Nenjai Kilappi Kilappi

1983
Lyrics
Language: English

Nenjai kilappi kilappi vidum aasai
Unnai usuppi usuppi vidum jaadai
Nenjai kilappi kilappi vidum aasai
Unnai usuppi usuppi vidum jaadai

Ada naanthaanae aadaatha aattam illae
Naan aada koodaatha koottam illae
Ada naanthaanae aadaatha aattam illae
Naan aada koodaatha koottam illae

Raththiri thookkam kettaal enmael thappillae
Kaaththirukkum paalai kandaal pasikkum thannaalae
Raththiri thookkam kettaal enmael thappillae
Kaaththirukkum paalai kandaal pasikkum thannaalae

Ada poopotta melaakku aalolam paada
Pasum ponnaana lolaakku kadhoram aada
Ada thoda thonuthaa kaippada thoonduthaa
Pakkam varappaakkuthaa sugam thara ketkuthaa

Nenjai kilappi kilappi vidum aasai
Unnai usuppi usuppi vidum jaadai
Ada naanthaanae aadaatha aattam illae
Naan aada koodaatha koottam illae

Maalaiyittu kaiyai thotta machchan irukkaanae
Veroruththan ennai thottaa udane udhaippaanae
Maalaiyittu kaiyai thotta machchan irukkaanae
Veroruththan ennai thottaa udane udhaippaanae

Ada mealmoochu keezhmoochu vaangaathae mama
Nee ooraanin vayalkaattil yaerottalaama
Intha nilaa venumaa manam kanaa kaanumaa
Ennam alai paayuthaa illai vilai pesuthaa

Mookku muzhi shokkaa vachchu ennai padaichchaane
Thaekkumara thaerai polae thalukkaa nadappaenae
Mookku muzhi shokkaa vachchu ennai padaichchaane
Thaekkumara thaerai polae thalukkaa nadappaenae

Ada aagaayam paadhaalam eeraezhu logam
Nee ponaalum kaanaathaa ponnaana thegam
Idhu mayilvaaganam pudhu malar thoranam
Bodhai oru kaaranam intha udal moganam

Nenjai kilappi kilappi vidum aasai
Unnai usuppi usuppi vidum jaadai
Ada naanthaanae aadaatha aattam illae
Naan aada koodaatha koottam illae


Language: Tamil

: எஸ். ஜெயஸ்ரீ

நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை
உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை
நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை
உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை

அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே
நான் ஆட கூடாத கூட்டம் இல்லே...
அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே
நான் ஆட கூடாத கூட்டம் இல்லே...

ராத்திரி தூக்கம் கேட்டால் என்மேல் தப்பில்லே
காத்திருக்கும் பாலைக் கண்டால் பசிக்கும் தன்னாலே
ராத்திரி தூக்கம் கேட்டால் என்மேல் தப்பில்லே
காத்திருக்கும் பாலைக் கண்டால் பசிக்கும் தன்னாலே

அட பூப்போட்ட மேலாக்கு ஆலோலம் பாட
பசும் பொன்னான லோலாக்கு காதோரம் ஆட
அட தொடத் தோணுதா கைப்பட தூண்டுதா
பக்கம் வரப்பாக்குதா சுகம் தரக் கேட்குதா....

நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை
உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை
அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே
நான் ஆட கூடாத கூட்டம் இல்லே...

மாலையிட்டு கையைத் தொட்ட மச்சான் இருக்கானே
வேறொருத்தன் என்னைத் தொட்டா உடனே உதைப்பானே
மாலையிட்டு கையைத் தொட்ட மச்சான் இருக்கானே
வேறொருத்தன் என்னைத் தொட்டா உடனே உதைப்பானே

அட மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்காதே மாமா
நீ ஊரானின் வயல்காட்டில் ஏரோட்டலாமா
இந்த நிலா வேணுமா மனம் கனா காணுமா
எண்ணம் அலை பாயுதா இல்லை விலை பேசுதா

மூக்கு முழி ஷோக்கா வச்சு என்னை படைச்சானே
தேக்குமர தேரைப் போலே தளுக்கா நடப்பேனே
மூக்கு முழி ஷோக்கா வச்சு என்னை படைச்சானே
தேக்குமர தேரைப் போலே தளுக்கா நடப்பேனே

அட ஆகாயம் பாதாளம் ஈரேழு லோகம்
நீ போனாலும் காணாத பொன்னான தேகம்
இது மயில்வாகனம் புது மலர் தோரணம்
போதை ஒரு காரணம் இந்த உடல் மோகனம்

நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை
உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை
அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே
நான் ஆட கூடாத கூட்டம் இல்லே...


Movie/Album name: Thambathigal

Movie Summary Thambathigal is a 1983 Tamil film centered on the lives, conflicts, and emotional bonds within a family, exploring themes of relationships and sacrifice.

Song Credits - Song: Nenjai Kilappi Kilappi - Film: Thambathigal - Year: 1983 - Language: Tamil

Musical Style Melancholic, emotion-driven Tamil film song of the early 1980s, built on a sorrowful melodic line suited to a pathos situation.

Key Artists Involved - Music: Ilaiyaraaja


Artists