
Thaajaa panninaa thaan
Indha rojaa sirikkumnaa
Naan thaajaa pannuren
Thaajaa panninaa thaan
Indha rojaa sirikkumnaa
Naan thaajaa pannuren
Indha geethaavukku thodhaa ippo
Yaedhaavadhu sollanumnaa enna pannuven
Indha geethaavukku thodhaa ippo
Yaedhaavadhu sollanumnaa enna pannuven
Thaajaa panninaa thaan
Indha rojaa sirikkumnaa
Naan thaajaa pannuren
Unakku piditha cinemaa
Nam uravai kedukka varumaa
Unakku piditha cinemaa
Nam uravai kedukka varumaa
{Kanavan muzhithirukka
Manaivi muraithirukka
Kalagam moottivida thagumaa} (2)
Enakku maradhi adhigam
Irukku unakkum theriyum
Enakku maradhi adhigam
Irukku unakkum theriyum
Thavaru nadandhadharkkum
Tharunam kadandhadharkkum
Dhandanai kodutha varai podhum
Aahaa podhum.. aahaa podhum…
Thaajaa panninaa thaan
Indha rojaa sirikkumnaa
Naan thaajaa pannuren
Indha geethaavukku thodhaa ippo
Yaedhaavadhu sollanumnaa enna pannuven
Iduppu madippai thodavo
Sirippu mootti vidavo
Hehhe hehehae… hehhe hehehae…
Iduppu madippai thodavo
Sirippu mootti vidavo
Kulukkum idai nadandhu
Valikkum idam arindhu
Udambai amukkivida varavo
Valaiyal karathai thodavo
Viralai sodukki vidavo
Unakku piditha padi nadakkum adimaiyadi
Urudhi mozhi ezhudhi tharavo
Aahaa tharavo… aahaa atharavo…
Thaajaa panninaa thaan
Indha rojaa sirikkumnaa
Naan thaajaa pannuren
Indha geethaavukku thodhaa ippo
Yaedhaavadhu sollanumnaa enna pannuven
Padukkai virikkum neram
Pazhasu marandhu pogum
Padukkai virikkum neram
Pazhasu marandhu pogum
Sivakka sivakka ondru
Kodukka kodukka indru
Irukkum kobam vidai koorum
Vilakkai anaithu pottu vidiya vidiya paattu
Padikka thodangiyadhum paadam vilangiyadhum
Mudikka mudikka innum kaetkum
Aahaa kaetkum… aahaa kaetkum…
Thaajaa panninaa thaan
Indha rojaa sirikkumnaa
Naan thaajaa pannuren
Indha geethaavukku thodhaa ippo
Yaedhaavadhu sollanumnaa enna pannuven
Thaajaa panninaa thaan
Indha rojaa sirikkumnaa
Naan thaajaa pannuren ..thaajaa pannuren
டி. எம். சௌந்தரராஜன்
தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
உனக்கு பிடித்த சினிமா
நம் உறவைக் கெடுக்க வருமா
உனக்கு பிடித்த சினிமா
நம் உறவைக் கெடுக்க வருமா
{கணவன் முழித்திருக்க
மனைவி முறைத்திருக்க
கலகம் மூட்டி விட தகுமா} (2)
எனக்கு மறதி அதிகம்
இருக்கு உனக்கும் தெரியும்
எனக்கு மறதி அதிகம்
இருக்கு உனக்கும் தெரியும்
தவறு நடந்ததற்கும்
தருணம் கடந்ததற்கும்
தண்டனை கொடுத்தவரை போதும்
ஆஹா போதும் ஆஹா போதும்
தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
இடுப்பு மடிப்பை தொடவோ
சிரிப்பு மூட்டி விடவோ
ஹிஹ்ஹி ஹிஹிஹே.....ஹிஹ்ஹி ஹிஹிஹே.....
இடுப்பு மடிப்பை தொடவோ
சிரிப்பு மூட்டி விடவோ
குலுக்கும் இடை நடந்து
வலிக்கும் இடம் அறிந்து
உடம்பை அமுக்கி விட வரவோ
வளையல் கரத்தை தொடவோ
விரலை சொடுக்கி விடவோ
உனக்கு பிடித்தபடி நடக்கும் அடிமையடி
உறுதிமொழியை எழுதி தரவோ
ஆஹா தரவோ ஆஹா தரவோ
தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
படுக்கை விரிக்கும் நேரம்
பழசு மறந்து போகும்
படுக்கை விரிக்கும் நேரம்
பழசு மறந்து போகும்
சிவக்க சிவக்க ஒன்று
கொடுக்க கொடுக்க இன்று
இறுக்கம் போகும் விடைக்கூறும்
விளக்கு அணைத்து போட்டு விடிய விடிய பாட்டு
படிக்க தொடங்கியதும் பாடம் விளங்கியதும்
முடிக்க முடிக்க இன்னும் கேட்கும்
ஆஹா கேட்கும் ஆஹா கேட்கும்
தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
தாஜா பண்ணுறேன்
Movie Summary: Dr. Siva (1975) is a Tamil drama starring Sivaji Ganesan in the title role as a dedicated doctor, alongside Manjula and Vanisri, dealing with themes of medical ethics and family conflict.
Song Credits: - Song: Taaja Panni - Movie: Dr. Siva (1975) - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: A light-hearted, folk-flavored romantic melody typical of M. S. Viswanathan's 1970s Tamil film compositions.
Key Artists Involved: - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers) - Sivaji Ganesan (on-screen)
Scene Context: A playful romantic duet picturized on Sivaji Ganesan and the female lead.