Thazhampoove

1963
Lyrics
Language: English

Male : Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu
Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu

Female : Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu
Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu

Male : Paadal suvaiyae panivaai malarae
Bayamaen varugirathu
Paadal suvaiyae panivaai malarae
Bayamaen varugirathu

Female : Ilam paruvathin aasai uruvathil yeri
Bayam pol therigirathu
Ilam paruvathin aasai uruvathil yeri
Bayam pol therigirathu

Male : Yelam kuzhalaai ilagiya nenjam
Edhaiyoo nenaikiradhu
Yelam kuzhalaai ilagiya nenjam
Edhaiyoo nenaikiradhu

Female : Adhu naalum pazhagum
Naalaiya poluthai
Ninaithae parakkirathu..
Adhu naalum pazhagum naalaiya poluthai
Ninaithae parakkirathu..

Male : Poorana nilavin thoranam yeno
Punnagai purigirathu
Female : Adhil kaaranam paadhi kaariyam paadhi
Kadhaiyaai varugirathu
Adhil kaaranam paadhi kaariyam paadhi
Kadhaiyaai varugirathu

Male : Ilamai thirandu thanimai nirainthu
Idhayam malargirathu
Female : Adhil uyirgal irandum pazhagiya pinnae
Uravum purigiradhu

Male : Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu

Female : Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu


Language: Tamil

ஆண் : தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது
தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது

பெண் : அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது

ஆண் : பாடல் சுவையே பனிவாய் மலரே
பயமேன் வருகிறது
பாடல் சுவையே பனிவாய் மலரே
பயமேன் வருகிறது

பெண் : இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி
பயம் போல் தெரிகிறது
இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி
பயம் போல் தெரிகிறது

ஆண் : ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது
ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது

பெண் : அது நாளும் பழகும்
நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது….
அது நாளும் பழகும்
நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது….

ஆண் : பூரண நிலவின் தோரணம் ஏனோ
புன்னகை புரிகிறது
பெண் : அதில் காரணம் பாதி காரியம் பாதி
கதையாய் வருகிறது
அதில் காரணம் பாதி காரியம் பாதி
கதையாய் வருகிறது

ஆண் : இளமை திரண்டு தனிமை நிறைந்து
இதயம் மலர்கிறது
பெண் : அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே
உறவும் புரிகிறது

ஆண் : தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது

பெண் : அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது


Movie/Album name: Ratha Thilagam

Song Summary

"Thazhampoove" is a melodious Tamil song from the 1963 film Ratha Thilagam, a classic drama featuring romance and emotional depth.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(Information not available for this specific song.)

Scene Context in the Movie

The song is likely a romantic duet or solo expressing love and longing, possibly picturized in a serene setting to enhance its emotional impact.

Would you like additional details on the film or music?


Artists