Vetkapadavo Chellakili

1981
Lyrics
Language: English

……………

Vetkkappadavo chellakkiliyena vattamidavo
Mella thodugaiyil poovaagi pinjaagi
Kaayaagi kaniyaagi vannam peravo

Aa….aahhaa…haehae….haehae….
Pakkam varavo paththu viralgalil panthal idavo
Vanjikkodi idhu melaada melaada
Noolaadai polaada ennam illaiyo

Aa….aahhaa…hae….laalaalaalaa….

Naan pushpaanjali ondru seiyya
Nee ponnoviyam endru maara
Naan pushpaanjali ondru seiyya
Nee ponnoviyam endru maara

Antha rasanaigalil intha rasigai oru
Thaer thaer thaer endru aada
Male : Inba kavithaigalin santham muzhuvathaiyum
Paar paar paar endru paada….

Vetkkappadavo
Male : Ohohhah
Female : Chellakkiliyena vattamidavo
Male : Aahha
Female : Mella thodugaiyil poovaagi pinjaagi
Kaayaagi kaniyaagi vannam peravo

Naan pullaanguzhal endru aaga
Nee kannan viral endru sera
Naan pullaanguzhal endru aaga
Nee kannan viral endru sera

Minnal kodi malargal kannangaru vizhigal
Maan maan maan endru thulla
Female : Thannanthanimai idhu thantha inimai idhu
Yaar yaar yaar thadai solla

Pakkam varavo hha
Paththu viralgalil panthal idavo
Vanjikkodi idhu melaada melaada
Noolaadai polaada ennam illaiyo

Aa….aahhaa…hae….
Male : Laalaalaalaa….Haehhhaa……


Language: Tamil

வெட்க்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி வண்ணம் பெறவோ

ஆ......ஆஹ்ஹா.....ஹேஹே....ஹேஹே......
பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தல் இடவோ
வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட
நூலாடை போலாட எண்ணம் இல்லையோ

ஆ......ஆஹ்ஹா.....ஹே.....லாலாலாலா....

நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற

அந்த ரசனைகளில் இந்த ரசிகை ஒரு
தேர் தேர் தேர் என்று ஆட
ஆண் : இன்ப கவிதைகளின் சந்தம் முழுவதையும்
பார் பார் பார் என்று பாட.......

வெட்க்கப்படவோ
ஆண் : ஓஹோஹ்ஹஹ்..
பெண் : செல்லக்கிளியென வட்டமிடவோ
ஆண் : ஆஹ்ஹ
பெண் : மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி வண்ணம் பெறவோ

நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர

மின்னல் கொடி மலர்கள் கன்னங்கரு விழிகள்
மான் மான் மான் என்று துள்ள
பெண் : தன்னந்தனிமை இது தந்த இனிமை இது
யார் யார் யார் தடை சொல்ல

பக்கம் வரவோ ஹ்ஹ
பத்து விரல்களில் பந்தல் இடவோ
வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட
நூலாடை போலாட எண்ணம் இல்லையோ.....
பெண் : ஆ......ஆஹ்ஹா.....ஹ.....
ஆண் : லாலாலாலா....ஹேஹ்ஹ்ஹா......


Movie/Album name: Lorry Driver Rajakannu

Movie Summary Lorry Driver Rajakannu is a 1981 Tamil film starring Sarath Babu and Menaka, centred on a lorry driver whose life and relationships are tested by the challenges of his profession and personal circumstances.

Song Credits - Song: Vetkapadavo Chellakili - Film: Lorry Driver Rajakannu - Year: 1981 - Lyricist: Vaali - Music Director: Shankar Ganesh - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A playful, melodic duet in the light classical/folk-flavoured film-music idiom typical of early 1980s Tamil cinema, with a sprightly metre.

Raga Details Not reliably documented; no confirmed raga attribution available.

Key Artists Involved - Composer duo: Shankar Ganesh - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali

Scene Context A light-hearted romantic number picturised on the lead pair, expressing playful teasing and affection between the characters.


Artists