Lyricist : Kannadasan
Male : Kaadhal penne kanniyarkellam engae manam
Kannanthaana kattum udala sevvaai idhazha
Engae endrae nee sonnaal angae en manam
Female : En kannangal chinna pookkal
En seivaayoo vanna thottam
Pongu maeni thanga koodu
Angamellaam sondham thedu
Female : Ganagiyum ponniyum kadalilae sangamam
Male : Mangaiyar aangalin manadhilae sangamam
Female : Pennila oorilae vennila vandhadhu
Male : Vennila enbadhu pennilae vandhadhu
Female : Kaadhali maeniyai kaadhalan aasaiyil
Kannara kandaalum sugam
Oorariyaa vannam oor iravil adhai
Paalaaga undaalum sugam
Male : Kaadhal penne kanniyarkellam engae manam
Kannanthaana kattum udala sevvaai idhazha
Engae endrae nee sonnaal angae en manam
Female : En kannangal chinna pookkal
En seivaayoo vanna thottam
Pongu maeni thanga koodu
Angamellaam sondham thedu
Female : Vaasaloo siriyadhu vaazhkaiyo periyadhu
Male : Ennamo valarvadhu ilamaiyo maraivadhu
Female : Iravilae malarvadhu uravilae kanivadhu
Male : Varavilae kalippadhu pirivilae thavippadhu
Female : Aanadhu aagattum ponadhu pogattum
Andraadum kondaadu sugam
Naalaikku ver ondrum meedhamillaamal
Nandraaga kondaadu sugam
Male : Kaadhal penne kanniyarkellam engae manam
Kannanthaana kattum udala sevvaai idhazha
Engae endrae nee sonnaal angae en manam
Female : En kannangal chinna pookkal
En seivaayoo vanna thottam
Pongu maeni thanga koodu
Angamellaam sondham thedu
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்
பெண் : என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு
பெண் : கங்கையும் பொன்னியும் கடலிலே சங்கமம்
ஆண் : மங்கையர் ஆண்களின் மனதிலே சங்கமம்
பெண் : பெண்ணிலா ஊரிலே வெண்ணிலா வந்தது
ஆண் : வெண்ணிலா என்பது பெண்ணிலா வந்தது
பெண் : காதலி மேனியைக் காதலன் ஆசையில்
கண்ணாரக் கண்டாலும் சுகம்
ஊரறியா வண்ணம் ஓரிரவில் அதை
பாலாக உண்டாலும் சுகம்…..
ஆண் : காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்
பெண் : என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு
பெண் : வாசலோ சிறியது வாழ்க்கையோ பெரியது
ஆண் : எண்ணமோ வளர்வது இளமையோ மறைவது
பெண் : இரவிலே மலர்வது உறவிலே கனிவது
ஆண் : வரவிலே களிப்பது பிரிவிலே தவிப்பது
பெண் : ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அன்றாடம் கொண்டாடு சுகம்
நாளைக்கு வேறொன்றும் மீதமில்லாமல்
நன்றாகக் கொண்டாடு சுகம்………
ஆண் : காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்
பெண் : என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு