Engalukkum Kaalam Varum

1961
Lyrics
Language: English

Female : ………………….

Male : ……………………..

Male & Female : { Engalukum
Kaalam varum kaalam vandhaal
Vaazhvu varum vaazhvu vandhaal
Anaivaraiyum vaazhavaipomae } (2)

Female : ………………………..

Female : { Valarum valarum
Endrae kaathirundhom
Malarum malarum
Endrae paarthirundhom } (2)

Female : Malar muthirnthu
Pinju varum valarndhavudan
Kaai kidaikum kaaigal ellam
Kanindhavudan pazham paripomae

Male & Female : Engalukum
Kaalam varum kaalam vandhaal
Vaazhvu varum vaazhvu vandhaal
Anaivaraiyum vaazhavaipomae

Female : ……………………………

Male : { Uzhavum thozhilum
Ingae naam padaithom
Uravum suvaiyum endrum
Naam valarthom } (2)

Male : Panam padaitha
Manitharai pol
Panju methai naam peruvom

Male & Female : Maadi manai
Veedu katti vaazhnthirupomae

Male & Female : Engalukum
Kaalam varum kaalam vandhaal
Vaazhvu varum vaazhvu vandhaal
Anaivaraiyum vaazhavaipomae

Male & Female : Nenjil
Oru kalangamillai
Sollil oru poiyumillai

Chorus : ………………..

Male : { Vanjamillaa
Vaazhkaiyilae tholviyumillai

Chorus : ……………………. } (2)

Male : Tholviyumillai

Chorus : …………………..

Male & Female : { Engalukum
Kaalam varum kaalam vandhaal
Vaazhvu varum vaazhvu vandhaal
Anaivaraiyum vaazhavaipomae } (2)


Language: Tamil

பெண் : ………………………….
ஆண் : ………………………….

ஆண் & பெண் : { எங்களுக்கும்
காலம் வரும் காலம் வந்தால்
வாழ்வு வரும் வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ
வைப்போமே } (2)

பெண் : ………………………….

பெண் : { வளரும் வளரும்
என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே
பார்த்திருந்தோம் } (2)

பெண் : மலர் முதிா்ந்து
பிஞ்சு வரும் வளர்ந்தவுடன்
காய் கிடைக்கும் காய்களெல்லாம்
கனிந்தவுடன் பழம் பறிப்போமே

ஆண் & பெண் : எங்களுக்கும்
காலம் வரும் காலம் வந்தால்
வாழ்வு வரும் வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ
வைப்போமே

பெண் : ………………………….

ஆண் : { உழவும் தொழிலும்
இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும்
நாம் வளர்த்தோம் } (2)

ஆண் : பணம் படைத்த
மனிதரைப் போல் பஞ்சு
மெத்தை நாம் பெறுவோம்

ஆண் & பெண் : மாடி மனை
வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

ஆண் & பெண் : எங்களுக்கும்
காலம் வரும் காலம் வந்தால்
வாழ்வு வரும் வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ
வைப்போமே

ஆண் & பெண் : நெஞ்சில்
ஒரு களங்கமில்லை சொல்லில்
ஒரு பொய்யுமில்லை

குழு : ……………………

ஆண் : { வஞ்சமில்லா
வாழ்க்கையிலே
தோல்வியுமில்லை

குழு : …………………… } (2)

ஆண் : தோல்வியுமில்லை

குழு : ……………………

ஆண் & பெண் : { எங்களுக்கும்
காலம் வரும் காலம் வந்தால்
வாழ்வு வரும் வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ
வைப்போமே } (2)


Movie/Album name: Pasamalar

Movie Summary Pasamalar is a 1961 Tamil drama about the deep bond between a brother (Rajini) and sister (Radha) who face hardship after losing their parents, only for their devotion to be tested by marriage, family conflict, and tragic circumstances.

Song Credits - Song: Engalukkum Kaalam Varum - Film: Pasamalar - Year: 1961 - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style - Tamil film song / dramatic duet - Melodic, optimistic tune with a hopeful, uplifting tone - Rooted in the Tamil film music style of the early 1960s

Raga Details - Not reliably documented

Key Artists Involved - Sivaji Ganesan - Savitri - T. M. Soundararajan - P. Susheela - Kannadasan - Viswanathan–Ramamoorthy - A. Bhimsingh (director)

Awards & Recognition - Not reliably documented for this song specifically

Scene Context - Appears in a hopeful passage of the film, expressing the belief that better days will come for the struggling siblings.


Artists