Inbame Unthan Pe

1975
Lyrics
Language: English

Male : { Inbamae
Unthan per penmaiyo……} (2)

Male : En idhayakani nee
Sollum sollil mazhalai
Kili en nenjil aadum
Paruvakodi……

Female : { Inbamae
Unthan per vallalo….} (2)

Female : Un idhayakani
Naan sollum sollil
Mazhalai kili un nenjil aadum
Paruvakodi……

Female : Inbamae
Unthan per vallalo

Female : { Sarkarai
Pandhal naan then
Mazhai sindha vaa } (2)

Female : Santhana
Medaiyum ingae
Saagasa naadagam engae

Male : Thenodu paal
Tharum sevvilaneergalai
Oriru vaazhaigal thaangum

Male : Devathai pol
Ezhil mevida nee vara
Naalum en manam engum

Male : Inbamae
Unthan per penmaiyo……

Male : { Panjanai vendumo
Nenjanai podhumae } (2)
Kai viral oviyam kaana
Kaalaiyil poomugam naana

Female : Ponnoli
Sindhidum melliya
Deepathil poridum
Menigal thulla

Female : Punnagaiyodoru
Kan tharum jaadaiyil
Pesum mandhiram enna

Female : Inbamae
Unthan per vallalo……

Female : { Malligai
Thottamo ven
Pani kootamo } (2)

Male : Maamalai
Mel vilaiyaadum
Maarbinil poonthugilaagum

Female : Mangala
Vaathiyam pongidum
Osaiyil megamum
Vaazhthisai paadum

Male : Maaligai
Vaasalil aadiya
Thoranam vaana
Veethiyil aadum

Male : Inbamae
Unthan per penmaiyo……

Male : En idhayakani nee
Sollum sollil mazhalai
Kili en nenjil aadum
Paruvakodi……

Female : Inbamae
Unthan per vallalo….


Language: Tamil

ஆண் : { இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ } (2)

ஆண் : என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி

பெண் : { இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ } (2)

பெண் : உன் இதயக்கனி
நான் சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி உன் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி

பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ

பெண் : { சர்க்கரைப்
பந்தல் நான் தேன்
மழை சிந்த வா } (2)

பெண் : சந்தன
மேடையும் இங்கே
சாகச நாடகம் எங்கே

ஆண் : தேனோடு
பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்

ஆண் : தேவதை
போல் எழில் மேவிட
நீ வர நாளும் என் மனம்
ஏங்கும்

ஆண் : இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ

ஆண் : { பஞ்சணை
வேண்டுமோ நெஞ்சணை
போதுமே } (2)
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண

பெண் : பொன்னொளி
சிந்திடும் மெல்லிய
தீபத்தில் போரிடும்
மேனிகள் துள்ள

பெண் : புன்னகையோடொரு
கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன

பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ

பெண் : { மல்லிகைத்
தோட்டமோ வெண்பனிக்
கூட்டமோ } (2)

ஆண் : மாமலை
மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாகும்

பெண் : மங்கள
வாத்தியம் பொங்கிடும்
ஓசையில் மேகமும்
வாழ்த்திசை பாடும்

ஆண் : மாளிகை
வாசலில் ஆடிய
தோரணம் வான
வீதியில் ஆடும்

ஆண் : இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ

ஆண் : என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி

பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ


Movie/Album name: Idhayakkani

Summary of the Movie: Idhayakkani (1975) is a Tamil romantic drama film that explores themes of love, sacrifice, and emotional conflicts.

Song Credits:
- Music Composer: M.S. Viswanathan
- Lyricist: Kannadasan

Musical Style & Raga Details:
- Style: Melodious, romantic
- Raga: Likely based on Shuddha Saveri or Kalyani (exact raga not confirmed)

Key Artists Involved:
- Singer: S. Janaki

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet expressing deep affection and longing between the lead characters, enhancing the emotional core of the film.


Artists