Un Radhaiyai Paa

1974
Lyrics
Language: English

Female : Un rathaiyai paar bodhaiyilae kannaa
Naan raapagalaa yaengukindra pennaa
Un rathaiyai paar bodhaiyilae kannaa
Naan raappagalaa yaengukindra pennaa

Female : Unakkum enakkum ragasiyangal onnaa
Unakkum enakkum ragasiyangal onnaa
Nee oorariya maalaiyittaa ennaa

Female : Un rathaiyai paar bodhaiyilae kannaa
Naan raappagalaa yaengukindra pennaa

Female : Antha aayarpaadi kannan
Gopika sthrigalai azha vachchaan
Intha aaduthurai kannan
Intha sundharavalli naachchiyaara azha vachchuttaan

Female : Naan azhuthaathaan unakku santhosamnaa
Unakkaga naan azhugiraen azhigiraen
Kannaa unakkaga naan mattumaa azharaen
Ennoda saernthu
En naathaswaramum azhuthae ketkiriyaa

Female : Kannaa katcheriyil
Pala raagam vaasichcha ennai
Vaazhkkaiyilae mugaari raagaththai
Mattumae vaasikka vachuttiyae
Unnai eppadi ennaala marakka mudiyum kannaa

Female : Unnai marappatharkku
Kudikkanumaa kallu
Un ninaippai vida
Bodhai undo sollu

Female : Naan ninaikkirappo
Neril vanthu nillu
Rompa kodumaiyappaa
Manmathanin villu

Female : Un rathaiyai paar bodhaiyilae kannaa
Naan raappagalaa yaengukindra pennaa

Female : Kannaa paanjaali kaththunappo
Podavaiyoda vanthae
Kajenthiran kaththurappo
Karudanoda vantahe

Female : Intha sundharavalli kaththurappo
Thaviloda vaayaen
Kannaa kanna kanna

Female : Enna thavilapola nee nenachchu nesi
Nallaa thazhuvikittu thaalaththoda vaasi
Un inimaikkellaam naanthaanae raasi
Ennai tholaikkuthaiyyaa thanimaiyennum oosi

Female : Enkittae olinju vilaiyaadariyaa
Nee enga ponaalum unna naan vidamaattaen
Kannaa kanna kanna


Language: Tamil

பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா
உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

பெண் : உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா
உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா
நீ ஊரறிய மாலையிட்டா என்னா……

பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

பெண் : அந்த ஆயர்பாடி கண்ணன்
கோபிகா ஸ்திரீகளை அழ வச்சான்
இந்த ஆடுதுறை கண்ணன்
இந்த சுந்தரவல்லி நாச்சியார அழ வச்சுட்டான்

பெண் : நான் அழுதாதான் உனக்கு சந்தோஷம்னா
உனக்காக நான் அழுகிறேன் அழுகிறேன்
கண்ணா உனக்காக நான் மட்டுமா அழறேன்
என்னோட சேர்ந்து
என் நாதஸ்வரமும் அழுதே கேட்கிறியா

பெண் : கண்ணா கச்சேரியில்
பல ராகம் வாசிச்ச என்னை
வாழ்க்கையிலே முகாரி ராகத்தை
மட்டுமே வாசிக்க வச்சுட்டியே
உன்னை எப்படி என்னால மறக்க முடியும் கண்ணா

பெண் : உன்னை மறப்பதற்கு
குடிக்கணுமா கள்ளு
உன் நினைப்பை விட
போதை உண்டோ சொல்லு

பெண் : நான் நினைக்கிறப்போ
நேரில் வந்து நில்லு
ரொம்ப கொடுமையப்பா
மன்மதனின் வில்லு…….

பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

பெண் : கண்ணா பாஞ்சாலி கத்துனப்போ
பொடவையோட வந்தே
கஜேந்திரன் கத்துறப்போ
கருடனோட வந்தே…

பெண் : இந்த சுந்தரவல்லி கத்துறப்போ
தவிலோட வாயேன்
கண்ணா……..கண்ணா……..கண்ணா……..

பெண் : என்ன தவிலப்போல நீ நெனச்சு நேசி
நல்லா தழுவிகிட்டு தாளத்தோட வாசி
உன் இனிமைக்கெல்லாம் நான்தானே ராசி
என்னை தொளைக்குதய்யா தனிமையென்னும் ஊசி

பெண் : என்கிட்டே ஒளிஞ்சு விளையாடறியா
நீ எங்க போனாலும் உன்ன நான் விடமாட்டேன்
கண்ணா……..கண்ணா……..கண்ணா……..


Movie/Album name: Pandhattam

Movie Summary Pandhattam (1974) is a Tamil film centered on family and domestic life, with the title referring to a traditional household gathering or festive occasion.

Song Credits - Song: Un Radhaiyai Paa - Year: 1974 - Movie: Pandhattam

Musical Style A melody-driven Tamil film song characteristic of the 1970s cinema style, blending light classical melodic phrasing with orchestral accompaniment typical of the era.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists