Mannai Ellam Uyirgalakki

1973
Lyrics
Language: English

Mannai ellaam uyirgal aakki
Manidhan ennum paandam seidha maadhavanae
Mannai ellaam uyirgal aakki
Manidhan ennum paandam seidha maadhavanae

Un magimai solla vaarthai yaedhu govindhanae
Undhan maaya vithai yaar arivaar maadhavanae
Un magimai solla vaarthai yaedhu govindhanae
Undhan maaya vithai yaar arivaar maadhavanae

Pallam varum maedu varum paadhaiyil
Konjam paarthu ponaal perumai varum vaazhvinilae
Pallam varum maedu varum paadhaiyil
Konjam paarthu ponaal perumai varum vaazhvinilae
Vellam vandhu kondu pogum munnalae
Kaala vellam vandhu kondu pogum munnalae
Thiruvengadathai paarkka venum kannaalae
Thiruvengadathai paarkka venum kannaalae
Both : Thiruvengadathai paarkka venum kannaalae

{Thulli thulli oodum maadu podhi sumakkuma
Female : Thinam thulasi maalai anindhu kondaal
Thunbam nerungumaa} (2)
Male : Ullathilae avan irundhaal kurai irukkumaa
Namm ullathilae avan irundhaal kurai irukkumaa
Female : Andha ulagalanthavan thunai irundhaal bayamirukkumaa
Andha ulagalanthavan thunai irundhaal bayamirukkumaa
Both : Namakku bayam irukkumaa


Language: Tamil

மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே

உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே
உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

பள்ளம் வரும் மேடு வரும் பாதையில்
கொஞ்சம் பார்த்துப் போனால் பெருமை வரும் வாழ்விலே
பள்ளம் வரும் மேடு வரும் பாதையில்
கொஞ்சம் பார்த்துப் போனால் பெருமை வரும் வாழ்விலே
வெள்ளம் வந்து கொண்டு போகும் முன்னாலே
கால வெள்ளம் வந்து கொண்டு போகும் முன்னாலே
திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே
திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே
இருவர் : திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே

மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

{துள்ளி துள்ளி ஓடும் மாடு பொதி சுமக்குமா
பெண் : தினம் துளசி மாலை அணிந்துக் கொண்டால்
துன்பம் நெருங்குமா} (2)
ஆண் : உள்ளத்திலே அவன் இருந்தால் குறை இருக்குமா
நம் உள்ளத்திலே அவன் இருந்தால் குறை இருக்குமா
பெண் : அந்த உலகளந்தவன் துணையிருந்தால் பயமிருக்குமா
அந்த உலகளந்தவன் துணையிருந்தால் பயமிருக்குமா
இருவர் : நமக்கு பயம் இருக்குமா

மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே


Movie/Album name: Thirumalai Deivam

Movie Summary Thirumalai Deivam (1973) is a Tamil devotional film centered on Lord Venkateswara of Tirumala, depicting the legends and devotion surrounding the sacred hill shrine.

Song Credits - Song: Mannai Ellam Uyirgalakki - Movie: Thirumalai Deivam (1973) - Lyricist: Kannadasan - Music Director: Kunnakudi Vaidyanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A devotional (bhakti) song in the Carnatic-influenced film music tradition, with orchestration featuring veena, flute, and traditional percussion.

Scene Context The song appears as a devotional piece expressing reverence for the divine, praising the Lord as the force that animates all life on earth, in keeping with the film's overarching theme of devotion to Lord Venkateswara.


Artists