Porumai Orunaal Pongi

1960
Lyrics
Language: English

Yen endru ketkavae
aal illai enbathaalae
Thaan endra agangaaram
thalai virithu aaduthada
Oonuruga ezhaigalin
ullam ellaam punaaga
Uyirodu kolbavanai kaalam
uyarvaai madhikuthada…aa..aa..

Porumai orunaal pongi ezhundhaal
boomi nadungumada
Kodumai puriyum paadhaganai
avan kuraigal vizhungamada
Kodumai puriyum paadhaganai
avan kuraigal vizhungamada

Porumai orunaal pongi ezhundhaal
boomi nadungumada

Kaalaiyaagi madhiyamaagi maalaiyaanadhu pala poludhu
Maalaiyaagi pagalum mudinthu
Irulum ponadhu pala iravu
Gnyaalam muluvadhumae
aalgindra kadhiron
Vaazhvellam oru naal vaazhvadhendraal
Dhinam theeradha veriyodu
Poraadum manidhan
Per aasai nilaithanai enendru solven

Porumai orunaal pongi ezhundhaal
boomi nadungumada

Maanam endrae mangai azhudhaal
Inbamendrae nagaippaanae
Vazhavayadhil seidha vinaiyai
Vaazhvu mudivil ninaipaanae

Thaanaaga sirippaan thaanaaga aluvaan
Kaanadha kanavum kaanbaanae
Avan aanaandha vaazhvendru eenangal thedi
Koonaagi oonaagi koodaagi poovaan

Porumai orunaal pongi ezhundhaal
boomi nadungumada
Kodumai puriyum paadhaganai
avan kuraigal vizhungamada


Language: Tamil

டி. ஆர். மஹாலிங்கம்

விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஏனென்று கேட்கவே
ஆளில்லை என்பதாலே
தானென்ற அகங்காரம்
தலைவிரித்து ஆடுதடா
ஊனுருக ஏழைகளின்
உள்ளமெல்லாம் புண்ணாக
உயிரோடு கொல்பவனைக் காலம்
உயர்வாய் மதிக்குதடா.ஆஅ ..

பொறுமை ஒருநாள்
பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா
கொடுமை புரியும் பாதகனை
அவன் குறைகள் விழுங்குமடா
கொடுமை புரியும் பாதகனை
அவன் குறைகள் விழுங்குமடா

பொறுமை ஒருநாள்
பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

காலையாகி மதியமாகி
மாலையானது பல பொழுது,
மாலையாகி பகலும் முடிந்து
இருளும் போனது பல இரவு
ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன்
வாழ்வெல்லாம்
ஒரு நாள் வாழ்வென்றதால்
தினம் தீராத வெறியோடு
போராடும் மனிதன்
பேராசை நிலைதனை
என்னென்று சொல்வேன்!

பொறுமை ஒருநாள்
பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

மானம் என்றே மங்கை அழுதால்
இன்பமென்றே நகைப்பானே
வால வயதில் செய்த வினையை
வாழ்வு முடிவில் நினைப்பானே

தானாகச் சிரிப்பான் தானாக அழுவான்
காணாத கனவும் காண்பானே
அவன் ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடித்
கூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே

பொறுமை ஒருநாள்
பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா
கொடுமை புரியும் பாதகனை
அவன் குறைகள் விழுங்குமடா


Movie/Album name: Rathinapuri Ilavarasi

Artists