Adhikaala

1986
Lyrics
Language: English

Female : Adhi kaalai suba velai
Un olai vandhadhu
Adhi kaalai suba velai
Un olai vandhadhu

Male : Kaadhal sonna kaagidham
Poovaai ponadhu
Vaanil pona dhevadhai
Vaazhthu chonnadhu

Female : Oru thaththai kadidhaththai
Than nenjukkullae vaasikka
Adhi kaalai suba velai
Un olai vandhadhu

Male : Adhi kaalai suba velai
Un olai vandhadhu

Male : Anbae vaa vaa anaikkavaa
Nee nilavukku pirandhavalaa
Female : Bodhai vandae poruththiru
Indru malarukku thirappu vizhaa

Male : Unnai vandhu paaraamal
Thookkam thollaiyae
Female : Unnai vandhu paarthaalum
Thookkam illaiyae

Male : Oru baaram udai meerum
Niram maarum thaniyae
Female : Idhazhoram amudhoorum
Parimaarum iniyae

Male : Adi thappi poga koodaadhae
Adhi kaalai suba velai
Un olai vandhadhu

Female : Adhi kaalai suba velai
Un olai vandhadhu

Female : Thendral vandhu theendinaal
Indha thalir enna thadai sollumaa
Male : Penmai baaram thaangumaa
Andha idai oru vidai sollumaa

Female : Ennai cherndha unnullam
Eeram maarumaa
Male : Thangam enna suttaalum
Saaram pogumaa

Female : Ilangodhai oru paedhai
Ival paadhai unadhu
Male : Malar maalai aniyaamal
Uranghaadhu manadhu

Female : Idhu podhum
Sorgam ver yedhu
Adhi kaalai suba velai
Un olai vandhadhu

Male : Adhi kaalai suba velai
Un olai vandhadhu

Female : Kaadhal sonna kaagidham
Poovaai ponadhu
Vaanil pona dhevadhai
Vaazhthu chonnadhu

Male : Oru thaththai kadidhaththai
Than nenjukkullae vaasikka
Both : Adhi kaalai suba velai
Un olai vandhadhu


Language: Tamil

பெண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது

ஆண் : காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது
பெண் : ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

பெண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
ஆண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது

ஆண் : அன்பே வா வா அணைக்கவா
நீ நிலவுக்குப் பிறந்தவளா
பெண் : போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்குத் திறப்பு விழா

ஆண் : உன்னை வந்து பாராமல்
தூக்கம் தொல்லையே
பெண் : உன்னை வந்து பார்த்தாலும்
தூக்கம் இல்லையே

ஆண் : ஒரு பாரம் உடை மீறும்
நிறம் மாறும் கனியே
பெண் : இதழோரம் அமுதூறும்
பரிமாறும் இனியே
ஆண் : அடி தப்பி போகக்கூடாது

ஆண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
பெண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது

பெண் : தென்றல் வந்து தீண்டினால்
இந்தத் தளிர் என்ன
தடை சொல்லுமா
ஆண் : பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை
ஒரு விடை சொல்லுமா

பெண் : என்னைச் சேர்ந்த உன்னுள்ளம்
ஈரம் மாறுமா
ஆண் : தங்கம் என்ன சுட்டாலும்
சாரம் போகுமா

பெண் : இளங்கோதை ஒரு பேதை
இவள் பாதை உனது
ஆண் : மலர் மாலை அணியாமல்
உறங்காது மனது
பெண் : இது போதும் சொர்க்கம் வேறேது

பெண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
ஆண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது

பெண் : காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது
ஆண் : ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

இருவர் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது


Movie/Album name: Natpu

Movie Summary Natpu (1986) is a Tamil film directed by R. Sundarrajan, focusing on the deep bond of friendship between two men and the emotional conflicts that arise when love and loyalty collide.

Song Credits - Song: Adhikaala - Film: Natpu (1986) - Music: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style The song blends melodic Tamil film music with folk-inflected rhythms, featuring Ilaiyaraaja's characteristic use of earthy percussion, flute interludes, and layered string arrangements, creating an emotional and rustic soundscape.

Raga Details No specific raga information is available.

Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Director: R. Sundarrajan

Scene Context The song appears in a sequence highlighting the emotional bond and shared moments between the friends, reinforcing the film's central theme of friendship.


Artists