Adi Aathi Adi Kanne

1981
Lyrics
Language: English

Adi aathi….adi kannae sokki…..!
Adi aathi….adi kannae sokki…..!
Oru manipuraa thanneerilae neendhudhadi
Idhu kalikaalama enna kalyaanamoo kalyaanam
Idhu kalikaalama kalyaanamoo kalyaanam

Poongodi pol irundhadhadi azhagaana udambhu
Ippa poomaram pol aanadhenna aathangarai karumbhu
Idhu yaarukkaana virundhu……
Poongodi pol irundhadhadi azhagaana udambhu
Ippa poomaram pol aanadhenna aathangarai karumbhu
Idhu yaarukkaana virundhu……

Adutha jenmam naan porandhaa
Aambalaiyaa porappen
Nee ippadiyae porandhu vandhaa
Onnaidhaandi manapaen
Naan un koodavae iruppaen

Jaathagathil edam irundhaaa
Un nenappu nadanthu vidum
Naanum vaazhndhiruppen kannae sokkaayii
Jaadhagatha maattri vaippom
Sadhagamaa mudithu vaippom
Kaalam thunai irukkum kannae raakkaayi……

Kaakkai kooda jaadhi sollum
Manushanoda saerndhaa
Adiyae kaathu kooda baedham paarkkum
Manushan mela vizhundha
Yaaru nyaayam paarthu nadantha…..!

Eppa avan ezhudhi vechaan
Inna inna jaathiyinnu
Kaalam maarudhadi kannae raakkaayii
Vandiyilae ponadhellaam
Vaanathilae parakkuthadi
Naamum parandhu paarppom kannae sokkaayii


Language: Tamil

எம். எஸ். விஸ்வநாதன்

கண்ணதாசன்

அடி ஆத்தி.......! அடி கண்ணே சொக்கி.....!
அடி ஆத்தி.......! அடி கண்ணே சொக்கி.....!
ஒரு மணிப்புறா தண்ணீரிலே நீந்துதடி
இது கலிகாலமா என்ன கல்யாணமோ கல்யாணம்
இது கலிகாலமா கல்யாணமாம் கல்யாணம்

பூங்கொடி போல் இருந்ததடி அழகான உடம்பு
இப்ப பூமரம் போல் ஆனதென்ன ஆத்தங்கரை கரும்பு
இது யாருக்கான விருந்து......
பூங்கொடி போல் இருந்ததடி அழகான உடம்பு
இப்ப பூமரம் போல் ஆனதென்ன ஆத்தங்கரை கரும்பு
இது யாருக்கான விருந்து......

ஆசை கொஞ்சம் அதிகம் வந்தா
தேகம் கொஞ்சம் பெருத்து விடும்
ஏதோ நெனைப்பிருக்கு உள்ளே ராக்காயி
கண்ணிருந்து பார்ப்பதற்கு காளை வரும் நேரம் வந்தா
இன்னும் பெருத்து விடும் கண்ணே ராக்காயி

அடி ஆத்தி.......! அடி கண்ணே சொக்கி.....!
ஒரு மணிப்புறா தண்ணீரிலே நீந்துதடி
பெண்கள் : தண்ணீரிலே நீந்துதடி

அடுத்த ஜென்மம் நான் பொறந்தா
ஆம்பளையாப் பொறப்பேன்
நீ இப்படியே பொறந்து வந்தா
ஒன்னைத்தாண்டி மணப்பேன்
நான் உன் கூடவே இருப்பேன்........

அடுத்த ஜென்மம் நான் பொறந்தா
ஆம்பளையாப் பொறப்பேன்
நீ இப்படியே பொறந்து வந்தா
ஒன்னைத்தாண்டி மணப்பேன்
நான் உன் கூடவே இருப்பேன்...

ஜாதகெத்தில் எடமிருந்தா
உன் நெனப்பு நடந்து விடும்
நானும் வாழ்ந்திருப்பேன் கண்ணே சொக்காயி
ஜாதகத்த மாற்றி வைப்போம்
சாதகமா முடித்து வைப்போம்
காலம் துணை இருக்கும் கண்ணே ராக்காயி......

அடி ஆத்தி.......! அடி கண்ணே சொக்கி.....!
ஒரு மணிப்புறா தண்ணீரிலே நீந்துதடி
பெண்கள் : தண்ணீரிலே நீந்துதடி

காக்கை கூட ஜாதி சொல்லும்
மனுஷனோட சேர்ந்தா
அடியே காத்துக்கூட பேதம் பார்க்கும்
மனுஷன் மேலே விழுந்தா
யாரு நியாயம் பார்த்து நடந்தா.....!

எப்ப அவன் எழுதி வச்சான்
இன்ன இன்ன ஜாதியின்னு
காலம் மாறுதடி கண்ணே ராக்காயி
வண்டியிலே போனதெல்லாம்
வானத்திலே பறக்குதடி
நாமும் பறந்து பாப்போம் கண்ணே சொக்காயி

அடி ஆத்தி.......! அடி கண்ணே சொக்கி.....!
ஒரு மணிப்புறா தண்ணீரிலே நீந்துதடி
பெண் : இது கலிகாலமா என்ன கல்யாணமோ கல்யாணம்
பெண்கள் : இது கலிகாலமா கல்யாணமோ கல்யாணம்
இது கலிகாலமா கல்யாணமாம் கல்யாணம்


Movie/Album name: Enga Ooru Kannagi

Movie Summary Enga Ooru Kannagi is a 1981 Tamil film centered on a fearless village woman who stands up against injustice and oppression in her community, embodying the spirit of Kannagi from the Silappathikaram epic.

Song Credits - Song: Adi Aathi Adi Kanne - Film: Enga Ooru Kannagi (1981) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Gangai Amaran - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style Folk-based film song with a devotional and celebratory tone, featuring traditional Tamil village rhythms and instrumentation.

Raga Details Set in a folk-oriented melodic structure rather than a classical raga, drawing on Tamil folk traditions.

Key Artists Involved - Ilaiyaraaja (Composer) - Gangai Amaran (Lyricist) - S. P. Balasubrahmanyam and S. Janaki (Playback Singers) - K. R. Vijaya (Lead Actress)

Scene Context The song is a festive folk number performed in a village setting, celebrating the protagonist's courage and the community's spirit, likely picturized during a temple festival or celebratory gathering.


Artists