Kuruvi Koottam Pola

1962
Lyrics
Language: English

Female : Kuruvi koottam pola nikkira
Poovammaa
Unnai kondu pogum purushan ingae
Yaarammaa

Female : Kuruvi koottam pola nikkira
Poovammaa
Unnai kondu pogum purushan ingae
Yaarammaa

Female : Aruvadaikku kaathu nikkira
Nellammaa
Nee aasai konda purushan perai
Chollammaa

Female : Kuruvi koottam pola nikkira
Poovammaa
Aa…aaa…aa…oo ooo…mm..mm

Female : Thalathalavena nadanamaadum
Thanneeril unnai kandaanaa
Thalathalavena nadanamaadum
Thanneeril unnai kandaanaa
Salakku salakku nadai nadandhu
Kaiyaal unnai thottaanaa
Salakku salakku nadai nadandhu
Kaiyaal unnai thottaanaa
Malamalavena alliyeduthu
Madiyil unnai vaithaanaa
Vandaada varum sendaaga
Unnai maarbil anaithu kondaanaa

Female : Kuruvi koottam pola nikkira
Poovammaa
Unnai kondu pogum purushan ingae
Yaarammaa

Female : Kuruvi koottam pola nikkira
Poovammaa
Aa…aaa…aa…oo ooo…mm..mm

Female : Aarodum ila neerodum
Vanna thaerodum indha kaattilae
Aarodum ila neerodum
Vanna thaerodum indha kaattilae
Yaarodu indru poraada
Enni thaedugindraai kaattrilae
Yaarodu indru poraada
Enni thaedugindraai kaattrilae
Pullaada thalai nellaada
Nadai thallaada varum ponnammaa
Puthaadai tharum athaanai
Kandu paditha paadam ennammaa

Female : Kuruvi koottam pola nikkira
Poovammaa
Unnai kondu pogum purushan ingae
Yaarammaa

Female : Kuruvi koottam pola nikkira
Poovammaa
Aa…aaa…aa…oo ooo…mm..mm

Female : Aadi odi unnai polae
Alaindhaval thaan naanammaa
Aadi odi unnai polae
Alaindhaval thaan naanammaa
Androru naal avarai kanden
Adangi vitten meenammaa
Androru naal avarai kanden
Adangi vitten meenammaa
Thaedi kidandha aasai mugathai
Therindhu kondadhu kannammaa
Andha thaeril indha silaiyai vaikka
Naalai paarthu sollammaa

Female : Kuruvi koottam pola nikkira
Poovammaa
Aa…aaa…aa…oo ooo…mm..mm


Language: Tamil

பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற
பூவம்மா
உன்னைக் கொண்டு போகும்
புருஷன் இங்கே
யாரம்மா

பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற
பூவம்மா
உன்னைக் கொண்டு போகும்
புருஷன் இங்கே
யாரம்மா

பெண் : அறுவடைக்குக் காத்து நிக்கிற
நெல்லம்மா
நீ ஆசை கொண்ட புருஷன் பேரைச்
சொல்லம்மா

பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற
பூவம்மா
ஆ…..ஆஅ…..ஆ….ஓ….ஓஒ…..ம்ம்….ம்ம்…

பெண் : தளதளவென நடனமாடும்
தண்ணீரில் உனைக் கண்டானா
தளதளவென நடனமாடும்
தண்ணீரில் உனைக் கண்டானா
சலக்கு சலக்கு நடை நடந்து
கையால் உன்னைத் தொட்டானா
சலக்கு சலக்கு நடை நடந்து
கையால் உன்னைத் தொட்டானா

பெண் : மளமளவென அள்ளியெடுத்து
மடியில் உன்னை வைத்தானா
வண்டாட வரும் செண்டாக
உன்னை மார்பில் அணைத்துக் கொண்டானா

பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற
பூவம்மா
உன்னைக் கொண்டு போகும்
புருஷன் இங்கே
யாரம்மா

பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற
பூவம்மா
ஆ…..ஆஅ…..ஆ….ஓ….ஓஒ…..ம்ம்….ம்ம்…

பெண் : ஆறோடும் இளநீரோடும்
வண்ணத் தேரோடும் இந்தக் காட்டிலே
ஆறோடும் இளநீரோடும்
வண்ணத் தேரோடும் இந்தக் காட்டிலே
யாரோடு இன்று போராட
எண்ணித் தேடுகின்றாய் காற்றிலே
யாரோடு இன்று போராட
எண்ணித் தேடுகின்றாய் காற்றிலே

பெண் : புல்லாடத் தலை நெல்லாட
நடை தள்ளாட வரும் பொன்னம்மா
புத்தாடை தரும் அத்தானைக்
கண்டு படித்த பாடம் என்னம்மா

பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற
பூவம்மா
உன்னைக் கொண்டு போகும்
புருஷன் இங்கே
யாரம்மா

பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற
பூவம்மா
ஆ…..ஆஅ…..ஆ….ஓ….ஓஒ…..ம்ம்….ம்ம்…

பெண் : ஆடி ஓடி உன்னைப் போல
அலைந்தவள்தான் நானம்மா
ஆடி ஓடி உன்னைப் போல
அலைந்தவள்தான் நானம்மா
அன்றொரு நாள் அவரைக் கண்டேன்
அடங்கி விட்டேன் மீனம்மா
அன்றொரு நாள் அவரைக் கண்டேன்
அடங்கி விட்டேன் மீனம்மா

பெண் : தேடிக்கிடந்த ஆசை முகத்தைத்
தெரிந்து கொண்டது கண்ணம்மா
அந்த தேரில் இந்த சிலையை வைக்க
நாளைப் பார்த்துச் சொல்லம்மா

பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற
பூவம்மா
ஆ…..ஆஅ…..ஆ….ஓ….ஓஒ…..ம்ம்….ம்ம்…


Movie/Album name: Kudumba Thalaivan

Movie Summary Kudumba Thalaivan (1962) is a Tamil family drama centered on a noble, hardworking patriarch who shoulders the responsibility of his large joint family, only to face betrayal, greed, and hardship from those he trusts, ultimately reaffirming the values of unity and moral integrity.

Song Credits - Song: Kuruvi Koottam Pola - Film: Kudumba Thalaivan (1962) - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic, folk-inflected film song in the Tamil light-classical tradition, with a warm, storytelling lilt suited to a family-themed narrative; the tune moves at a gentle, unhurried pace with simple rhythmic accompaniment.

Raga Details Not definitively documented.

Key Artists Involved - M. G. Ramachandran — lead actor (on whom the song is picturized) - K. V. Mahadevan — composer - Kannadasan — lyricist - T. M. Soundararajan and P. Susheela — playback singers

Scene Context The song is picturized on M. G. Ramachandran along with family members, expressing the joy of togetherness and the ideal of living as one united family — the sparrow-flock metaphor (kuruvi koottam) conveying harmony, sharing, and collective strength among kin.

Awards & Recognition Not documented.


Artists