
Yaarukku theengu seidhen
Yaar kudiyai keduthaen
Yaar porulai abagarithaen
Seerodu vaazhntha ennai
Verrodu azhithathu yaen
Dheivamae idhu needhiyoo
Kannillaiyoo manamillaiyoo
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhiillaiyo
Kalangum en nilai maara vazhiillaiyo
Karunai kadal enbathellam poiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Kannillaiyoo manamillaiyoo
Iraivaa kannillaiyoo manamillaiyoo
{Ennamum kanavagi
Idi minnal mazhaiyaagi
Kanngalum kanneer kadal aanadhae
Mangala vaazhvum pariponadhae} (2)
Thuyar soozhndha
En vaazhvil puyal veesalaaamo
Uyirodu enai veithu vadhai seiyalaamo
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Ennai padaithathum yen
Inbam koduthathum yen
Ennai padaithathum yen
Inbam koduthathum yen
Idhu pola paadhiyilae
Thatti parithathum yen
Idhu pola paadhiyilae
Thatti parithathum yen
Anbai valarthathum
Aasaiyai thanthaum yen
Anbai valarthathum
Aasaiyai thanthaum yen
Thunbamenum neruppaattril
Enai thooki erinthathum yen
Thunbamenum neruppaattril
Enai thooki erinthathum yen
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Seidha pizhai enna
Dhegam irundhenna
Uiyyum vazhi enna
Unadhu theerppenna
சி. எஸ். ஜெயராமன்
யாருக்கு தீங்கு செய்தேன்
யார் குடியை கெடுத்தேன்
யார் பொருளை அபகரித்தேன்
சீரோடு வாழ்ந்த என்னை
வேரோடு அழித்தது ஏன்
தெய்வமே இது நீதியோ......
கண்ணில்லையோ மனமில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ
{எண்ணமும் கனவாகி
இடி மின்னல் மழையாகி
கண்களும் கண்ணீர்க் கடலானதே
மங்கல வாழ்வும் பறிபோனதே} (2)
துயர் சூழ்ந்த
என் வாழ்வில் புயல் வீசலாமோ
உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
செய்த பிழை என்ன
தேகம் இருந்தென்ன
உய்யும் வழி என்ன
உனது தீர்ப்பென்ன...
Movie Summary: Paasavalai (1956) is a Tamil film centered on themes of compassion and sacrifice, though detailed plot information is limited.
Song Credits: Music composed by Viswanathan–Ramamoorthy. Lyrics by Thanjai N. Ramaiah Dass. Sung by T. M. Soundararajan and P. Susheela.
Musical Style: Classical-leaning Tamil film song of the 1950s, blending Carnatic melodic structure with orchestral film accompaniment.
Raga Details: Not available.
Key Artists Involved: Viswanathan–Ramamoorthy (composers), Thanjai N. Ramaiah Dass (lyricist), T. M. Soundararajan and P. Susheela (playback singers).
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.