Raasa Leelai

1991
Lyrics
Language: English

Raasa leelai kaalam kaadhal yogam aagum
Mounamae geethamaai thendralaaga veesum

Raasa leelai kaalam kaadhal yogam aagum

Kalvi koodam pogaiyil
Kaadhal paadam nalladhaa
Kannin jaadai paesudhal
Thaevai illai allavaa

Kaadhal indri paadamaa
Padippadhenna vaedhanai
Andhi naera kalvi thaan
Thandhadhenna saadhanai

Thaenai pola paesi kedutha
Theemaiyaagum nanbanae

Maeni kanda paruva dhaagam
Moodi maraikka mudiyumaa

Udhaya geetham paadi ennai
Mayakka vendaam idhaya raaja

Raasa leelai kaalam kaadhal yogam aagum
Mounamae geethamaai thendralaaga veesum
Raasa leelai kaalam kaadhal yogam aagum

Thooral podum neer thuli
Maaran veesum malar kanai
Maalai naera mayakkamae
Udhattil undhan punnagai

Neram kaalam paarthu nee
Konja vendum ennidam
Aasai meeri ponadhaal anji nindren unnidam

Kottum mazhaiyil nadukkam neenga
Idaiyai naanum pidikkavaa

Idaiyai marandhu kudaiyai pidithaal
Undhan nadukkam theerumae

Thazhuvum podhum nazhuvi odum
Ennam yaeno idhaya raani

Raasa leelai kaalam kaadhal yogam aagum
Mounamae geethamaai thendralaaga veesum
Raasa leelai kaalam
Both : Kaadhal yogam aagum
Male : Raasa leelai kaalam
Both : Kaadhal yogam aagum


Language: Tamil

ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்

ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்

கல்விக்கூடம் போகையில்
காதல் பாடம் நல்லதா
கண்ணின் ஜாடை பேசுதல்
தேவை இல்லை அல்லவா

காதல் இன்றி பாடமா
படிப்பதென்ன வேதனை
அந்தி நேரக் கல்விதான்
தந்ததெந்தன் சாதனை

தேனைப் போலப் பேசிக் கெடுத்த
தீமையாகும் நண்பனே

மேனி கண்ட பருவ தாகம்
மூடி மறைக்க முடியுமா

உதய கீதம் பாடி என்னை
மயக்க வேண்டாம் இதய ராஜ

ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்

தூரல் போடும் நீர்த் துளி
மாறன் வீசும் மலர்க் கணை
மாலை நேர மயக்கமே
உதட்டில் உந்தன் புன்னகை

நேரம் காலம் பார்த்து நீ
கொஞ்ச வேண்டும் என்னிடம்
ஆசை மீறிப் போனதால்
அஞ்சி நின்றேன் உன்னிடம்

கொட்டும் மழையில் நடுக்கம் நீங்க
இடையை நானும் பிடிக்கவா

இடையை மறந்து குடையைப் பிடித்தால்
உந்தன் நடுக்கம் தீருமே

தழுவும் போது நழுவி ஓடும்
எண்ணம் ஏனோ இதய ராணி

ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம்

காதல் யோகம் ஆகும்
ஆண் : ராச லீலைக் காலம்
இருவர் : காதல் யோகம் ஆகும்


Movie/Album name: Aboorva Sakthi 369

Artists