Kondai Oru Pakkam

1970
Lyrics
Language: Tamil

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி
சலக்கு சலக்கு சிங்காரி
உன் சரக்கு என்னடி கைகாரி
சலக்கு சலக்கு சிங்காரி
உன் சரக்கு என்னடி கைகாரி

பெண் : கெண்டை வேட்டி மினுங்க மினுங்க
கேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க
தங்கக் கடுக்கன் விளங்க விளங்க
சரசமாடும் ரங்கையா
சரசமாடும் ரங்கையா
பரிசம் போடு எங்கையா
சரசமாடும் ரங்கையா
பரிசம் போடு எங்கையா

ஆண் : புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு
துள்ளித் துள்ளி நடக்கும்போது
மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு
நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு
பெண் : பொட்டி வண்டி மேலிருந்து
தட்டித் தட்டி ஓட்டும்போது
கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு
உன் கட்டழகை காட்டாதே பெண்களுக்கு

ஆண் : சலக்கு சலக்கு சிங்காரி
உன் சரக்கு என்னடி கைகாரி
பெண் : சரசமாடும் ரங்கையா
பரிசம் போடு எங்கையா

ஆண் : ஆலமரத்து நெழலப் பாத்து
அடிமரத்துல பாய் விரிச்சு
பாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது
அந்தப் பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது
பெண் : வெத்தலை மடிச்சு கொடுத்தபோது
வெரலப் புடிச்சுக் கடிச்சபோது
வெக்கமா இருந்ததெனக்கு அப்போது
எல்லாம் வெவரமாக புரியுதையா இப்போது
யா யா யா

ஆண் : சலக்கு சலக்கு சிங்காரி
உன் சரக்கு என்னடி கைகாரி
பெண் : சரசமாடும் ரங்கையா
பரிசம் போடு எங்கையா

ஆண் : ஆத்தில் விழுந்து குளிச்சபோது
அயிரை மீனு கடிச்சபோது
கூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா
கையக்கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா
பெண் : அயிரை மீன வெரட்டிப்புட்டு
அந்த இடத்தில் நீ இருந்து
உயிரை வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆளு என்ற நாடகமா

ஆண் : சலக்கு சலக்கு சிங்காரி
உன் சரக்கு என்னடி கைகாரி
பெண் : சரசமாடும் ரங்கையா
பரிசம் போடு எங்கையா

ஆண் : கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
பெண் : தங்கக் கடுக்கன் விளங்க விளங்க
சரசமாடும் ரங்கையா

ஆண் : சலக்கு சலக்கு சிங்காரி
உன் சரக்கு என்னடி கைகாரி
பெண் : சரசமாடும் ரங்கையா
பரிசம் போடு எங்கையா

இருவர் : ………………..


Language: English

Male : Kondai oru pakkam sariya sariya
Kottadi selai thazhuva thazhuva
Thandai oru pakkam kulunga kulunga
Salaku salaku singaari
Salaku salaku singaari
Unn saraku ennadi kaigaari
Salaku salaku singaari
Unn saraku ennadi kaigaari

Female : Kendai veti minunga minunga
Keli pechi kulunga kulunga
Thanga kadukan vilanga vilanga
Sarasamaadum rangaiyaa
Sarasamaadum rangaiyaa
Parisampodu engaiyaa
Sarasamaadum rangaiyaa
Parisampodu engaiyaa

Male : Pullukatta thookikitu thulli thulli
Nadakumbodhu
Mallukatta thonudhadi maamanuku
Naama vanakam solla
Venumadi kaamanuku

Female : Potivandi melirundhu thati thati
Ottumbodhu
Kattikolla thonudhaiyaa kangaluku
Unn kattazhagai kaataadhe pengaluku

Male : Salaku salaku singaari
Unn saraku ennadi kaigaari
Female : Sarasamaadum rangaiyaa
Parisampodu engaiyaa

Male : Aalamarathu nizhalapaathu
Adimarathula paai virichi
Paaku vethala poda sonnadhu appodhu
Andha pazhaiya kadhaiya
Ketka vandhen ippodhu

Female : Vethala madichi koduthapodhu
Verala pidichi kadichapodhu
Vetkamaa irundhadhenaku appodhu
Ellam vevaramaaga puriyudhaiyaa ippodhu
Yaayaayaa..

Male : Salaku salaku singaari
Unn saraku ennadi kaigaari
Female : Sarasamaadum rangaiyaa
Parisampodu engaiyaa

Male : Aathil vizhundhu kulichapodhu
Ayira meenu kadichapodhu
Koochalpotu azhaithadhenna valliyamma
Kaiya koduthapodhu izhuthadhenna kalliyamma

Female : Ayirameena veratiputu
Andha idathil nee irundhu
Uyira vaangi geli senje nyaabagamaa
Adhu uravukaara aalu endra naadagamaa

Male : Salaku salaku singaari
Unn saraku ennadi kaigaari
Female : Sarasamaadum rangaiyaa
Parisampodu engaiyaa

Male : Kondai oru pakkam sariya sariya
Kottadi selai thazhuva thazhuva
Female : Thanga kadukan vilanga vilanga
Sarasamaadum rangaiyaa
Male : Salaku salaku singaari
Unn saraku ennadi kaigaari
Female : Sarasamaadum rangaiyaa
Parisampodu engaiyaa

Both : Humming…..


Movie/Album name: En Annan

Song Summary

"Kondai Oru Pakkam" is a classic Tamil song from the 1970 film En Annan, known for its melodious composition and soulful rendition.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context in the Movie

Would you like any additional details on this song?


Artists