Androru Naal Unai Kanden

2020
Lyrics
Language: English

Naa nana naaa
Naanana naa naa

Androru naal unai kanden
Kanda nodi mayyal konden
Androru naal unai kanden
Kanda nodi mayyal konden
Mayyal konden

Mayyal natpaagi
Natpe kaadhalaagi
Kaadhalae uyiraagi
Naam negizhgindrom
Kaadhalae uyiraagi
Naam negizhgindrom

Naam viralgal kortha payanam
Naam idhazhgal sertha tharunam
Avai ellamae kann munnae minnal vetta

Naam mazhaiyil nadantha iravu
Naam neruppil kulitha nilavu
Avai ellamae ul nenjil minnal vetta

Anbae…ninipamapaa
thana thiranaa…aa…aa…
Haa…aa…aa….

Androru naal maalai thandhaai
Pinnoru naal mogam endraai
Androru naal maalai thandhaai
Pinnoru naal mogam endraai

Mogam theeyaagi
Theeyae neeyaagi
Kaadhalin manjathil
Naam kalandhadhum
Kaadhalin manjathil
Naam kalandhadhum

Naam karuvil sertha pudhaiyal
Or uruvam kondu valara
Adhan kannodu un kannai kaanbaenada

Naan kunindhu mandiyittu
Un vayitril kaadhu padhithu
Adhan vaayodu un sorkal ketpenada..aa

{Androru naal
Male : Androru naal
Female : Maalai thandhaai
Male : Maalai thandhaai
Female : Pinnoru naal
Male : Pinnoru naal
Female : Mogam endraai
Male : Mogam endraai} (2)

Mogam theeyaagi
Theeyae neeyaagi
Wohu hu aah wohu huu ahh
Wohu hu aah wohu huu ahh aa aa


Language: Tamil

நன நன னா
நானன னா னா
நானன னா னா

அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
மையல் கொண்டேன்

மையல் நட்பாகி
நட்பே காதலாகி
காதலே உயிராகி
நாம் நெகிழ்கின்றோம்
காதலே உயிராகி
நாம் நெகிழ்கின்றோம்

நாம் விரல்கள் கோர்த்த பயணம்
நாம் இதழ்கள் சேர்த்த தருணம்
அவை எல்லாமே கண் முன்னே மின்னல் வெட்ட

நாம் மழையில் நடந்த இரவு
நாம் நெருப்பில் குளித்த நிலவு
அவை எல்லாமே உல் நெஞ்சில் மின்னல் வெட்ட

கரையுது காலம்
நிறையுது காதல்
இருவரும் சேர்த்து
வருகிற ஓவியத்தில்
எண்ணம் யாவும் வண்ணமாக
பூமி வண்ண கிண்ணமாக
கைகள் ரெண்டும் தூரிகைகள்
வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே

அன்பே....நிநிபமபா
தன திரனா.....ஆ.......ஆ....
ஹா......ஆ.....ஆ.....

அன்றொரு நாள் மாலை தந்தாய்
பின்னொரு நாள் மோகம் என்றாய்
அன்றொரு நாள் மாலை தந்தாய்
பின்னொரு நாள் மோகம் என்றாய்

மோகம் தீயாகி
தீயே நீயாகி
காதலின் மஞ்சத்தில்
நாம் கலந்ததும்
காதலின் மஞ்சத்தில்
நாம் கலந்ததும்

நாம் கருவில் சேர்த்த புதையல்
ஓர் உருவம் கொண்டு வளர
அதன் கண்ணோடு உன் கண்ணை காண்பேனடா

நான் குனிந்து மண்டியிட்டு
உன் வயிற்றில் காது பதித்து
அதன் வாயோடு உன் சொற்கள் கேட்பேனடா...ஆ....

கரையுது காலம்
நிறையுது காதல்
இருவரும் சேர்ந்து
வரைகிற ஓவியத்தில்
எண்ணம் யாவும் வண்ணமாக
பூமி வண்ண கிண்ணமாக
கைகள் ரெண்டும் தூரிகைகள்
வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே

{அன்றொரு நாள்
ஆண் : அன்றொரு நாள்
பெண் : மாலை தந்தாய்
ஆண் : மாலை தந்தாய்
பெண் : பின்னொரு நாள்
ஆண் : பின்னொரு நாள்
பெண் : மோகம் என்றாய்
ஆண் : மோகம் என்றாய்} (2)

மோகம் தீயாகி
தீயே நீயாகி
வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ்
வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ் ஆ ஆ


Movie/Album name: Album Songs 2020

Artists