Un Azhagai

2000
Lyrics
Language: English

Un azhagai paada sonnaal
Malaiyum nadhiyum paadaathaa
Un perai ezhutha sonnaal
Megam nilavil ezhuthaathaa

Magavari kettu dhinam vaanavil varumae
Un malaradi nanaikka ingu kaveri varumae
Oru thadavai unthan perai ull vaanginaen
Uyirukkul uyiraai unnai uruvaakkinaen

Un azhagai paada sonnaal
Malaiyum nadhiyum paadaathaa
Un perai ezhutha sonnaal
Megam nilavil ezhuthaathaa

Kannukkul machchangal kanakeduppil thavariyathu
Pani kooda un sirippai padam pidiththu kaattiyathu
Female : Naanthaan un thalaiyanaial ennodu thoongaathu
Kadhalin thalaivaligal kann pola thoongaathu

Siththanna vaanil en mugam paarththu
Anbae paadhi iraviil vaerththaen
Male : Mookkodu mookku modhum mogam idhu
Kannodu kann kalakkum kadhal idhu

Un azhagai paada sonnaal
Malaiyum nadhiyum paadaathaa
Un perai ezhutha sonnaal
Megam nilavil ezhuthaathaa

Neeril vizhum sooriyanai
Kadhal kaiyil alli varum
Pani thuliyil ulaaththaiyae
Kadhal pookka seithu vidum

Bhoomiyenum poopariththu
Kadhal solli pulli vaippom
Uyirai mattum vaaganamaai
Kadhalukku anuppiduvom

Vinmeenai minnal valiyil
Alli vanthu tharuvaen
En nenjil unnai thaangi
Yaezhu jenmam varuvaen

Pooththu kidakkira pani malai alli
Seithaen unakkoru kadhal palli
Female : Mookkodu mookku modhum mogam idhu
Kannodu kann kalakkum kadhal idhu

Un azhagai paada sonnaal
Malaiyum nadhiyum paadaathaa
Un perai ezhutha sonnaal
Megam nilavil ezhuthaathaa

Magavari kettu dhinam vaanavil varumae
Un malaradi nanaikka ingu kaveri varumae
Female : Oru thadavai unthan perai ull vaanginaen
Uyirukkul uyiraai unnai uruvaakkinaen


Language: Tamil

உன் அழகை பாடச் சொன்னால்
மலையும் நதியும் பாடாதா
உன் பேரை எழுத சொன்னால்
மேகம் நிலவில் எழுதாதா

முகவரி கேட்டு தினம் வானவில் வருமே
உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே
ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன்
உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன்

உன் அழகை பாடச் சொன்னால்
மலையும் நதியும் பாடாதா
உன் பேரை எழுத சொன்னால்
மேகம் நிலவில் எழுதாதா.......

கண்ணுக்குள் மச்சங்கள் கணக்கெடுப்பில் தவறியது
பனிக் கூட உன் சிரிப்பை படம் பிடித்து காட்டியது
பெண் : நான்தான் உன் தலையணைகள் என்னோடு தூங்காது
காதலின் தலைவலிகள் கண் போல தூங்காது

சித்தன்ன வாசல் ஓவியம்
உனைப் போல நடக்காது
சிற்றெறும்பு கூட்டம் கூட
உன்னை போல கடிக்காது

உள்ளங்கை வானில் என் முகம் பார்த்து
அன்பே பாதி இரவில் வேர்த்தேன்
ஆண் : மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது
கண்ணோடு கண் கலக்கும் காதல் இது

உன் அழகை பாடச் சொன்னால்
மலையும் நதியும் பாடாதா
உன் பேரை எழுத சொன்னால்
மேகம் நிலவில் எழுதாதா

நீரில் விழும் சூரியனை
காதல் கையில் அள்ளி வரும்
பனித் துளியில் உலகத்தையே
காதல் பூக்க செய்து விடும்

பூமியெனும் பூப்பறித்து
காதல் சொல்லி புள்ளி வைப்போம்
உயிரை மட்டும் வாகனமாய்
காதலுக்கு அனுப்பிடுவோம்

விண்மீனை மின்னல் வலையில்
அள்ளி வந்து தருவேன்
என் நெஞ்சில் உன்னை தாங்கி
ஏழு ஜென்மம் வருவேன்

பூத்து கிடக்கிற பனி மலை அள்ளி
செய்தேன் உனக்கொரு காதல் பள்ளி
பெண் : மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது
கண்ணோடு கண் கலக்கும் காதல் இது

உன் அழகை பாடச் சொன்னால்
மலையும் நதியும் பாடாதா
உன் பேரை எழுத சொன்னால்
மேகம் நிலவில் எழுதாதா

முகவரி கேட்டு தினம் வானவில் வருமே
உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே
பெண் : ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன்
உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன்


Movie/Album name: James Pandu

Movie Summary James Pandu is a 2000 Tamil action film about a tough, principled man who clashes with a local rowdy and fights to protect his family and loved ones.

Song Credits - Song: Un Azhagai - Film: James Pandu (2000) - Language: Tamil

Musical Style Melodic romantic duet typical of early 2000s Tamil film music, with lush string arrangements and a soft, flowing rhythm.

Raga Details Information not available.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists