Sanmaargamae illaa

1947
Lyrics
Language: English

Sanmaargamae illaa
Samooga paeyin sadhiyaalae
En polum paedhai ethanai
Paerullaaro puvimaelae
Sanmaargamae illaa
Samooga paeyin sadhiyaalae
En polum paedhai ethanai
Paerullaaro puvimaelae

En vaazhkkai thunaiyaam
Naadhan irandhaar adhu en kuttramaa
Kannae illaadha mooda kayavar
Seidha sadhiyaalae
Pennaaga yaen pirandhen
Paei chamoogam naduvae naan

Maangalyam kungumam malar
Yaavum izhandhae
Maariyadho mana unarchiyum
Uyirum thaanae uyirum thaanae


Language: Tamil

பி. லீலா

சன்மார்க்கமே இல்லா
சமூகப் பேயின் சதியாலே
என் போலும் பேதை எத்தனை
பேருள்ளாரோ புவிமேலே
சன்மார்க்கமே இல்லா
சமூகப் பேயின் சதியாலே
என் போலும் பேதை எத்தனை
பேருள்ளாரோ புவிமேலே

என் வாழ்க்கைத் துணையாம்
நாதன் இறந்தார் அது என் குற்றமா
கண்ணே இல்லாத மூடக் கயவர்
செய்த சதியாலே
பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேய்ச் சமூகம் நடுவே நான்

மாங்கல்யம் குங்குமம் மலர்
யாவும் இழந்தே
மாறியதோ மன உணர்ச்சியும்
உயிரும் தானே உயிரும் தானே


Movie/Album name: Paithiyakkaran

Artists