Poovinai

2009
Lyrics
Language: English

Poovinai thiranthu kondu
Poi ozhindha vaasamae
Poovudan marubadiyum
Unakkenna snehamae

Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae

Vidhi endra aatrilae
Midhakkindra ilaigal naam

Nadhi vazhi pogindrom
Endha karai sergindrom
Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae

…………………………….

Thandavaalam pakkam pakkam
Thottu kolla nyaayam illai
Neeyum naanum pakkam pakkam
Katti kolla sondham illai

Vaasanai theendida ninaikkiraai
Adhu vasappada povathillai
Vaanukkum boomikkum endrumae
Mazhai uravugal theervathillai…ee….

Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae

Idhaya koottai pootti konden
Kadhavai thatti kalagam seidhaai
Kadhavai pootti ullae sendren
Kangal vazhiyae meendum vandhaai

Varushangal maariya podhilum
Pudhu vasanthangal varuvadhundu
Vaazhkaiyil kalaigindra uravugal
Pudhu vadivaththil malarvathundu….

Poovinai thiranthu kondu
Poi ozhindha vaasamae
Poovudan marubadiyum
Unakkenna snehamae

Vidhi endra aatrilae
Midhakkindra ilaigal naam


Language: Tamil

பூவினை திறந்து கொண்டு
போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும்
உனக்கென்ன சிநேகமே

காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமே

விதி என்ற ஆற்றிலே
மிதக்கின்ற இலைகள் நாம்

நதி வழி போகின்றோம்
எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமே

தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள நியாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை

வாசனை தீண்டிட நினைக்கிறாய்
அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே
மழை உறவுகள் தீர்வதில்லை....ஈ.....

காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமே....ஏ....

இதய கூட்டை பூட்டிக்கொண்டேன்
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

வருசங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு....
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு

பூவினை திறந்து கொண்டு
போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும்
உனக்கென்ன சிநேகமே

விதி என்ற ஆற்றிலே
மிதக்கின்ற இலைகள் நாம்


நதி வழி போகின்றோம்
எந்த கரை சேர்கின்றோம்

ஆஆகா ஆஹாஹா ஆஅ....
ஆண் : ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ஹீம் ஹும்ம்ம்...


Movie/Album name: Anandha Thandavam

Movie Summary: Anandha Thandavam is a 2009 Tamil romantic drama about a young man who falls in love with a woman from a wealthy family, and the emotional and social struggles they face in trying to unite against family opposition.

Song Credits: - Song: Poovinai - Film: Anandha Thandavam (2009) - Composer: G. V. Prakash Kumar - Lyricist: Na. Muthukumar - Singers: Karthik, Shreya Ghoshal

Musical Style: Melodic romantic duet with a soft, orchestral-leaning arrangement typical of G. V. Prakash Kumar's late-2000s work, blending light classical touches with contemporary film melody.

Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, expressing the blossoming of love and mutual longing between the characters.


Artists