Aangal Maname Appadithan

1958
Lyrics
Language: English

Aangal maname appadithaan
Adhu adikkadi maarum ippadi thaan
Indha aangal maname appadithaan
Adhu adikkadi maarum ippadi thaan
Thirumanamaagidum munnae
Ondrum theriyadhavar pol iruppanga
Thirumanamaagi manaiviyai kandaal
Vedukkinnu muraippaanga

Hahaan

Aangal maname appadithaan
Adhu adikkadi maarum ippadi thaan

Pengal guname appadi thaan
Adhan pechum pokkum ippadi thaan
Female : Haiye
Male : Pengal guname appadi thaan
Adhan pechum pokkum ippadi thaan

Manamaagu munnae vaayum paesaamal
Madhippu mariaydhai tharuvaanga
Thirumanamaana pinnae virindhu
Katti kondu kusthikkum varuvanga

Ho ho ho

Pengal guname appadi thaan
Adhan pechum pokkum ippadi thaan

Anbu kanidhida kaigalai neetti
Aruginil vaarunga
Male : Ohoo
Female : Inba vaazhvil sila naatkalaana pin
Ettiyum povaanga

Aangal maname appadithaan
Adhu adikkadi maarum ippadi thaan

Pottapottiyil pengalukkullae
Poramaiyadaivanga
Female : Aama
Male : Ponaa poguthunnu aangal irundhaal
Porumaiyai kudaivaanga

Pengal guname appadi thaan
Adhan pechum pokkum ippadi thaan

Maanae thaenae enbathellaam
Oru maadham sendradhum maaridudhae
Male : Vanakkamum bayamum bhakthigalum
Oru vaaram sendradhum odidudhae
Female : Haa haa haa
Aamaigal endra pengalai enni
Attam poduvanga
Adhuum podhaamal samayam paarthae
Adikkavum thunivaanga

Aangal maname appadithaan
Adhu adikkadi maarum ippadi thaan

Indha pengal guname appadi thaan
Adhan pechum pokkum ippadi thaan


Language: Tamil

போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்
இந்த ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்
திருமணமாகிடும் முன்னே
ஒன்றும் தெரியாதவர்போல் இருப்பாங்க
திருமணமாகி மனைவியைக் கண்டால்
வெடுக்கின்னு முறைப்பாங்க........

ஹாஹான்

ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்

பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான்
பெண் : ஹையே ..
ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான்

மணமாகு முன்னே வாயும் பேசாமல்
மதிப்பு மரியாதை தருவாங்க
திருமணமான பின்னே வரிந்து
கட்டிக் கொண்டு குஸ்திக்கும் வருவாங்க

ஹோ ஹோஹோ

பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான்

அன்பு கனிந்திட கைகளை நீட்டி
அருகினில் வாருங்க
ஆண் : ஓஹோ!
பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
எட்டியும் போவாங்க........

ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்

போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
பொறாமையடைவாங்க
பெண் : ஆமா!
ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
பொறுமையைக் குடைவாங்க......

பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான்

மானே தேனே என்பதெல்லாம்
ஒரு மாதம் சென்றதும் மாறிடுதே
ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும்
ஒரு வாரம் சென்றதும் ஓடிடுதே
பெண் : ஹா...ஹா...ஹா...

ஆமைகளென்ற பெண்களை எண்ணி
ஆட்டம் போடுவாங்க
அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
அடிக்கவும் துணிவாங்க..........!

ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்

இந்த பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான்


Movie/Album name: Naan Valartha Thangai

Artists