Kannanal Naan Imaiyave

1962
Lyrics
Language: English

Female : Eppiravi eduthaalum
Engae nee sendraalum
Kai pidiyil unnodu kaalam ellaam
Naan varuven
Kaalam ellaam naan varuven

Female : Kannanaal naan imaiyaaven
Kaatraanaal naan kodiyaven
Male : Mann endraal naan maram aaven
Mazhai endral naan payiraaven

Female : Kannanaal naan imaiyaaven
Kaatraanaal naan kodiyaven
Male : Mann endraal naan maram aaven
Mazhai endral naan payiraaven

Female : Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Female : Mozhiyaanaal porulaaven
Mullaanaal malaraven
Nee mozhiyaanaal porulaaven
Mullaanaal malaraven

Male : Kiliyaanaal kaniyaaven
Kelvi endraal bathilaaven
Kiliyaanaal kaniyaaven
Kelvi endraal bathilaaven

Male : Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Female : Kadalaanaal nadhiyaven
Kanaiyaanaal villaven
Nee kadalaanaal nadhiyaven
Kanaiyaanaal villaven

Male : Udalaanaal uyiraven
Oliyaanaal isaiyaven
Udalaanaal uyiraven
Oliyaanaal isaiyaven
Nee oliyaanaal isaiyaven

Female : Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Male : Ullam enbathu ullavarai
Un maname en palliyarai
Ullam enbathu ullavarai
Un maname en palliyarai

Female : Kallil vaditha sol polae
Adhu kaalam kadantha inba nilai
Kallil vaditha sol polae
Adhu kaalam kadantha inba nilai

Male : Kannanaal naan imaiyaaven
Female : Kaatraanaal naan kodiyaven
Male : Mann endraal naan maram aaven
Female : Mazhai endral naan payiraaven

Both : Kannanaal naan imaiyaaven ..aen…aen..


Language: Tamil

பெண் : எப்பிறவி எடுத்தாலும்
எங்கே நீ சென்றாலும்
கை பிடியில் உன்னோடு காலம் எல்லாம்
நான் வருவேன்
காலம் எல்லாம் நான் வருவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்…..ஏன்…..ஏன்…..

பெண் : மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்
நீ மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்

ஆண் : கிளியானால் கனியாவேன்
கேள்வியென்றால் பதிலாவேன்
கிளியானால் கனியாவேன்
நீ கேள்வியென்றால் நான் பதிலாவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்…..ஏன்…..ஏன்…..

பெண் : கடலானால் நதியாவேன்
கணையானால் வில்லாவேன்
நீ கடலானால் நதியாவேன்
கணையானால் வில்லாவேன்

ஆண் : உடலானால் உயிராவேன்
ஒலியானால் இசையாவேன்
உடலானால் உயிராவேன்
ஒலியானால் இசையாவேன்
நீ ஒலியானால் நான் இசையாவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்…..ஏன்…..ஏன்…..

ஆண் : உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை
உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை

பெண் : கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை
கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை

ஆண் : கண்ணானால் நான் இமையாவேன்
பெண் : காற்றானால் நான் கொடியாவேன்
ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன்
பெண் : மழையென்றால் நான் பயிராவேன்

இருவர் : கண்ணானால் நான் இமையாவேன்…..ஏன்…..ஏன்…..


Movie/Album name: Saradha

Movie Summary: Saradha (1962) is a Tamil film centered on the life of a young woman named Saradha, exploring themes of love, family, and sacrifice.

Song Credits: - Song: Kannanal Naan Imaiyave - Movie: Saradha (1962) - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style: Classical-leaning melodic duet typical of early 1960s Tamil film music, blending Carnatic structure with cinematic orchestration.

Key Artists Involved: - K. V. Mahadevan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Playback Singer) - P. Susheela (Playback Singer)

Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, expressing mutual affection and devotion.


Artists