Ramanin Naayagi

1973
Lyrics
Language: English

……………….
Male : ……………
Female : ……………

Ramanin naayagi kambanin kaaviyam
Ramanin naayagi kambanin kaaviyam
Poomagal vannamo ravi varama oviyam
Poomagal vannamo ravi varama oviyam

Pon maanai theda sollum
Thalaivi alla naan
Potta kottai thaandi sellum
Manaivi alla naan….

Pon maanai theda sollum
Thalaivi alla naan
Potta kottai thaandi sellum
Manaivi alla naan….
Engu nee angu naan edhilumae pangu naan
Vaazhvilum thaazhvilum paadhi nee paathi naan

Sri ramanin naayagi kambanin kaaviyam
Naayagan kannilae aayiram naadagam
Ramanin naayagi kambanin kaaviyam

Villaaga nee irukka naan valaikkavo
Nenjodu aasai ennum kanai thodukkavo
Villaaga nee irukka naan valaikkavo
Nenjodu aasai ennum kanai thodukkavo

Mangai un kaigali maalaigal allavo
Mai idum kangalo dheepamaai sollavo

Ramanin naayagi kambanin kaaviyam

Theeyilitta pothum thangam thangamallavo
Devanukku sontham intha angamallavo
Male : Vaazhmeegi paattil sonna penmaiyallavaa
Vaithegi poovai minjum menmaiyallavaa

Karpilum porppilum
Seedhaipol pavai naan
Male : Anbilum panbilum
Andril pol mannan naan

Ramanin naayagi kambanin kaaviyam
Poomagal vannamo ravi varama oviyam

Sri ramanin naayagi kambanin kaaviyam


Language: Tamil

.........................
ஆண் : .................................
பெண் : .........................

ராமனின் நாயகி கம்பனின் காவியம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்

பொன் மானை தேட சொல்லும்
தலைவி அல்ல நான்
போட்ட கோட்டை தாண்டி செல்லும்
மனைவி அல்ல நான்....

பொன் மானை தேட சொல்லும்
தலைவி அல்ல நான்
போட்ட கோட்டை தாண்டி செல்லும்
மனைவி அல்ல நான்....
எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்
வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான்

ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்

வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ
நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ
வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ
நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ

மங்கை உன் கைகளே மாலைகள் அல்லவோ
மை இடும் கண்களே தீபமாய் சொல்லவோ

ராமனின் நாயகி கம்பனின் காவியம்

தீயிலிட்ட போதும் தங்கம் தங்கமல்லவோ
தேவனுக்கு சொந்தம் இந்த அங்கமல்லவோ
ஆண் : வால்மீகி பாட்டில் சொன்ன பெண்மையல்லவா
வைதேகி பூவை மிஞ்சும் மென்மையல்லவா

கற்பிலும் பொற்ப்பிலும்
சீதைப்போல் பாவை நான்
ஆண் : அன்பிலும் பண்பிலும்
அன்றில் போல் மன்னன் நான்

ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்

ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்


Movie/Album name: Engal Thaai

Movie Summary Engal Thaai (1973) is a Tamil family drama centered on a selfless mother who endures immense hardship and sacrifice to raise and protect her children, embodying the ideal of maternal devotion.

Song Credits - Song: Ramanin Naayagi - Film: Engal Thaai (1973) - Language: Tamil

Musical Style A devotional/classical-flavored film song in the Tamil cinematic tradition, blending Carnatic melodic idioms with orchestral film accompaniment typical of early 1970s Tamil cinema.

Key Artists Involved - Music Director: (as credited for Engal Thaai)

Scene Context The song is picturized as a devotional piece within the film, reflecting the mother-centric, Bhakti-laden emotional tone of the narrative.


Artists