Maalaiyittom Pongalittom

1970
Lyrics
Language: English

Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom
Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom
Kaaval thara vendumadi gangaiyamma
Engal kaalam vella vendumadi gangaiyamma

Devi unnai paarkka thedi varum bothu
Thirayai pottu maraikkuraaru poosaari
Nee kodutha boomi vilanju varum bothu
Yeghabogam pannuraaru aasaami
Nee kodutha boomi vilanju varum bothu
Yeghabogam pannuraaru aasaami

Avan nelathukaranaam
Rombha balathukaranaam
Avan nelathukaranaam
Rombha balathukaranaam
Nee ninaichiyinna avanumippo
Pozhaichirupaana
Nee ninaichiyinna avanumippo
Pozhaichirupaana

Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom

Vettai naaigaloru kaattu muyalaiyae
Virattudhu gangaiyamma amma
Virattudhu gangaiyamma
Female : Andha kaattu muyalippo
Vettai naaigaalai thurathuthu
Gangaiyamma amma thurathuthu gangaiyamma

Indha sakthi vandhadhunaale
Undhan bakthiyulladhanaale
Indha sakthi vandhadhunaale
Undhan bakthiyulladhanaale
Male : Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom

Kattai kooda koluthumadi
Un karppora thattu kayavar kottam ozhiyumadi
Un kann jadai pattu pattu

Veettu pennai kakakum padi
Neeye soodiya malarmottu
Both : Vellum kaalam vellum enbom
Aanai un melyittu
Male : Aanai un melyittu

Thaai paartha paarvaiyai thaan
Partha ullame thannai marandhadhamma
Sharmathin deivamae sakthi un
Kannilae marmam purindhadhamma

Sivandha un kangalaalae
Seeruvaai enadhu thaaye
Nadanthathum unmai thaaye
Nadappadhum nanmai thaaye

Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom
Kaaval thara vendumadi gangaiyamma
Engal kaalam vella vendumadi gangaiyamma


Language: Tamil

சங்கர் கணேஷ்

கண்ணதாசன்

மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்
மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்
காவல் தர வேண்டுமடி கங்கையம்மா
எங்கள் காலம் வெல்ல வேண்டுமடி கங்கையம்மா

மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்
காவல் தர வேண்டுமடி கங்கையம்மா
எங்கள் காலம் வெல்ல வேண்டுமடி கங்கையம்மா

தேவி உன்னைப் பார்க்க தேடி வரும்போது
திரையைப் போட்டு மறைக்குறாரு பூசாரி
நீ கொடுத்த பூமி விளைஞ்சு வரும்போது
ஏகபோகம் பண்ணுறாரு ஆசாமி
நீ கொடுத்த பூமி விளைஞ்சு வரும்போது
ஏகபோகம் பண்ணுறாரு ஆசாமி

அவன் நெலத்துகாரனாம்
ரொம்ப பலத்துக்காரனாம்
அவன் நெலத்துகாரனாம்
ரொம்ப பலத்துக்காரனாம்
நீ நினைச்சியின்னா அவனுமிப்போ
பொழைச்சிருப்பானா....
நீ நினைச்சியின்னா அவனுமிப்போ
பொழைச்சிருப்பானா............

மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்

வேட்டை நாய்களொரு காட்டு முயலையே
விரட்டுது கங்கையம்மா அம்மா
விரட்டுது கங்கையம்மா
பெண் : அந்தக் காட்டு முயலிப்போ
வேட்டை நாய்களைத் துரத்துது
கங்கையம்மா அம்மா துரத்துது கங்கையம்மா

இந்த சக்தி வந்ததெதனாலே
உந்தன் பக்தியுள்ளதனாலே
இந்த சக்தி வந்ததெதனாலே
உந்தன் பக்தியுள்ளதனாலே
ஆண் : மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்

காட்டைக் கூடக் கொளுத்துமடி
உன் கற்பூரத்தட்டு கயவர் கூட்டம் ஒழியுமடி
உன் கண் ஜாடை பட்டு பட்டு.......

வீட்டுப் பெண்ணைக் காக்கும்படி
நீ சூடிய மலர்மொட்டு
இருவர் : வெல்லும் காலம் வெல்லும் என்போம்
ஆணை உன் மேலிட்டு
ஆண் : ஆணை உன் மேலிட்டு

தாய் பார்த்த பார்வையைத்தான்
பார்த்த உள்ளமே தன்னை மறந்ததம்மா
தர்மத்தின் தெய்வமே சக்தி உன்
கண்ணிலே மர்மம் புரிந்ததம்மா

சிவந்த உன் கண்களாலே
சீறுவாய் எனது தாயே
நடந்ததும் உண்மை தாயே
நடப்பதும் நன்மை தாயே

மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்
காவல் தர வேண்டுமடி கங்கையம்மா
எங்கள் காலம் வெல்ல வேண்டுமடி கங்கையம்மா


Movie/Album name: Kaalam Vellum

Artists