Idaiyinil Oru Dhooram

2022
Lyrics
Language: English

Male : Idaiyinil oru dhooram…!
Imaigalil siru baaram…!
Irulinai verikkiren…!
Iravugal verukkiren…!

Male : Idaiveli adhu koodum…!
Inaithida viral thedum…!
Irudhayam muzhuvadhum
Iraiyadhu pol ival mugamae

Male : Isaiyinai pol inithidumae
Ival kuralae…!
Idhazhagalie ini tamizh pol
Izhaindhidumae
Ival peyarae…!

Male : Indro yen dhoorangal?
Innum yen baarangal?
Irulinai vilakkidu pennae
Iru vizhi niraindhidu kannae…
Irudhayam ilakkidu konjam…
Irudhiyil un vasam thanjam
Irandoru manithuli vendam..
Iru jenmam unnudan vendum
Idhamai siru sol podhum…
Imayangal adaindhida koodum…!

Male : Inam kaanaa irukkam…
Idaikkaala odhukkam…
Idhuvum kadandhu pogum…!
Iyakkangal thodarum…
Iyalbugal thirumbum…
Inidhaai manidham maarum…!

Male : Iru nenjam inaindhidavae
Idaiveligal kuraindidum idaiyae…
Idhu kaadhal soozh puvidhan

Male : Irulinai vilakkidu pennae
Iru vizhi niraindhidu kannae…
Irudhayam ilakkidu konjam…
Irudhiyil un vasam thanjam
Irandoru manithuli vendam..
Iru jenmam unnudan vendum
Idhamai siru sol podhum…
Imayangal adaindhida koodum…!


Language: Tamil

பாடல் ஆசிரியர் : ராஜஸீலா ராஜராஜன்

ஆண் : இடையினில் ஒரு தூரம்
இமைகளில் சிறு பாரம்…!
இருளினை வெறிக்கிறேன்…!
இரவுகள் வெறுக்கிறேன்…!

ஆண் : இடைவெளி அது கூடும்…!
இணைத்திட விரல் தேடும்…!
இருதயம் முழுவதும்
இரையது போல் இவள் முகமே

ஆண் : இசையினை போல் இனித்திடுமே
இவள் குரலே…! இதழ்களிலே
இனி தமிழ் போல் இழைந்திடுமே
இவள் பெயரே…!

ஆண் : இன்றே ஏன் தூரங்கள்?
இன்னும் ஏன் பாரங்கள்?
இருளினை விலக்கிடு பெண்ணே…
இரு விழி நிறைந்திடு கண்ணே…

ஆண் : இருதயம் இளக்குது கொஞ்சம்…
இறுதியில் உன் வசம் தஞ்சம்
இரண்டொரு மணித்துளி வேண்டாம்..
இரு ஜென்மம் உன்னுடன் வேண்டும்
இதயமாய் சிறு சொல் போது…
இமயங்கள் அடைந்திட கூடும்…!

ஆண் : இனம் காணா இறுக்கம்…
இடைக்கால ஒதுக்கம்…
இதுவும் கடந்து போகும்…!
இயக்கங்கள் தொடரும்…
இயல்புகள் திரும்பும்…
இனிதாய் மனிதன் மாறும்…!

ஆண் : இரு நெஞ்சம் இணைந்திடவே
இடைவெளிகள் குறைந்திடும் இடையே…
இது காதல் சூழ் புவிதான்

ஆண் : இருளினை விளக்கிடு பெண்ணே…
இரு விழி நிறைந்திடு கண்ணே…
இருதயம் இலக்குது கொஞ்சம்…
இருதியில் உன் வாசம் தஞ்சம்
இரண்டொரு மணித்துளி வேண்டாம்..
இரு ஜென்மம் உன்னுடன் வேண்டும்
இதயம் சிறு சொல் போது…
இமயங்கள் அடைந்திட கூடும்…!


Movie/Album name: Konjam Pesinaal Yenna
Artists