Suriyanin Oliyai

2006
Lyrics
Language: English

Om bhoor bhuvaswaha
Tatsavidhurvarenyam
Bargho devasyathimahi
Thiyo yona prachodhayathu

Ohh…………

{Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye
Megangalin venmai unarnthathillaye
Ivalin kangalil ivayanaithum ullathe} (2)

Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye

Vaanavillilie motham yezhu vanname
Thaayin idhayathil vannam kodiye
Vergal mukkiyam kilaiyil pookkal sirikkave
Thaaimai mukkiyam makkal vaazhkai sirakkave

Kaanum boomiyil motham ettu thisaigale
Thaayin kangal kaattum kodi thisaigale
Mazhaiyin thuliyil thaan sippu muthu aagume
Mazhalai sirippil thaan vaazhkai mukthi adaiyume

Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye

Naalai enbathu neenda dhooramaanathu
Kaalam indru kannethiril thaan ullathu
Thalli thalliye rendu pulli irunthathu
Sernthu varainthathum indru kodu aanathu

Velai vanthathum uravu kaalam aanathu
Vetridathile anbu vazhiyuthu
Iruttin mudivilum konjam velicham ullathu
Iraivan irukkiraan nenjam nandri solluthu

Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye
Megangalin venmai unarnthathillaye
Ivalin kangalil ivayanaithum ullathe

Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye


Language: Tamil

: மது பாலகிருஷ்ணன்

பிரேம் குமார்

ஓம் பூர் புவஸ்வக
தத்சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்யதீமகி
தியோ யோன ப்ரசோதயாத்

{சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே
மேகங்களின் வெண்மை உணர்ந்ததில்லையே
இவளின் கண்களில் இவையனைத்தும் உள்ளதே} (2)

சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே

வானவில்லிலே மொத்தம் ஏழு வண்ணமே
தாயின் இதயத்தில் வண்ணம் கோடியே
வேர்கள் முக்கியம் கிளையில் பூக்கள் சிரிக்கவே
தாய்மை முக்கியம் மக்கள் வாழ்க்கை சிறக்கவே

காணும் பூமியில் மொத்தம் எட்டு திசைகளே
தாயின் கண்கள் காட்டும் கோடி திசைகளே
மழையின் துளியில் தான் சிப்பி முத்து ஆகுமே
மழலை சிரிப்பில் தான் வாழ்க்கை முக்தி அடையுமே

சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே

நாளை என்பது நீண்ட தூரமானது
காலம் இன்று கண்ணெதிரில் தான் உள்ளது
தள்ளி தள்ளியே ரெண்டு புள்ளி இருந்தது
சேர்ந்து வரைந்ததும் இன்று கோடு ஆனது

வேலை வந்ததும் உறவு காலம் ஆனது
வெற்றிடதிலே அன்பு வழியுது
இருட்டின் முடிவிலும் கொஞ்சம் வெளிச்சம் உள்ளது
இறைவன் இருக்கிறான் நெஞ்சம் நன்றி சொல்லுது

சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே
மேகங்களின் வெண்மை உணர்ந்ததில்லையே
இவளின் கண்களில் இவையனைத்தும் உள்ளதே

சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே


Movie/Album name: Sathanai

Movie Summary Sathanai (2006) is a Tamil drama film directed by S. S. Stanley.

Song Credits - Song: Suriyanin Oliyai - Film: Sathanai - Year: 2006 - Music Director: Sabesh–Murali - Lyricist: Pa. Vijay - Singers: Karthik, Chinmayi

Musical Style Melodic film song with a soft, uplifting devotional-philosophical tone.

Key Artists Involved - Music: Sabesh–Murali - Singers: Karthik, Chinmayi - Lyricist: Pa. Vijay


Artists