Unakkum Enakkum – Varnashramam

2023
Lyrics
Language: English

Unakkum enakkum irukkum uravai
Kaatru vandhu kadhai ezhudhaadho
Manadhil kidakkum ninaivin alaiyai
Kaadhal vandhu thaazh thiravaadho

Irul vandhu thazhuvugaiyil
Nizhal vittu vilagidalaam
Sithathilae padhindhadhellaam
Nithairaiyil kalaindhiduma

Malaigal irandu
Viralgal pidithu nadanthu poguthae
Pogaadha dhooram poaga
Kaalgal yengudhae

Mazhaiyin thuligal tharaiyil vilundhu
Tholaindhu poguma
Un thozhlil saayum
Indha nodiyum tholaiyuma

Oororam vandhu unai thedi ninnu
Kaalamum kaaval naan kaathidanum
Nee illaiyendraal en vaazhvu
Poyinnu angaeyae kallaganum

Kannae nee anga kallaagum podhu
Unai yendhi thaangum naan mannaaganum
Kaathodu kaatha moochodu moochaagi
Onnodu onnaaganum

Andha yezhu jenmam kooda edhukku
Haa..aaa..aaa…
Andha yezhu jenmam kooda edhukku
Ada indha nodi podhum enakku
Uyir vittu pogum podhum
Unna mattum sumakk avenum

Indha vaeli thaandi odum kilaiya
Indha jaadhi sanam killi eriyum
Mannil paayum kaadhal vaera
Indha ooru enna senjidum

Malaigal irandu viralagl pidithu
Nadanthu poguthae
Poagaadha dhooram poga
Kaalgal yengudhae

Mazhaiyin thuligal tharaiyil vilundhu
Tholaindhu poguma
Un thozhlil saayum
Indha nodiyum tholaiyuma


Language: Tamil

தீபன் சக்ரவத்தி

உமாதேவி

உனக்கும் எனக்கும் இருக்கும் உறவை
காற்று வந்து கதை எழுதாதோ!
மனதில் கிடக்கும் நினைவின் அலையை
காதல் வந்து தாழ் திறவாதோ!

இருள் வந்து தழுவகையில்
நிழல் விட்டு விலகிடலாம்
சித்தத்தில் பதிந்ததெல்லாம்
நித்திரையில் கலைந்திடுமா!

மலைகள் இரண்டு
விரல்கள் பிடித்து நடந்து போகுதே!
போகாத தூரம் போக
கால்கள் ஏங்குதே!

மழையின் துளிகள் தரையில் விழுந்து
தொலைந்து போகுமா!
உன் தோளில் சாயும்
இந்த நொடியும் தொலையுமா!

ஊரோரம் வந்து உனைத் தேடி நின்னு
காலமும் காவல் நான் காத்திடனும்
நீ இல்லையென்றால் என் வாழ்வு
பொய்யென்னு அங்கே கல்லாகனும்

கண்ணே! நீ அங்க கல்லாகும் போது
உனை எந்தி தாங்கும் மண்ணாகனும்
காத்தோடு காத்தா மூச்சோடு மூச்சாகி
ஒன்னோடு ஒன்னாகனும்

அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு….
ஹா .ஆ
அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு
இந்த நொடி போதும் எனக்கு
உயிர் விட்டு போகும் போதும்
உன்ன மட்டும் சுமக்க வேணும்

இந்த வேலி தாண்டி ஓடும் கிளைய
இந்த சாதி ஜனம் கிள்ளி எறியும்
மண்ணில் பாயும் காதல் வெற
இந்த ஊரு என்ன செஞ்சிடும்

மலைகள் இரண்டு விரல்கள் பிடித்து
நடந்து போகுதே!
போகாத தூரம் போக
கால்கள் ஏங்குதே!

மழையின் துளிகள் தரையில் விழுந்து
தொலைந்து போகுமா!
உன் தோளில் சாயும்
இந்த நொடியும் தொலையுமா!


Movie/Album name: Varnashramam

Movie Summary Varnashramam is a 2023 Tamil film that explores the rigidity of caste and social hierarchy in a village, centering on a forbidden love and the violent backlash it provokes.

Song Credits - Song: Unakkum Enakkum - Movie/Album: Varnashramam - Year: 2023 - Language: Tamil

Musical Style Melodic, emotive Tamil film song with a soft, romantic orchestration.

Scene Context The song appears in a romantic situation, expressing the emotional bond between the lead pair.


Artists