
Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Kaayum veyilum paniyum mazhaiyum
Ezhai maadhar maeniyilae
Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Maanam kaakkum maan poale
Maghalai valarppaal madi mele
Thannai koduthu kandrai valarkkum
Thaayin idhayam paal polae
Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Nala puramum venghai vara
Naagam arughae padamedukka
Yenghi thavikkum thaayin magale
Iraivin karunai unnidame
Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Poluthu vidiyum velli varum
Poovum manamum alli varum
Thozhudha deivam thunaiyaai irukkum
Thunbam neengum vazhi pirakkum
Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Kaayum veyilum paniyum mazhaiyum
Ezhai maadhar maeniyilae
பி. எஸ். திவாகர்
கண்ணதாசன்
தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
காயும் வெயிலும் பனியும் மழையும்
ஏழை மாதர் மேனியிலே........
தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
மானம் காக்கும் மான்போலே
மகளை வளர்ப்பாள் மடி மேலே
தன்னைக் கொடுத்துக் கன்றை வளர்க்கும்
தாயின் இதயம் பால் போலே......
தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
நாலா புறமும் வேங்கை வர
நாகம் அருகே படமெடுக்க
ஏங்கித் தவிக்கும் தாயின் மகளே
இறைவன் கருணை உன்னிடமே......
தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
பொழுது விடியும் வெள்ளி வரும்
பூவும் மணமும் அள்ளி வரும்
தொழுத தெய்வம் துணையாயிருக்கும்
துன்பம் நீங்கும் வழி பிறக்கும்
தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
காயும் வெயிலும் பனியும் மழையும்
ஏழை மாதர் மேனியிலே...
Movie Summary: Thayum Magalum is a 1965 Tamil family drama exploring the emotional bond and conflicts between a mother and her daughter, centered on themes of sacrifice, separation, and reunion.
Song Credits:
Music Director: K. V. Mahadevan
Musical Style: Traditional Tamil film music with classical orchestration, veena and flute interludes, and emotive playback singing typical of mid-1960s Tamil cinema.
Raga Details: Based on the raga Kalyani.
Key Artists Involved:
K. V. Mahadevan
Scene Context: A poignant duet picturized on the mother and daughter expressing their deep affection, longing, and the pain of their circumstances within the film’s family narrative.