vanthae matharam vanthae matharam vanthae matharam
Vanthae matharam endrathanaalae udhaipattavan
Aandugal thorum anniyan kaalil mithipattavan
Intha anupavam varumena ariyaamal andru siraipattavan

Male : Naan yaar andru naan yaar
Andru naattil iruntha
Naarpathu kodiyil naan yaar
Naan yaar….

Male : Viduthalai ennum velvi theeyil karugiyavan
Uyar veera sudhanthiram vanthathu kandu urugiyavan
Viduthalai ennum velvi theeyil karugiyavan
Uyar veera sudhanthiram vanthathu kandu urugiyavan

Male : Tharuthalai koottam dharpaar nadaththa udhaviyavan
Tharuthalai koottam dharpaar nadaththa udhaviyavan
Endrum thanakkena yaedhum thevaiyillai ena udhariyavan
Yaedhum thevaiyillai ena udhariyavan

Male : Naan yaar andru naan yaar….

Chorus : Raghupathi ragava rajaram patheetha baavana seethaaram
Raghupathi ragava rajaram patheetha baavana seethaaram

Male : Gandhiyai kooda maranthathandro innadu
Annal kamarajarai thottrach seitha innadu
Avaraiyum maranthathandro innadu
Ennai maranthathil adhisayamillai ippothu
Dei dei ennai maranthathil adhisayamillai ippothu
Nadu idhilae irunthu viduthalai peruvathu eppothu

Male : Naan yaar andru naan yaar
Andru naattil iruntha
Naarpathu kodiyil naan yaar
Naan yaar….

Male : Naan yaar andru naan yaar…


Language: Tamil

ஆண் : இதயத் தலைவா நீ சொல்லு……..
இரும்பு மனிதா நீ சொல்லு……..
கண்ணிய நெறியே நீ சொல்லு……
கர்ம வீரா நீ சொல்லு…………

ஆண் : நான் யார் அன்று நான் யார்
நான் யார் அன்று நான் யார்
அன்று நாட்டில் இருந்த
நாற்பது கோடியில் நான் யார்
நான் யார்….

ஆண் : வானில் உயரும்
மணிக் கொடியோடு அடிப்பட்டவன்
உயர் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்றதனாலே உதைப்பட்டவன்
ஆண்டுகள் தோறும் அந்நியன் காலில் மிதிப்பட்டவன்
இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைப்பட்டவன்

ஆண் : நான் யார் அன்று நான் யார்
அன்று நாட்டில் இருந்த
நாற்பது கோடியில் நான் யார்
நான் யார்….

ஆண் : விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர் சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர் சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்

ஆண் : தறுதலைக் கூட்டம் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலைக் கூட்டம் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லை என உதறியவன்
ஏதும் தேவையில்லை என உதறியவன்

ஆண் : நான் யார் அன்று நான் யார்….

குழு : ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்
ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்

ஆண் : காந்தியைக் கூட மறந்ததன்றோ இந்நாடு
அண்ணல் காமராஜரை தோற்றச் செய்த இந்நாடு
அவரையும் மறந்ததன்றோ இந்நாடு
என்னை மறந்ததில் அதிசயமில்லை இப்போது
டேய் டேய் என்னை மறந்ததில் அதிசயமில்லை இப்போது
நாடு இதிலே இருந்து விடுதலை பெறுவது எப்போது

ஆண் : நான் யார் அன்று நான் யார்
அன்று நாட்டில் இருந்த
நாற்பது கோடியில் நான் யார்
நான் யார்….

ஆண் : நான் யார் அன்று நான் யார்….


Movie/Album name: Naam Pirandha Mann

Movie Summary Naam Pirandha Mann is a 1977 Tamil film directed by A. Vincent, starring Sivaji Ganesan and Kamal Haasan. The story revolves around a wealthy man who loses his memory in an accident and is presumed dead, while his family faces hardship; years later, circumstances bring him back into their lives under a new identity, leading to an emotional reunion and justice against those who wronged them.

Song Credits - Song: Naan Yaar Andru - Film: Naam Pirandha Mann - Year: 1977 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singer: T. M. Soundararajan

Musical Style The song is a contemplative, pathos-driven melody in a classic Tamil film style, blending philosophical reflection with emotional restraint, typical of M. S. Viswanathan’s compositions for Sivaji Ganesan.

Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan (playback singer) - Sivaji Ganesan (on-screen performer)

Scene Context The song is picturized on Sivaji Ganesan’s character as he reflects on his lost identity and the irony of his circumstances, expressing the philosophical query of who he truly is after memory loss and separation from his family.


Artists