Naan Paadam Solli

1978
Lyrics
Language: English

Naan paadam solli koduppaen
Unnai panthaattam odhaippaen

Naan paadam solli koduppaen
Chorus : Haa haa haa haa
Female : Unnai panthaattam odhaippaen
Chorus : Haa haa haa haa

Enniyathai mudippaen
Kanni vachchu pudippaen
Pombalaiyinnu ilichchaa
Palla rendum odaippaen
Vaadaa raja otta vaala aruppaen
Vaadaa raja otta vaala aruppaen

Azhagil naanoru lilly
Virumbum vaasanai malli
Unmaiyil en per alli
Chorus : Kodiyil oruththithaan villi

Naan
Chorus : Paadam solli koduppaen
Haa haa haa haa
Female : Unnai
Chorus : Panthaattam odhaippaen
Haa haa haa haa

Kottaikkul maan koottam vaazhugindrathu
Vettaikku naal paarththu vengai vanthathu
Chorus : Kottaikkul maan koottam vaazhugindrathu
Vettaikku naal paarththu vengai vanthathu

Maangal thiral vengai mirala
Mannippu ketgindra velaiyithu

Kattupattaal pizhaikkum
Kuttuppattaal vilangum
Kattupattaal pizhaikkum
Kuttuppattaal vilangum
Puriyum vannamaai eduththu eduththu
Theriyum vannamaai padiththu padiththu sol

Naan
Chorus : Paadam solli koduppaen
Haa haa haa haa
Female : Unnai
Chorus : Panthaattam odhaippaen
Haa haa haa haa

Ariyaamal vazhi maari vanthavaradi
Sariyaana mariyaathai thanthuvidadi
Chorus : Ariyaamal vazhi maari vanthavaradi
Sariyaana mariyaathai thanthuvidadi

Ilamai murukku ivarukkirukku
Eththanai thanthaalum thaanguvaaradi
Ilamai murukku ivarukkirukku
Eththanai thanthaalum thaanguvaaradi

Innum konjam koduththu
Mannan thannai thiruththu
nnum konjam koduththu
Mannan thannai thiruththu
Puriyum vannamaai eduththu eduththu
Theriyum vannamaai padiththu padiththu sol….

Naan
Chorus : Paadam solli koduppaen
Haa haa haa haa
Female : Unnai
Chorus : Panthaattam odhaippaen
Haa haa haa haa

Enniyathai mudippaen
Kanni vachchu pudippaen
Pombalaiyinnu ilichchaa
Palla rendum odaippaen
Vaadaa raja otta vaala aruppaen
Vaadaa raja otta vaala aruppaen


Language: Tamil

வாணி ஜெயராம்

நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்
உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன்

நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்
குழு : ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன்
குழு : ஹா ஹா ஹா ஹா

எண்ணியதை முடிப்பேன்
கண்ணி வச்சு புடிப்பேன்
பொம்பளையின்னு இளிச்சா
பல்ல ரெண்டும் ஒடைப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்

அழகில் நானொரு லில்லி
விரும்பும் வாசனை மல்லி
உண்மையில் என் பேர் அல்லி
குழு : கோடியில் ஒருத்திதான் வில்லி..

நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா

கோட்டைக்குள் மான் கூட்டம் வாழுகின்றது
வேட்டைக்கு நாள் பார்த்து வேங்கை வந்தது
குழு : கோட்டைக்குள் மான் கூட்டம் வாழுகின்றது
வேட்டைக்கு நாள் பார்த்து வேங்கை வந்தது

மான்கள் திரள வேங்கை மிரள
மன்னிப்பு கேட்கின்ற வேளையிது

கட்டுப்பட்டால் பிழைக்கும்
குட்டுப்பட்டால் விளங்கும்
கட்டுப்பட்டால் பிழைக்கும்
குட்டுப்பட்டால் விளங்கும்
புரியும் வண்ணமாய் எடுத்து எடுத்து
தெரியும் வண்ணமாய் படித்து படித்து சொல்.....

நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா

அறியாமல் வழி மாறி வந்தவரடி
சரியான மரியாதை தந்துவிடடி
குழு : அறியாமல் வழி மாறி வந்தவரடி
சரியான மரியாதை தந்துவிடடி

இளமை முறுக்கு இவருக்கிருக்கு
எத்தனை தந்தாலும் தாங்குவாரடி
இளமை முறுக்கு இவருக்கிருக்கு
எத்தனை தந்தாலும் தாங்குவாரடி

இன்னும் கொஞ்சம் கொடுத்து
மன்னன் தன்னை திருத்து
இன்னும் கொஞ்சம் கொடுத்து
மன்னன் தன்னை திருத்து
புரியும் வண்ணமாய் எடுத்து எடுத்து
தெரியும் வண்ணமாய் படித்து படித்து சொல்...

நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா

எண்ணியதை முடிப்பேன்
கண்ணி வச்சு புடிப்பேன்
பொம்பளையின்னு இளிச்சா
பல்ல ரெண்டும் ஒடைப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்


Movie/Album name: Alli Darbar

Movie Summary Alli Darbar (1978) is a Tamil film centered on a royal court (darbar) setting, involving intrigue and drama within a palace.

Song Credits - Song: Naan Paadam Solli - Year: 1978 - Movie: Alli Darbar

Musical Style Tamil film song of the late 1970s, characteristic of the era's cinematic compositions.

Scene Context The song is set within the film's palace/court backdrop.


Artists