Aagayam Boologam

1988
Lyrics
Language: English

Aagayam boologam engaeyum un kolam
Maalai vaanilae undhan pon niram
Solai poovilae undhan poo mugamthaan
En moochukaattru nee thenmaanghu paattu nee
Aagayam boologam engaeyum un kolam

Manjal veiyillaai thanga mazhaiyai
Vaanagam thoovudhae
Female : Undhan varavaal indha ulagam
Sorgamaai aanadhae

Undhan tholil saaindhu kondaal
Nenjil thondrum nimmadh
Female : Kannan undhan dhegam thaanae
Kaadhal devan sannadhi

Urakkam indriyae kanavu kaanalaam
Female : Yugangal dhorum hoo hoo
Inaindhu vaazhalaam

Aaraaro aaraaroo kai veesum poonthaeroo
Unnai paarthadhum ullam poothathu
Inbam kanniale kanneer vaarthathu
Thaenaarae odi vaa thenpaanghu paadi vaa
Aaraaro aaraaroo kai veesum poonthaeroo

Neels nayanam kattum nalinam
Naal ellaam paarkkalaam
Aasai mozhikku osai edharkku
Mounamaai pesalam….

Aadai kattum andhi minnal
Tholil vandhu saayumae
Aadai neekkum malai thendral
Mogh raagam padumae
Pazhaiya paadalgal pudhiy raagangal
Iravil ketkklaam vidinthu thoongalam

Aagayam boologam engaeyum un kolam
Maalai vaanilae undhan pon niram
Solai poovilae undhan poo mugamthaan
En moochukaattru nee thenmaanghu paattu nee
Aagayam boologam engaeyum un kolam


Language: Tamil

இளையராஜா

வாலி

ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்
மாலை வானிலே உந்தன் பொன்னிறம்
சோலைப் பூவிலே உந்தன் பூ முகம்தான்
என் மூச்சுக் காற்று நீ தென்பாங்கு பாட்டு நீ
ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்....

மஞ்சள் வெய்யிலாய் தங்க மழையை
வானகம் தூவுதே
பெண் : உந்தன் வரவால் இந்த உலகம்
சொர்க்கமாய் ஆனதே

உந்தன் தோளில் சாய்ந்து கொண்டால்
நெஞ்சில் தோன்றும் நிம்மதி
பெண் : கண்ணன் உந்தன் தேகம் தானே
காதல் தேவன் சன்னதி

உறக்கமின்றியே கனவு காணலாம்
பெண் : யுகங்கள் தோறும் ஹோ ஹோ
இணைந்து வாழலாம்

ஆராரோ ஆராரோ கை வீசும் பூந்தேரோ
உன்னைப் பார்த்ததும் உள்ளம் பூத்தது
இன்பம் கண்ணிலே கண்ணீர் வார்த்தது
தேனாறே ஓடி வா தென்பாங்கு பாடி வா
ஆராரோ ஆராரோ கை வீசும் பூந்தேரோ....

நீல நயனம் காட்டும் நளினம்
நாளெல்லாம் பார்க்கலாம்
ஆசை மொழிக்கு ஓசை எதற்கு
மௌனமாய் பேசலாம்....

ஆடை கட்டும் அந்தி மின்னல்
தோளில் வந்து சாயுமே
ஆடை நீக்கும் மாலை தென்றல்
மோக ராகம் பாடுமே
பழைய பாடல்கள் புதிய ராகங்கள்
இரவில் கேட்கலாம் விடிந்து தூங்கலாம்

ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்
மாலை வானிலே உந்தன் பொன்னிறம்
சோலைப் பூவிலே உந்தன் பூ முகம் தான்
என் மூச்சுக் காற்று நீ தென்பாங்கு பாட்டு நீ
ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்....


Movie/Album name: Naan Sonnathey Sattam

Movie Summary Naan Sonnathey Sattam is a 1988 Tamil action film about a man who takes the law into his own hands to fight injustice after being wronged by corrupt forces.

Song Credits - Song: Aagayam Boologam - Film: Naan Sonnathey Sattam - Year: 1988 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style Melodic folk-infused film song with a philosophical, reflective tone.

Key Artists Involved - Singer: S. P. Balasubrahmanyam - Music: Ilaiyaraaja

Scene Context The song reflects the protagonist's philosophical introspection on life, destiny, and the vastness of the universe.


Artists