Iruthalai Kolli

2022
Lyrics
Language: English

Hae ye ye
Irudhalai kolli erumbukku
Orudhalaik kaadhal vandhadhae!
Irudhalai kolli erumbukku
Orudhalaik kaadhal vandhadhae!

Thannai thaanae
Malaiyil eriyum
Sooriyanai polae
Naanae ennai
Erindhu kondaen
Nachellaik kullae

Malaiyil vizhundha sooriyanai
Malaigal thalluvadhillai
Allik kolluvaayo
Thallich selvaayo
Solli chelladi nachellai

Theda sellum

Hae
Pattaamboochidhaan kaadhal
Kitta chella thathi thaavum
Thuratha thuratha dhooram pogum

Hae
Chalavaikkaari pol kaadhal
Inbathil ennai nanaikkiradhae
Thunbathil adithu thuvaikkiradhae

Thanadhu nizhalil
Thaan odhungaadha
Virutcham polae
Enadhu kaadhalil
Naan odhungavae idamillaiyae
Aiyo kaadhal
Amazon kaadu
Ullae nuzhaivadhu elidhu
Veliyae varuvadhu kadidhu

Hae hae hae
Kaathiruppudhaan kaadhal
Pipravari muppadhukkaaga
Natchathirangalin virpanaikkaaga

Eekkal ponradhu kaadhal
Kaniyilum vaayai vaikkiradhae
Kaayathin meedhum moikkiradhae

Kaatru veliyin
Ozone koorai kizhisal polae
Kaadhal kizhitha
Idhayam thaikkavae vazhiyillaiyae
Aiyo kaadhal
Amazon kaadu
Ullae nuzhaivadhu elidhu
Veliyae varuvadhu kadidhu

Irudhalai kolli erumbukku
Orudhalaik kaadhal vandhadhae!
Irudhalai kolli erumbukku
Orudhalaik kaadhal vandhadhae!

Thannai thaanae
Malaiyil eriyum
Sooriyanai polae
Naanae ennai
Erindhu kondaen
Nachellaik kullae

Malaiyil vizhundha sooriyanai
Malaigal thalluvadhillai
Allik kolluvaayo
Thallich selvaayo
Solli chelladi nachellai

Theda sellum


Language: Tamil

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

வைரமுத்து

ஹே ஏய் ஏய்...
இருதலைக் கொள்ளி எறும்புக்கு
ஒருதலைக் காதல் வந்ததே!
இருதலைக் கொள்ளி எறும்புக்கு
ஒருதலைக் காதல் வந்ததே!

தன்னைத் தானே
மலையில் எறியும்
சூரியனைப் போலே
நானே என்னை
எறிந்து கொண்டேன்
நச்செள்ளைக் குள்ளே

மலையில் விழுந்த சூரியனை
மலைகள் தள்ளுவதில்லை
அள்ளிக் கொள்ளுவாயோ
தள்ளிச் செல்வாயோ
சொல்லிச் செல்லடி நச்செள்ளை

தேட செல்லும் ...

ஹே பட்டாம்பூச்சிதான் காதல்
கிட்டச் செல்ல தத்தித் தாவும்
துரத்தத் துரத்த தூரம் போகும்
ஹே ஹே தூரம் போகும்

ஹே சலவைக்காரி போல் காதல்
இன்பத்தில் என்னை நனைக்கிறதே
துன்பத்தில் அடித்துத் துவைக்கிறதே

தனது நிழலில்
தான் ஒதுங்காத விருட்சம்போலே
எனது காதலில்
நான் ஒதுங்கவே இடமில்லையே
அய்யோ காதல்
அமேசான் காடு
உள்ளே நுழைவது எளிது
வெளியே வருவது கடிது

ஹே ஹே ஹே
காத்திருப்புதான் காதல்
பிப்ரவரி முப்பதுக்காக
நட்சத்திரங்களின் விற்பனைக்காக

ஈக்கள் போன்றது காதல்
கனியிலும் வாயை வைக்கிறதே
காயத்தின் மீதும் மொய்க்கிறதே

காற்று வெளியின்
ஓசோன் கூரைக் கிழிசல் போலே
காதல் கிழித்த
இதயம் தைக்கவே வழியில்லையே
அய்யோ காதல்
அமேசான் காடு
உள்ளே நுழைவது எளிது
வெளியே வருவது கடிது

இருதலைக் கொள்ளி எறும்புக்கு
ஒருதலைக் காதல் வந்ததே!
இருதலைக் கொள்ளி எறும்புக்கு
ஒருதலைக் காதல் வந்ததே!

தன்னைத் தானே
மலையில் எறியும்
சூரியனைப் போலே
நானே என்னை
எறிந்து கொண்டேன்
நச்செள்ளைக் குள்ளே

மலையில் விழுந்த சூரியனை
மலைகள் தள்ளுவதில்லை
அள்ளிக் கொள்ளுவாயோ
தள்ளிச் செல்வாயோ
சொல்லிச் செல்லடி நச்செள்ளை

தேட செல்லும் ...


Movie/Album name: Naatpadu Theral 2

Artists