Ethanai Manithargal

1976
Lyrics
Language: English

Male : Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ezhaiyin urakkangal paadhaiyilae
Andha maaligai mayakkangal bodhaiyilae

Male : Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae

Male : Ettadi mannukku pogum varai
Indha karpanai oorvala vaazhkkaiyilae
Yaaro oruvan thottamittaan
Adhil yaaro palanai anubavithaar
Adhil yaaro palanai anubavithaar

Male : Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae

Male : Thaayinai kadavul yena ninaithaan
Ivan thaai madi kovil yena valarndhaan
Kovilai pirindhae varum podhum
Mana kovilil thaai thaan vaazhugindraal
Mana kovilil thaai thaan vaazhugindraal

Male : Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae

Male : Pakkatthil thirudan vizhithiruppaan
Nalla kattatthil avan thaan agappaduvaan

Male : Thookkamum thunbamum thodarvadhundu
Indha thodar kadhai oru naal mudivadhundu
Indha thodar kadhai oru naal mudivadhundu

Male : Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ezhaiyin urakkangal paadhaiyilae
Andha maaligai mayakkangal bodhaiyilae

Male : Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae


Language: Tamil

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே…..

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

ஆண் : எட்டடி மண்ணுக்குப் போகும்வரை
இந்தக் கற்பனை ஊர்வல வாழ்க்கையிலே
யாரோ ஒருவன் தோட்டமிட்டான்
அதில் யாரோ பலனை அனுபவித்தார்
அதில் யாரோ பலனை அனுபவித்தார்….

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

ஆண் : தாயினைக் கடவுள் என நினைத்தான்
இவன் தாய் மடி கோவில் என வளர்ந்தான்
கோவிலைப் பிரிந்தே வரும்போதும்
மனக் கோவிலில் தாய்தான் வாழுகின்றாள்
மனக் கோவிலில் தாய் தான் வாழுகின்றாள்…….

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

ஆண் : பக்கத்தில் திருடன் விழித்திருப்பான்
நல்ல கட்டத்தில் அவன்தான் அகப்படுவான்

ஆண் : தூக்கமும் துன்பமும் தொடர்வதுண்டு
இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு
இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு….

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே…..

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே


Movie/Album name: Needhikku Thalaivanangu

Movie Summary Needhikku Thalaivanangu (1976) is a Tamil drama starring M. G. Ramachandran, focusing on themes of justice, morality, and social responsibility.

Song Credits - Song: Ethanai Manithargal - Movie: Needhikku Thalaivanangu - Year: 1976 - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A philosophical, pathos-tinged melody delivered in a classical-influenced film-song idiom, with prominent orchestration characteristic of M. S. Viswanathan’s 1970s Tamil cinema style.

Key Artists Involved - Composer: M. S. Viswanathan - Lyricist: Vaali - Playback Singers: T. M. Soundararajan, P. Susheela - On-screen Performer: M. G. Ramachandran

Scene Context The song appears in a reflective, socially conscious dramatic sequence, with M. G. Ramachandran’s character delivering its philosophical message about humanity and morality.


Artists