Ilai Vittu Malar

1975
Lyrics
Language: English

Ilai vittu malar vittu kani vitta bhoomi
Yaenguthu kadhalilae
Iru idhayam oru paadhaiyilae
Pudhu ulagam indru bodhaiyilae

Ilai vittu malar vittu kani vitta bhoomi
Yaenguthu kadhalilae
Iru idhayam oru paadhaiyilae
Pudhu ulagam indru bodhaiyilae

Manthira sangu vaasikkum vandu
Varuvathai paarthaayaa
Mangala pookkal sangathi pesa
Azhaippathai paarththaayaa

Anthipatta neram
Anbu konda maangal
Kooduthu paarththaayaa
Antha nilai kaana vantha ilamaathu
Vaaduthu paarththaayaa

Ilai vittu malar vittu kani vitta bhoomi
Yaenguthu kadhalilae
Male : Iru idhayam oru paadhaiyilae
Pudhu ulagam indru bodhaiyilae

Maivizhi saanthu viyarvaiyil nanainthu
Mayakkangal perugiyatho
manjal mugaththil kolangal pottu
Oviyam varaikindratho

Semmani idhazhili oru mutham koduththaal
Sinthanai sitharatho
Siththira kaalgalil paththira ezhutha
En manam padharaatho

Ilai vittu malar vittu kani vitta bhoomi
Yaenguthu kadhalilae
Male : Iru idhayam oru paadhaiyilae
Pudhu ulagam indru bodhaiyilae

Kannukkul vizhunthu idhayaththil mithanthu
Karaiyinil yaerividu
Female : Pennukkul irukkum ninaivugal yaavum
Perithena kanduvidu

Ada innumenna saedhi unnai vidamaattaen
Idhazhgalai thanthuvidu
Female : Indru mudhal neeyum ennadimaiyandro
Rasipathai rasiththu vidu

Heahae ilai vittu malar vittu kani vitta bhoomi
Female : Yaenguthu kadhalilae
Male : Iru idhayam
Female : Oru paadhaiyilae
Male : Pudhu ulagam
Female : Indru bodhaiyilae


Language: Tamil

இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி
ஏங்குது காதலிலே
இரு இதயம் ஒரு பாதையிலே
புது உலகம் இன்று போதையிலே

இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி
ஏங்குது காதலிலே
இரு இதயம் ஒரு பாதையிலே
புது உலகம் இன்று போதையிலே

மந்திரச் சங்கு வாசிக்கும் வண்டு
வருவதைப் பார்த்தாயா
மங்கலப் பூக்கள் சங்கதி பேச
அழைப்பதைப் பார்த்தாயா

அந்திப்பட்ட நேரம்
அன்பு கொண்ட மான்கள்
கூடுது பார்த்தாயா
அந்த நிலை காண வந்த இளமாது
வாடுது பார்த்தாயா

இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி
ஏங்குது காதலிலே
ஆண் : இரு இதயம் ஒரு பாதையிலே
புது உலகம் இன்று போதையிலே

மைவிழிச் சாந்து வியர்வையில் நனைந்து
மயக்கங்கள் பெருகியதோ
மஞ்சள் முகத்தில் கோலங்கள் போட்டு
ஓவியம் வரைகின்றதோ

செம்மணி இதழில் ஒரு முத்தம் கொடுத்தால்
சிந்தனை சிதறாதோ
சித்திரக் கால்களில் பத்திரம் எழுத
என் மனம் பதறாதோ

இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி
ஏங்குது காதலிலே
ஆண் : இரு இதயம் ஒரு பாதையிலே
புது உலகம் இன்று போதையிலே

கண்ணுக்குள் விழுந்து இதயத்தில் மிதந்து
கரையினில் ஏறிவிடு
பெண் : பெண்ணுக்குள் இருக்கும் நினைவுகள் யாவும்
பெரிதெனக் கண்டுவிடு

அட இன்னுமென்ன சேதி உன்னை விடமாட்டேன்
இதழ்களைத் தந்துவிடு
பெண் : இன்று முதல் நீயும் என்னடிமையன்றோ
ரசிப்பதை ரசித்து விடு........

ஹெஹே இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி
பெண் : ஏங்குது காதலிலே
ஆண் : இரு இதயம்
பெண் : ஒரு பாதையிலே
ஆண் : புது உலகம்
பெண் : இன்று போதையிலே

இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி
ஏங்குது காதலிலே
ஏங்குது காதலிலே
ஏங்குது காதலிலே


Movie/Album name: Sonthangal Vazhga

Movie Summary: Sonthangal Vazhga (1975) is a Tamil family drama centered on the bonds, sacrifices, and reunion of family members.

Song Credits: - Song: Ilai Vittu Malar - Film: Sonthangal Vazhga (1975) - Lyricist: Not reliably confirmed - Music Director: Not reliably confirmed - Singers: Not reliably confirmed

Musical Style: A melodious Tamil film song of the mid-1970s, characteristic of the era's orchestral film music — likely a pathos/emotional melody with veena, flute, and orchestral strings.

Raga Details: Not reliably confirmed.

Key Artists Involved: Not reliably confirmed.

Awards & Recognition: Not reliably confirmed.

Scene Context: Not reliably confirmed.


Artists