
Aathoram thoppukullae
Aththaanai sandhikkathan
Aasai vechen
Aalaana saedhi solli
Adaiyaalam kattathaane
Aasai vechen
Kanagambaram eduthu
Kaiyaala nee thoduthu
Pinnaala vechivida
Aasai vechen
Mariyaadhai ellama
Machaane unnai pesi
Maaroda mallukatta
Aasai vechen
Athanaiyum poiyaachu raasa
Othaiyila nikkuthindha rosaa
Maaralavula thanniyila
Manja theichu naan kulikka
Marainjirunthu neeyum pakka
Aasai vechen
Pasuva pola mella vandhu
Kosuvathaiyum nee iluthu
Kusumbhu panna venuminnu
Aasai vechen
Kuthaatha mullu kuthi
Kudhikaalu valikkudhunnu
Madi melae kaalai poda
Aasai vechen
Athanaiyum poiyaachu raasa
Othaiyila nikkuthindha rosaa
Aathoram thoppukullae
Aththaanai sandhikkathan
Aasai vechen
Aalaana saedhi solli
Adaiyaalam kattathaane
Aasai vechen
Maekattu moolaiyila
Megam karukkaiyile
Sukku thanni vechithara
Aasai vechen
Macham kulirugira
Maargzhi maasathula
Machaanai thottu thoongha
Aasai vechen
Maaman kattum vaettiyilae
Manja karai ennadhunnu
Mandhaiyila ninnu solla
Aasai vechen
Rettikulam aasarikku
Pottiyila panam koduthu
Rettai thottil seiya solla
Aasai vechen
Athanaiyum poiyaachu raasa
Othaiyila nikkuthindha rosaa
Athaanin iduppukku
Annakayiru katta
Aasaivechen
Narukkaana dhegathukku
Nallennai theichuvidu
Aasai vechen
Venneerai kodhikka vechu
Machaanai kulikka vechu
Maarappu nanaiyathaanae
Aasai vechen
Maanthoppil kattilittu
Manam pola thottuthottu
Maaman kooda pesida than
Aasai vechen
Athanaiyum poiyaachu raasa
Othaiyila nikkuthindha rosaa
Aathoram thoppukullae
Aththaanai sandhikkathan
Aasai vechen
Aalaana saedhi solli
Adaiyaalam kattathaane
Aasai vechen
: ஸ்வர்ணலதா
தேவா
வைரமுத்து
ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்......
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்......
கனகாம்பரம் எடுத்து
கையால நீ தொடுத்து
பின்னால வச்சிவிட
ஆசை வச்சேன்.....
மரியாதை இல்லாம
மச்சானே உன்னை பேசி
மாரோட மல்லுக்கட்ட
ஆசை வச்சேன்.....
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
மாரளவு தண்ணியில
மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க
மறைஞ்சிருந்து நீயும் பாக்க
ஆசை வச்சேன்...
பசுவப் போல மெல்ல வந்து
கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்பு பண்ண வேணுமின்னு
ஆசை வச்சேன்
உள்ளூரு சந்தையில
எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித்தர
ஆசை வச்சேன் .....
குத்தாத முள்ளு குத்தி
குதிக்காலு வலிக்குதுன்னு
மடி மேல காலைப் போட
ஆசை வச்சேன்.....
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்...
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்....
மேக்காட்டு மூலையில
மேகம் கருக்கையிலே
சுக்குத் தண்ணி வச்சித்தர
ஆசை வச்சேன்....
மச்சும் குளிருகிற
மார்கழி மாசத்துல
மச்சானை தொட்டுத் தூங்க
ஆசை வச்சேன்
மாமன் கட்டும் வேட்டியில
மஞ்சக் கறை என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல
ஆசை வச்சேன்...
ரெட்டிகுளம் ஆசாரிக்கு
பொட்டியில பணம் கொடுத்து
ரெட்டைத் தொட்டில்
செய்யச் சொல்ல ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக்கயிறு கட்ட
ஆசை வச்சேன்
நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ணெய் தேய்சுவிட
ஆசை வச்சேன்
வெந்நீரை கொதிக்க வச்சு
மச்சானை குளிக்க வச்சு
மாராப்பு நனையத்தானே
ஆசை வச்சேன்....
மாந்தோப்பில் கட்டிலிட்டு
மனம் போல தொட்டுத்தொட்டு
மாமன் கூட பேசிடத்தான்
ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்.......
Movie Summary Panchalankuruchi is a 1996 Tamil action drama set in a rural backdrop, revolving around village rivalry, honour, and justice, with the hero confronting oppressive forces in his community.
Song Credits - Song: Aathoram Thoppukkulla - Movie: Panchalankuruchi - Year: 1996 - Language: Tamil
Musical Style Folk-based Tamil film song with a rustic, rhythmic flavour typical of village-oriented soundtracks.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.