Vandu Vizhi Valli

1974
Lyrics
Language: English

Velmurugaa muruga murugaa
Velmurugaa muruga murugaa
Velmurugaa muruga murugaa

Vandu vizhi valli magal
Kandu magizh kandhanukku
Kondu vanthaen tholil oru kaavadi
Naan kumbiduvaen shanmuganin sevadi

Vandu vizhi valli magal
Kandu magizh kandhanukku
Kondu vanthaen tholil oru kaavadi
Naan kumbiduvaen shanmuganin sevadi

Anbu nirai ullamodu
Then pazhani thedi varum
Anbu nirai ullamodu
Then pazhani thedi varum
Sembu nirai paalirukkum kaavadi
Idhu sera vendum aarumugan sevadi

Vel pidiththa velanukku vel kavadi
Tamil paal kudiththa paalanukku paal kaavadi
Vel pidiththa velanukku vel kavadi
Tamil paal kudiththa paalanukku paal kaavadi

Pannirendu kannanukku panneer kaavadi
Neeru pooththirukkum vannanukku pushpa

Aadi varum kaavadiyai thaedi varuvaan
Avan yaar azhaiththa pothilumae odi varuvaan

Paadi varum baktharidam naadi varuvaan
Avan ketta varam kettapadi kodi tharuvaan
Paadi varum baktharidam naadi varuvaan
Avan ketta varam kettapadi kodi tharuvaan

Oyilaaga vadivelan utkaarum ezhil vanna
Mayilaaga naan maara vendume
Maiyal thoondumae mugam thondrumae
Oyilaaga vadivelan utkaarum ezhil vanna
Mayilaaga naan maara vendume
Maiyal thoondumae mugam thondrumae

Gaana kuyilaaga isaipaadi kumaresan thudhi paadi
Thogai viriththaadi varum yaekkamae
Ennai thaakkumae athu thookkamae

Oru pothilum maravaathavan thiruppaathangal
Ninaivaargal ullam kalik kondaada ennumae
Bakthi pannumae koyil annumae pakkam
Irumathargal pudai soozhnthida varum naayagan thirumaeni
Tharsikka kann kollaa
Both : Inbamae chanthira bimbamae theerum thunbamae


Language: Tamil

வேல்முருகா முருகா முருகா
வேல்முருகா முருகா முருகா
வேல்முருகா முருகா முருகா

வண்டு விழி வள்ளி மகள்
கண்டு மகிழ் கந்தனுக்கு
கொண்டு வந்தேன் தோளில் ஒரு காவடி
நான் கும்பிடுவேன் ஷண்முகனின் சேவடி

வண்டு விழி வள்ளி மகள்
கண்டு மகிழ் கந்தனுக்கு
கொண்டு வந்தேன் தோளில் ஒரு காவடி
நான் கும்பிடுவேன் ஷண்முகனின் சேவடி

அன்பு நிறை உள்ளமொடு
தென் பழனி தேடி வரும்
அன்பு நிறை உள்ளமொடு
தென் பழனி தேடி வரும்
செம்பு நிறை பாலிருக்கும் காவடி
இது சேர வேண்டும் ஆறுமுகன் சேவடி ..

வேல் பிடித்த வேலனுக்கு வேல் காவடி
தமிழ் பால் குடித்த பாலனுக்கு பால் காவடி
வேல் பிடித்த வேலனுக்கு வேல் காவடி
தமிழ் பால் குடித்த பாலனுக்கு பால் காவடி

பன்னிரெண்டு கண்ணனுக்கு பன்னீர் காவடி
நீரு பூத்திருக்கும் வண்ணனுக்கு புஷ்ப காவடி

ஆடி வரும் காவடியை தேடி வருவான்
அவன் யார் அழைத்த போதிலுமே ஓடி வருவான்

பாடி வரும் பக்தரிடம் நாடி வருவான்
அவன் கேட்ட வரம் கேட்டபடி கோடி தருவான்
பாடி வரும் பக்தரிடம் நாடி வருவான்
அவன் கேட்ட வரம் கேட்டபடி கோடி தருவான்

ஒயிலாக வடிவேலன் உட்காரும் எழில் வண்ண
மயிலாக நான் மாற வேண்டுமே
மையல் தூண்டுமே முகம் தோன்றுமே
ஒயிலாக வடிவேலன் உட்காரும் எழில் வண்ண
மயிலாக நான் மாற வேண்டுமே
மையல் தூண்டுமே முகம் தோன்றுமே

கானக் குயிலாக இசைபாடி குமரேசன் துதி பாடி
தோகை விரித்தாடி வரும் ஏக்கமே
என்னை தாக்குமே அது தூக்கமே.....

ஒரு போதிலும் மறவாதவன் திருப்பாதங்கள்
நினைவார்கள் உள்ளம் களிக் கொண்டாட எண்ணுமே
பக்தி பண்ணுமே கோயில் அண்ணுமே பக்கம்
இருமாதர்கள் புடை சூழ்ந்திட வரும் நாயகன் திருமேனி
தரிசிக்க கண் கொள்ளா
இருவர் : இன்பமே சந்திர பிம்பமே தீரும் துன்பமே....

சேவற்கொடி தேவனுக்கு அரஹரோஹரா
செந்தூர் வாழ் கந்தனுக்கு அரஹரோஹரா
சேவற்கொடி தேவனுக்கு அரஹரோஹரா
செந்தூர் வாழ் கந்தனுக்கு அரஹரோஹரா

ஆறுபடை வீரனுக்கு அரஹரோஹரா
ஆரணங்கு அண்ணலுக்கு அரஹரோஹரா.....
ஆறுபடை வீரனுக்கு அரஹரோஹரா
ஆரணங்கு அண்ணலுக்கு அரஹரோஹரா.....


Movie/Album name: Magalukkaga

Movie Summary Magalukkaga (1974) is a Tamil film centered on family relationships and the struggles of a father who strives to secure a good future for his daughter.

Song Credits - Song: Vandu Vizhi Valli - Film: Magalukkaga - Year: 1974 - Lyricist: Not reliably available - Composer: Not reliably available - Singers: Not reliably available

Musical Style The song is a melodious Tamil film song of the early 1970s, typically featuring expressive playback singing and acoustic orchestration characteristic of the period.

Key Artists Involved - Music Director: Not reliably available - Lyricist: Not reliably available - Singers: Not reliably available

Scene Context Not reliably available.


Artists