Sita

2022
Lyrics
Language: English

Raama raama
Seethaaa raama
Un naamathai
Manadhinil yetrinen

Seethaaa seethaaa
Undhan seethaa
Indru agni parichaiyum
Yerkkiren

Mugilaivittu
Mannodu vizhugayil
Mazhai neerin
Sutham endrum
Kettuppogumo

Unnaivittu
Pirindhaalum endhankarppu
Kuraiyaadhu endrum adhu
Udhirndhu pogumo

Neeyindri naanum
Naanindri neeyum
Vidindhaalum irulil
Moozhgitthaan saagindrom

Naanindri neeyum
Neeyindri naanum
Pirindhaalum nam
Ninaivil vaazhgirom

Lankesanin
Thuli nizhal kooda padavillai
Ellai meeri
Avan kangal engum varavillai
Sirai illai
Aval nandha vanam vaazhndhaalum
Vaazhndhaaiye sivan keezhae

Vidhiyin vilai enna
En uyirai koduthaal podhumaa?
Unaiyae katti sumandhaval
Kanneer unnil unarudhaa?

Valiyai kuraikka vazhiyai pidithen
Unaiyum vella
Indru agni satthiyam seigiren
Kottai tholaitha
Paravai pola
Naan koottukkum sellaamal
Nadu veedhiyil nirkkiren

Yaen idhu pole
Vedhanai enakku ingae
Seethaiyin vaazhkai
Vidaiyae illaa
Vidukadhai vidhi polae

Raama….aa..

Neeyindri naanum
Naanindri neeyum
Vidindhaalum irulil
Moozhgitthaan saagindrom

Naanindri neeyum
Neeyindri naanum
Pirindhaalum nam
Ninaivil vaazhgirom

Haaa… aaaa… aaaa…
Raama….aa…raama..


Language: Tamil

ஜி கே வி

சிவா பிரகாசம் எஸ்

ராமா ராமா
சீத்தா ராமா
உன் நாமத்தை
மனதினில் ஏற்றினேன்

சீத்தா சீத்தா
உந்தன் சீத்தா
இன்று அக்னி பரிட்சயம்
ஏற்கிறேன்

முகிலைவிட்டு
மண்ணோடு விழுகையில்
மழைநீரின் சுத்தம்
என்றும் கெட்டுப்போகுமோ?

உன்னைவிட்டு பிரிந்தாலும்
எந்தன்கர்ப்பு குறையாது
என்றும் அது உதிர்ந்து போகுமோ?

நீயின்றி நானும்
நானின்றி நீயும்
விடிந்தாலும் இருளில்
மூழ்கித்தான் சாகிறோம்

நானின்றி நீயும்
நீயின்றி நானும்
பிரிந்தாலும் நம்
நினைவில் வாழ்கிறோம்

லங்கேசனின்
துளி நிழல் கூட படவில்லை
எல்லை மீறி
அவன் கண்கள் எங்கு வரவில்லை
சிறை இல்லை
அவள் நந்த வானம் வாழ்ந்தாலும்
வாழ்ந்தாயே சிவன் கீழே

விதியின் விலை என்ன
என் உயிரைக் கொடுத்தால் போதுமா?
உனையே கட்டி சுமந்தவள்
கண்ணீர் உன்னில் உணருதா?

வலியைக் குறைக்க
வழியைப் பிடித்தேன்
உனையும் வெல்ல
இன்று அக்னி சத்தயம் செய்கிறேன்

கோட்டை துளைத்த
பறவை போல
நான் கூட்டுக்கும் செல்லாமல்
நடு வீதியில் நிற்கிறேன்

ஏன் இது போல
வேதனை எனக்கு இங்கே
சீதையின் வாழ்க்கை
விடையே இல்லா
விடுகதை விதி போலே

ராமா..ஆ...

நீயின்றி நானும்
நானின்றி நீயும்
விடிந்தாலும் இருளில்
மூழ்கித்தான் சாகிறோம்

நானின்றி நீயும்
நீயின்றி நானும்
பிறந்தாலும் நாம்
நினைவில் வாழ்கிறோம்

ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
ராமா….ஆ ..ராமா ...


Movie/Album name: Scene Number 62

Artists